எது நாகரிகம்…. ?

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சுஜாதா சோமசுந்தரம்


இன்றைக்கு மனிதனை
பண்பாடு என்ற கோட்டையும்
கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டையும்
மீற வைப்பது எது ?

நாகரிகம் என்ற நாசுக்கான
மயக்க மருந்து அல்லவா ?

நான்கு சுவர்களுக்குள்
சத்த்ம் வராமல் தரும் முத்தத்தை
நானகு பேர் முன்னிலையில்
வெளிச்சம் போட்டு
தருவற்கு பெயர்தான் நாகரிகமா ?

பொது இடத்தில்
தன்னிலை மறந்து
மற்றவர்கள் காண்பதற்காக
கட்டிப் பிடித்து காதல்மொழி
பேசுவதற்கு பெயர்தான் நாகரிகமா ?

உடல் மறைப்பதற்கான
ஆடைப்போய்
ஆண்களின் கண்ணுக்கு விருந்தளிக்க
அங்கங்கள் பளீச்சிட அறைகுறையாக
அணிவதற்கு பெயர்தான் நாகரிகமா ?

கன்னி என்ற பட்டத்திலிருந்து
திருமதி ஆகாமல்
தாய்மை என்ற பதவியை
வகிப்பதற்கு பெயர்தான் நாகரிகமா ?

காலங்கள் பதில் சொல்லட்டும் என்று
காத்திருப்பேமேயானால்….
முன்னோர்கள் காத்து
கடைப்பிடித்தவையெல்லாம்
முடிவுரையாகி விடும்.

சுஷாதா சோமசுந்தரம் , சிங்கப்பூர்.

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்