கவிதா நோர்வே
அன்பு நண்ப,
சக தோழர்க்கு எழுதி எழுதி
சொற்கள் தீர்ந்த கணத்தில்
நினைவில் வருகிறாய் நீ.
நலமா?
சொல்லமுடியாத வலிகளும்
அலறியும் கேட்கப்படாத கத்தல்களும்
எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்
மீண்டும் என் சேகரிப்புக்கே வருகிறது
மொய்த்துக்கிடக்கும்
அலறல்களின் அடியில்
எஞ்சிக் கிடக்கும்
என் உயிரின் மிச்சத்திற்கு
இன்று கடைசிநாளாய் இருக்கலாம்
இன்றே
என்னைச் சுமந்த மனிதர்களும்
என் சொந்த மண்ணும் சேர்ந்தே
என்னைத் தூக்கிலிடலாம்
நெருக்கி வரும்
மனித படலத்தின்
இரச்சல் தாண்டி
என் அலறல் கேட்கிறதா?
மதுரை அல்ல
வெறும் தீக்குச்சி கூட
கண்களால் பற்றவைக்க முடியாதென்று
தெரிந்த பின்னும் சிலை வைக்கும்
மனிதர்கள் போலும்
பாலை மணலில் விதை போட்டு
கனியும் எனக் காத்திருக்கும்
மனிதர்கள் போலும்…
நானும் கடவுள் பற்றிக்
கத்திக் கத்தி
காலம் கடந்து விட்டேன்
மண் புசிக்கும் மனித குவியல்களுக்குக்
கடவுள்களே காரணி என்று கூவி
இன்று மௌனியாகிவிட்டேன்.
மனித கபாலங்களை
அக்ரோஷத்தோடு சுமக்கும்
உன்னிடம் தஞ்சம் அடையும்
என் இன மக்கள்
உன் சுடுகாட்டிலேயே
உன்னைத் தூக்கிலிடும்
சிவராத்திரிக்கு
நான் கண் விழிக்கும்
நாள் வரும்
உயிர்த்தெழுந்தவனே உன்னை
ரத்தம் சிந்தாமல்
முள்முடி சூடாமல்
மீண்டும் சிலுவையேற்ற
மரப்பலகைகள் தயாராகும்
ஆணினத்தின் மதங்களில்
ஆண்வர்க்கம் உச்ச ஆதிக்கம்
செய்யும் மசூதிகள்
புராதண பொருட்களாகும்
என் கனவு யுகத்தில்
இக்கடிதம் உரத்து
வாசிக்கப்படும்
அதுவரை…
இல்லாத என் அப்பனிற்கு
எழுதிய கடிதங்களுடன் சேர்ந்து
இதுவும் ஒன்றாய் கிடக்கட்டும் விடு!
kavithai1@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- எழுத்து எழுதுகிறது
- அந்த கொடிய பகலின் வேதனை
- பூனைகள்…
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- ஏ ஜே நூல் வெளியீடு
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை