கவித்துளிகள்(ஹைக்கூ)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

மீ.வசந்த்,சாத்தூர்.


சுயசரிதை

கவிதைக்கு பொய்யழகாம்
இனி
என்னைப்பற்றி எழுதலாம்.

——————————————-

முரண்பாடு

உறக்கத்தில் நான்.
மழை பெய்ததால்
கலைந்தது..,
பசுமையான கனவுகளும்.

——————————————-

எப்படி சாத்தியம் ?

ஆசையின்றி வாழ
அந்த
துறவிக்கும் ஆசையோ!! ?

——————————————–

தெரு விளக்குகள்

நகராட்சிக்கு நன்றி! ?,
எங்கள் தெருக்களில்
செத்து மடிவதில்லை
ஈசல்கள்.

———————————————

தனிமை

அவளும் இங்கென்னோடு
பக்கத்தில் வேண்டுமென்று
யோசித்து …ரசிக்க,
தேவைப்படுகிறது
த..னி..மை.

———————————————-

கவிதை

குப்பை பொறுக்கும்
சிறுவனுக்காய்,
நான்
கவிதை எழுதுவதுண்டு.

———————————————–

காதல் வடு

விட்டு(ப்) பிரிந்தவளே,
பின்னொரு நாள் நடக்கும்
எதிர்பாராத சந்திப்பில்
சிரிக்காமல் இரு.

———————————————–

வரதட்சனை

உனக்கு
காசும் கொடுத்து
பென்னையும் அனுப்ப,
நீ என்ன
விலை மகனா ? ? ?

————————————————-

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

மீ.வசந்த்,சாத்தூர்.

மீ.வசந்த்,சாத்தூர்.