இத்தனையும்…

This entry is part of 30 in the series 20090423_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


எப்படியும்
தெறித்து விழும்

இரண்டொரு
நீர்த்துளிகள்.

இடித்துக்கொள்ள
நேரும்

எதிர்வரும்
ஒருவரிடம்.

சறுக்கி விழ
வைக்கும்

சிறிதொரு
நீர்த்தேக்கம்.

அடக்க முடியா
நேரங்களில்

ஆள் நிறைந்து
காணும் அவலம்.

இத்தனையும் கொண்ட
பொதுக் கழிப்பிடங்கள்

இலவசமா என்றால்
அதுவும் இல்லை.


Series Navigation