அனந்த்
<>0<> <>0<> <>0<> <>0<> <>0<>
இறைவன்:
பொன்னைக் கேட்பார் பொருள்கேட்பார்
… புவியை ஆளும் வகைகேட்பார்
இன்னும் வாழ்நாள் மிகக்கேட்பார்
… இல்லம் சுற்றம் நலம்கேட்பார்
பன்னிப் பன்னிப் பலகேட்பார்
…பாரில் உள்ளோர் பெறுவதற்கு
என்னைத் தரநான் இருக்கின்றேன்
…ஏனோ கேட்க எவருமில்லை!
நான்:
பொன்னைப் புகழைப் புவியிலுள்ள
… பொருளைக் கேட்கக் காரணம்நீ
தன்னை எனக்குக் காட்டாமல்
… தடுக்கில் ஒளிந்து கொள்வதன்றோ ?
உன்னை உலகில் தேடியபின்
… உணர்ந்தேன் எனக்கு வேண்டியதைச்
சின்னஞ் சிறிய பொருள்களிடைத்
… தேடின் பெறலாம் என்பதைநான்!
அதனால்:
புல்லின் நுனியில் பளபளக்கும்
…புத்தம் புதிய பனிமுத்தே!
பொல்லாக் கதிரோன் உனதெழிலை
…புவியோர் காணப் பருகியபின்
செல்லும் உன்வாழ்(வு) எனநன்கு
… தெரிந்தும் மகிழ்ந்து சிரிக்கும்உன்றன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் -அதை
… நான்பெற எனக்கு வரம்வேண்டும்
மெல்லிய காற்றில் அசைந்தாடும்
… வெண்ணிறப் பூவே! புதுமெருகின்
துல்லியம் தோன்றத் திகழ்ந்துபிறர்
…துயரம் தீர்க்கும் உன்னழகு
நில்லா தோடும் நாளையென்று
… நினையா(து) இன்று நகைக்குமுன்றன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் – அதை
…நான்பெற எனக்கு வரம்வேண்டும்
சொல்லில் அடங்காச் சுவைக்கனியே!
… துன்பம் அகற்றும் சிறுகுழந்தாய்!
எல்லாப் பொருளும் உனதென்ற
… இனிய நினைப்போ(டு) உதடுகளில்
பொல்லாச் சிரிப்பைத் தவழவிடும்
… புதிரே! நாளை நினையாஉன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் – அதை
…நான்பெற எனக்கு வரம்வேண்டும்
இறைவா!
எல்லாம் இருந்தும் இல்லையெனும்
…ஏக்கம் தாங்கும் என்மனத்தில்
இல்லாப் பெரிய நிறைவொன்றை
… எளிய வகையில் காட்டிநிற்கும்
புல்லும் பூவும் குழந்தைகளும்
…போல நானும் இருந்திடஉன்
நல்ஆ சியைநீ நல்கிவிடின்
…நாடேன் உலகில் வேறெதையும்!
<>0<> <>0<> <>0<> <>0<> <>0<>
ananth@mcmaster.ca
- மா ‘வடு ‘
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எம காதகா.. காதலா!
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- காதலுக்கு என்ன விலை ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- கவிதைகள்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- நானோ
- நேற்றின் சேகரம்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- உருகி வழிகிறது உயிர்
- மீண்டும் சந்திப்போம்
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- இது என் நிழலே அல்ல!
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5