தெரிந்தாலும் சொல்லாதிரு

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

கரு திருவரசு


—————–

1. உருவம் தெரியாமல் ஓசையே இன்றி
அருவமாய் அஃது வரும்
2. பலவித ஓசையில் பைய உரக்க
எழும(து) எவருக்கும் உண்டு
3. அடக்க முயன்றும் அடங்காது பாயும்
அடக்குதல் நன்மையும் அன்று
4. இயல்பாகப் போக்கினால் ஏதுமில்லை! தேய்க்க
முயன்றாலோ கூடும் முடை
5. தென்றல் புயலெனத் தோன்றுவதாம் ஈங்கதுவே
குன்றி வருஞ்சிறிய கூறு
6. கூட்டத்தில் போக்குதல் கூடாதாம்! பாட்டுன்னைக்
கேட்டுவந்தா லல்லவோ கேடு
7. உண்டதன் சாரத்தை ஓசைப் படாமலது
தண்டோராப் போடுவதும் உண்டு
8. பட்டுத் துணியையோர் பாவி கிழிப்பதாய்ச்
சுட்டுவதும் உண்டென்று சொல்
9. வேட்டுகளில் பல்வகை வேட்டுண்டு! நீவெற்று
வேட்டென்று சொல்லுவதே வேட்டு
10. உருவம் இலையெனினும் ஓங்குபெயர் உண்டு
தெரி ந்தாலும் சொல்லா திரு
———
thiruv@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு