‘மே-தை மாதம் ‘

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

நா.முத்து நிலவன்.


‘எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு,
எட்டுமணி நேரஉறக் கம், – இதைக்
கெட்டமன மூலதன வர்க்கமே தருக ‘வெனக்
கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1

மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்
மெய்சிலிர்த்துக் கையுயர்த்து மே! – தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்தினம் நினைவிலெழும்
மாதமுண்டு தைமாத மே! -2

சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
காற்றிலே உயிர்வளர்த்தோ மே! – புது
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன்கருத்தில்
என்று,தையை மாற்றிடுமாம் மே! -3

‘ரெண்டு ‘காலி லேநடந்து சென்றுநாம் சமர்புரிந்து
வென்றுமீள மேஉணர்த்து மே! – அன்று
குண்டுபோட் டழிக்கவந்த கூட்டமே நடுங்க ரத்தக்
கொடியெடுத்த தையுணர்த்து மே! -4

பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவந்த
படைவியூக மே!தைமாத மே! – இந்த
ஈரெழுத்து நமது நாட்டுப் போரெழுத்து என்றஞானம்
ஈந்தமாதம் ‘மே-தை ‘மாதம் மே! -5
–நா.முத்து நிலவன்

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்