காபியிலும் ஆணாதிக்கம்

This entry is part of 55 in the series 20031211_Issue

லலிதா


1915 அல்லது 16ல் காபியும் ரவா உப்புமாவும் தென்னிந்தியாவுக்கு
அறிமுகமானதாகத்தெரிகிறது. என் தாயார் அதற்கான பாட்டுக்களைப் பாடுவார்.

உப்புமாவைக் கிண்டிப் பாரடி அடி {ரவா உப்புமாவை)

ஒய்யாரமான பெண்ணே உல்லாசமான கண்ணே(உப்பு)

ஆறுமணிக்குள்ளாக அழகு மஞ்சள் குளித்து
அடுப்பை மூட்டிவைத்து வாணாயை எடுத்துவைத்து(உப்பு)

கடுகு பச்சைமிளகாய் ,காயம் கறிவேப்பிலை
இஞ்சி எலுமிச்சங்காய் ஈர வெங்காயத்துடனே (உப்பு)

ஒருபடி ஜலம் வைத்து ஒருபிடி உப்பு போட்டு
ஒருபடி ரவா போட்டு ஒருசேர் நெய் விட்டு (உப்பு)

தலைவாழை எலை போட்டு தீர்த்தம் எடுத்து வைத்து
வெண்ணை உருட்டி வைத்து வெல்லம் நொறுக்கி வைத்து (உப்பு}

காபி
______
அடி கருப்புப் பொண்ணே கண்ணாட்டியே
காப்பித்தண்ணியைப் போடடி
பச்சைப் பொண்ணே பங்கஜமே
பாலைவிட்டுக் கலவடி
செவப்புப்பொண்ணே செம்பகமே
சீனி ரொம்பப்போடடி
நீலப்பொண்ணே நிர்த்தனமே
நேர வந்து குடுடி
மஞ்சப்பொண்ணே மரகதமே
மணையைஎடுத்துப்போடடி
வெள்ளைப் பொண்ணே விஜயவல்லி
வேறே பானம் ஏனடி

இதென்ன அநியாயம் ? ஒருவன் காபி குடிக்க இத்தனை பெண்களா ?

லலிதா
——–
(மாலதி அனுப்பியது)

Series Navigation