அந்தரங்கம் கடினமானது

This entry is part of 40 in the series 20031225_Issue

மீ.வசந்த்,டென்மார்க்


………………….

நானொரு திறந்த புத்தகம்,
எழுதப்படாத வி ‘யங்கள்
அந்தரங்கமானவை! ?.

இன்றும் கூட
சதைக்கிடையில் இரத்தத்தில்
சிக்கித் தவிக்கலாம்.

கண்களுக்குள் இமைகளுக்குள்
மூச்சடைத்து நிற்கலாம்.

சின்ன இதயத்துள்
அழுத்தத்தில் திணறலாம்.

ஆளில்லா வெற்றிடத்தில்
சத்தமாய் வெடிக்கலாம்.

தனித்திருக்கும் நேரத்தில்
மெளனமாய் கத்தலாம்.

குளியலறை தண்ணீரோடு
கண்ணீராய் கரையலாம்.

இருட்டு ராத்திரியில்
வெளிச்சமாய் நிற்கலாம்,

பஞ்சுத் தலையனையில்
பட்டும் எதிரொலிக்கலாம்.

இ..ழு..த்..து விடும்
பெரும் மூச்சில்,
உதடுகள் செய்யும்
சிறு அசைவில்,
சின்ன அதிர்வுகளாய்
சிதறியும் கூட வெளிவரலாம்.

எல்லாம் இன்றே
சொல்லிவிட ஆசை தான்! ?,

என்னை உனக்கு தெரியாமலிருந்தால்.

Series Navigation