தீபாவழி

This entry is part of 42 in the series 20031023_Issue

சத்தி சக்திதாசன்


தீபத்தினால் ஒளி ஏற்றிடுவார்
தீபாவளியாய் ஆக்கிடுவார்
வானத்தை வெளிச்சமாக்கிடுவார்#
வாணவேடிக்கைகள் நடத்திவார்

அரக்கனை அழித்த தினமாம் இது
அன்றே வாழ்க்கை ஆனந்தமாயிற்றாம்
எதனை உலகில் அழித்தால் இன்று
ஏழ்மை என்றொரு அரக்கன் ஒழிவான் ?

புத்தாடைகள் வாங்கும் கூட்டம் ஒன்று
புதுவிடியல் தேடி ஏங்கும் கூட்டம் ஒன்று
ஒருநேரமேனும் உண்ண உணவு கிடைத்தால்
ஒவ்வொருநாளும் பலரின் வாழ்வில் தீபாவளி

தீபங்களை ஏற்றி எங்கும் ஒளியை வளர்ப்போம்
தீராத ஏழ்மையைத் தீர்க்கும் வழியும் சமைப்போம்
நன்றாய் ஆனந்தமாய்க் கொண்டாடிவோம் புவியில்
நால்வரின் வாழ்விலாவது ஓர்நாள் ஒளியேற்றுவோம்

சத்தி சக்திதாசன்

Series Navigation