This entry is in the series 20031023_Issue

விக்ரமாதித்யன்


பேச்சி
கொடை கேட்கிறாள்
பொல்லாத இசக்கி
கொடை கேட்கிறாள்
வண்டிமலைச்சி
கொடை கேட்கிறாள்

முப்புடாதி
கொடை கேட்கிறாள்

மாடத்தி
கொடை கேட்கிறாள்

சுடலி
கொடை கேட்கிறாள்

கொடை கொடுத்தால்தான்
பிரீதியாகி சாந்தம்கொள்ளும்

பிடிகொடுத்தே பேசும்
சிறு பெண் தெய்வங்கள்

கொடை கொடுக்கவில்லையென்றால்
அடித்துத் தின்னப் பார்க்கும் ஆளையே.

***************

Series Navigation