என் காப்டன் !

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா



Fig. 1
Abraham Lincoln Statue

ஓ காப்டன் ! என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !
வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !
ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !
ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !
கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்கிறார்
காப்டன் மரித்துப் போய் விழுந்து !

ஓ காப்டன் ! என் காப்டன் !
எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காக !
சங்க நாதம் முழங்கும் உனக்காக !
தோரணம், மலர் வளையம் உனக்காக !
காத்திருக்கும் திரள் கடற் கரையில் !
அழைப்பது மாந்தர் உன்னைத் தான் !
ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
உன் தலைக் கடியில் என் கைகள் !
இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !
கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
சில்லிட்டுக் கிடக்கிறாய் செத்த உடலாய் !

மௌனமாகி விட்டார் என் காப்டன் !
வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடல் !
பிதா என் கைத் தொடுகை உணர வில்லை !
இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
பாதுகாப்பு நங்கூரம் கப்பலுக்கு ! பயணம் முடிந்தது !
பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !
கொண்டாடும் கடற்கறை ! ஆலய மணி ஓசை !
தடுமாற்றம் துக்கம் என் கப்பல் தளத்தில் !
சில்லிட்டு விழுந்து கிடக்கிறார் என் காப்டன்
செத்த உடலாய்க் கப்பல் மடியில் !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 27, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா