வலிமிகாதது

This entry is part of 52 in the series 20040513_Issue

கோ.முனியாண்டி – மலேசியா


வியனுலகப் பறவை ஊர்ந்தே

விரித்தோர் வெள்ளை வெளிச்ச

விலையொன்றில்

மிக லாவகமாய் புணருமந்தச்

சிலந்தியின் எச்சத்தில்

மடியும் உயிர் மயிர்கள்

ஒளிந்தாடும் ஒவ்வொரு

தாரகையுள்ளும்

குளிர்ந்தாடும் சந்திரமாட்சி

இடிமின்னல் மழையென

பார்த்தேங்க வைப்பதந்த

விட்ட விதானம்

முலைகள் குலுங்க

சோப்புக் குமிழ் ஏக்கம் கொண்டு

மண் எங்கும் பெண் நடக்கக் காண்கையில்

அடடா! எங்கெங்கும் ஆனந்த லாஹிரிதான்

போடா…. போ….

kabirani@tm.net

Series Navigation