இந்தியர்கள் – 5 கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

மீ.வசந்த்,சாத்தூர்


****

நித்தம்
ஒரு முறை
செத்துவிட தோன்றுமா ?,
மண்ணோடு முழுதாய்
மக்கிவிட பிடிக்குமா ?,
இன்னுமொரு ஜென்மத்தில்
வெறுப்புண்டா ?,
இருக்கும் பிறப்பே
வெறுமையின் தோற்றமா ?,
நகரும் காலம்
நரகத்தின் மாதிரியா ?,
எதிர் காலம்
வெறும் கனவா ?,
தினந்தோறும் செய்திகளில்
கொலையும்,கொள்ளையுமா ?,
அரசியலில் வெறுப்பா ?,
அரசாங்கத்தில் கோமாளிகளா ?,
ஓட்டுப் போட
விருப்பம் இல்லியா ?,
இருப்பது
நாறிப்போன சமூகமா ?,
அதில் நீ
ஊறிப்போன விதையா ?,
………………
இன்னும் எத்தனையோ
வருத்தங்கள் இருந்தும்
உன் விருப்பம்,
அயல் நாட்டு வேலையில்
அமெரிக்க டாலர் சம்பளமா ?
சத்தியமாய்
நீயும்…நானும்
இந்தியர்கள்!!!.

****
கிசு கிசு

கமல் – சிம்ரன்
ஜோதிகா – சூர்யா
த்ரிஸா – சிலம்பரசன்,
………………
கடந்த
நான்கு வருடங்களாய்
நான்
இந்தியாவில் இல்லை.

***

இலவச திட்டங்கள்

இலவசமாய்
வேஸ்டி,சட்டை,
அத்தோடு சத்துணவு!! ?,
பல்பொடி,
பதனிடப்படாத தோல்செருப்பு.
ப்ளீஸ்..அரசே
என்னை
பிச்சைக்காரன் ஆக்காதே.
***
சத்துணவு!! ?
மருத்துவஉதவி தேவை,
தமிழக அரசின்
சத்துணவு!! ? தின்றும்,
எங்கள் குழந்தைகள்
குண்டாவதில்லை! ?.

***
கிராமங்கள்

அன்றும் இன்றும்
அப்படியே கிராமங்கள் ? ?!,
இந்தியாவில்
வரலாற்று சின்னங்கள்
பாதுகாக்கப் படுகின்றன!.

***

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

மீ.வசந்த்,சாத்தூர்.

மீ.வசந்த்,சாத்தூர்.