ஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

ஆ,முத்துராமலிங்கம்



அந்தக் கட்டிடம் முழுவதும்

ஆட்கள் நிரம்பி இருந்தனர்.

முதலில் வரிசையில் நின்றவர்கள்

பின் கலையத் துவங்கி

சிதைந்தனர்.

அருகில் நின்றிருந்த மரத்தின்

நிழல் பத்தவில்லை.

வெயிலின் பரந்த மடியில்தான்

இடம் கிடைத்தது.

பறவைகளின் எச்சம் விழுமெனவும்

அச்சம் கொண்டிருந்தது.

கையொன்று உடைந்த நிலையில்

அமர்ந்திருந்த பிள்ளையார் மீது

சீரான வரிசையில் தன் இரையை

சுமந்தபடி ஊர்ந்துக் கொண்டிருந்தது

எறும்பு கூட்டம்.

அதை யாரும் கவனித்திரவில்லை.

பிள்ளையாரின் கையை பற்றி மட்டும்

இரண்டு பேர் பேசிக் கொண்டனர்.


சிறிது நேரம் கழித்து

வெளியில் வரும் வாகனச் சப்தம்

கேட்டு மீண்டும் வரிசையை தொடர

முன்டிக் கொண்டனர்

வரிசையின் கண்ணி அற்றுப்

போய்விட்ட நிலையில்

சுயநல நகங்கள் நீண்டு

சட்டை கிழித்தது.

நெரிசல் வழுவடைந்து

சிலருக்கு காயமும் ஒரு முதியவர்

உயிரும் போயிருந்தது.

காவல் துறையும் ஆம்புலன்சும்

வந்து அப்புரப்படுத்திய பின்

கூட்டம் கலைய துவங்கியது

கடைசி வரை

அவர்கள் காத்திருந்த அறை

பூட்டியேக் கிடந்தது.


அன்புடன்…
ஆ,முத்துராமலிங்கம்
சாலிகிராமம்.
a.muthuramalingam5@gmail.com

Series Navigation

ஆ,முத்துராமலிங்கம்

ஆ,முத்துராமலிங்கம்