பால்யம்.

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

அருண்பிரசாத்.


கடற்கரையின் ஈரமான
மணற்குன்றுகள் எல்லாம்
உனது மெல்லிய விரல்களை
நினைவுபடுத்துகின்றன.

கட்டி மகிழ்ந்த கோவில்களில்
கோபுரங்களை நான் முடித்தபின்
புறவாயில்களை நீ செதுக்கியபின்
பெருமையுடன் நிமிரும் உனது நெற்றியில்
மண்தோய்ந்த முடி தவழ்ந்த காட்சி விரிகிறது.

ஊதி ஊதி பெரிதாக்க முடிகிறது
பல பலூன்களை.
தொலைந்த பால்யத்தைத்தான்
முழுமையாய் உணரமுடிவதில்லை.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்

பால்யம்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

தமிழ்மணவாளன்


எத்தனை சுகமான காலமது.

செழித்து வளர்ந்த

மருதவெளி போல

பசுமை படர்ந்த நாட்களின்

ஈர நினைவுகள்.

பிரியும் நாளில் ஏதேதோ

பிதற்றித் திரிந்தோம்

வாழ்நாளெல்லாம் தொடரும்

வசந்த ஞாபகம்

வரும் போதெல்லாம்

சந்திப்போமென உறுதிகள் பூண்டோம்.

எங்கே முடிந்தது ?

என்ன நடந்தது ?

யாரும் யாரையும்

பார்த்திடும் சூழல்

வாய்க்கவுமில்லை

பார்க்கவுமில்லை.

கடந்த வாரம் இன்ப நிகழ்வாய்

பால்ய நண்பனை

பார்க்க நேர்ந்தது.

பழைய பேச்சுகள்

கொஞ்சம் பேசினோம்

வயதும் காலமும் சமைத்த இடைவெளி

தொடர்ந்து பேச விஷயமில்லாது

அல்லது

நேரமில்லாது

அண்ணாநகர் பேருந்தில்

அவசரமாய் அவன் செல்ல

மாதவரம் வந்தேன். என்னுடன்

கொசுறாய் கொஞ்சம் பால்யம்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்