என்னை என்ன

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

சத்தி சக்திதாசன்


துள்ளித்திரியும் பருவமதில் செல்லக்கிளியே – என்னெஞ்சம்
துடிக்குமொரு விசையதனை கூட்டினையே

பள்ளி செல்லும் வழியதிலே செல்லக்கிளியே – என்மனதை
பறிகொடுத்துச் செல்லவைத்தாய் தினந்தினமே

சொல்லி முடிக்க முடிவதில்லை செல்லக்கிளியே – என்னுணர்வை
சொல்வதற்கும் வார்த்தையில்லை இன்பத்தமிழில்

அள்ளியுந்தன் அழகதனை செல்லக்கிளியே – கண்களிலே
ஆசையுடன் பருகிடவே ஏங்கிடுவேன்

வள்ளியவள் கரம் பிடிக்க செல்லக்கிளியே – முருகனுக்கு
வழியளித்த விநாயகனை துணை கேட்டேன்

கிள்ளியெந்தன் இதயத்தை செல்லக்கிளியே – கொஞ்சமாய்
கோதை நீ எடுத்தது ஒவ்வோர் தினமே

தள்ளி வைக்கவுன் பெற்றோர் செல்லக்கிளியே – முயன்றபோதும்
தரணியிலே எம்காதல் ஓர்போதும் மாறவில்லை

கள்ளியுந்தன் நினவதனை செல்லக்கிளியே – அழித்திட
கடைசிவரை முடியவில்லை என்மனத்தால்.

சத்தி சக்திதாசன்

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்