கடவுள்கள் சொர்க்கத்தில்…..

This entry is part of 55 in the series 20031211_Issue

இளந்திரையன்


(இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 )

கதவு தட்டும் ஓசை
கண் விரிய விரிய
கணக்கு ஏட்டுடன்
சித்ர குப்தன்

கண்ணா மூச்சி
காட்டும் கணக்கு
கழித்துக் கூட்டி
களைத்துப் போய்

ஏட்டின் இண்டு இடுக்கு
நிரவித் தடவித் தேடியும்
காலக் கணக்கு சரியாக
கண்ட காட்சி பிழையாக

வெறுத்து வெதும்பி
தலை குழம்பி
விண்ணப்பித்தான் இயமனிடம்
கையில் ராஜினாமாக் கடதாசி

அழிக்கும் கடவுளின்
ஆடல் பிழையோ ? – அவனோ
காலைத் தூக்கா கவனமுடன்
கண் விரிய முழித்தபடி

உருத்திரன் கைகாட்ட
பூமிப் பந்தில் புள்ளி
வெடிப்பாய் தொடராய்
நாசி நிரப்பும் மரணப்புகை

கதவு தட்டும் ஓசை
கண் விரியப் பார்த்து
சட்டை கிழித்து
சடை கலைத்து
கடவுள்கள் சொர்க்கத்தில்….
———————————–
Ssathya06@aol.com

Series Navigation