கவிதை இதழ்

This entry is part of 30 in the series 20090423_Issue

ஒளியவன்——————

நீ பறித்தால்
பூ இறப்பதில்லை
உயிர் பெறுகிறது.

நிலவிலும்
பூ பூக்குமென கண்டேன்,
உன் கூந்தலில் ரோஜா.

உன் கூந்தல் ரோஜா
உலகிலேயே
அழகான இடத்தில்
இருப்பதாய் புளங்காகிதமடைகிறது!

உனைப் பிரிந்த பின்
சிவலோகம் செல்கிறதாம் பூ,
நக்கீரன் கூற்று தவறென சொல்ல…

ரோஜா இரவில்
பூப்பதில்லை,
நீ இரவில் பூ வைப்பதில்லையாமே!

உன் தலைப் பூவிற்கு வந்த
வண்டுக்கு தலை சுற்றியது
இதில் எது ரோஜா இதழென்று?!

பகலில் தான்
நிலவைப் பார்க்கிறது
உன் வீட்டு ரோஜா.

விடுமுறையில்லா வேலை
வேண்டுமாம் உன் *தலை*மையகத்தில்…
பூக்கள் போராடுகின்றன.

மலர்கள் கண்காட்சிக்குச்
சென்றாய் – அவைகள்
மலர் கண்காட்சி கண்டன!

உன் தலைப்பூ சொன்னது
ஏன் கவிதைக்கு மேலே
தலைப்பு எழுதுகிறார்களென்று.

தேநீர் அருந்திக் கொண்டு
மாத இதழ் வாசித்தாய் – கோப்பை
மாது இதழ் புசித்தது.


தோழமையுடன்,
பாஸ்கர்.அ

Series Navigation