யுக சந்தி

This entry is part of 44 in the series 20040115_Issue

அருண்பிரசாத்


குகைகளில் தொங்கும்
வெளவால்களாய்
மூளைமடிப்புக்களில் உறையும் ஞாபகங்கள்.

உதிர்ந்த மலர்களை எடுத்துச் செல்லும்
ஒரு ஆற்றில்,
கூழாங்கற்களாய்
நெஞ்சோடு தங்கும் பிரியங்கள்.

படுகையின் மணல் உருமாற்றங்களுடன்
ஒரு இடைப்பட்ட தருணத்தில்
எதிர்பாராமல் நிகழும்
யுக சந்தி.

everminnal@yahoo.com

Series Navigation