முகமூடி

This entry is part of 32 in the series 20090305_Issue

பா.அ.சிவம்


பலவிதமான
முகமூடிகளைச் செய்து
வைத்துக் கொள்ள
நேர்கிறது…

வேலைக்குச்
செல்லும்போது…

நண்பர்களைச்
சந்திக்கும்போது…

திடீரென
உறவினர்களை
எதிர்கொள்ளும்போது…

ஒவ்வொரு வகையினருக்கும்
வடிவமைத்துக் கொள்கிறேன்
பல முகமூடிகளை…

ஒப்பனை செய்யப்படாத
இயற்கை அசல்
முகத்தை
எவரும் ஏற்பதில்லை….

முகம் நமதெனினும்
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப
வீசுகின்றனர்
சொற்களை…

முகமூடிகளை
வைப்பதற்கென்று
ஓர் அலமாரியை
விரைவில்
வாங்க வேண்டும்…

அந்த அலமாரிக்கு
பெயரிடலாம் என்றால்
நண்பர்களின் பெயர்கள்தான்
நினைவுக்கு வருகின்றன…

ஆமாம்…
நண்பர்களுக்கும்
முகமூடிகளுக்கும்
என்ன சம்பந்தம் ?


Series Navigation