பொங்க லோ பொங்கல்!

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

கவியோகி வேதம்


கதிரவன் சொன்னது;

….நேரில் தெரியும் கடவுள்நான்;

…நிதமும் உழைத்துப் பார்முழுதும்

.கோரும் வரங்கள் தருவோன்யான்;

….குலவும் மக்கள் ஈதறிந்தும்

…போர்வை மூடிக் கண்மூடிப்

…பொழுதில் சிறிதும் எனைப்பாரா

..சோர்வைக் கொஞ்சும் அவர்கட்கும்

..சொன்னேன் பொங்கல் வாழ்த்துகளே!

2) மாடு சொன்னது;

முதுகில், வாலில் தினம்காயம்;

..முனகின் சாட்டைப் பிரம்படிகள்;

எதுநோய் வரினும் உழைக்கணும்நான்;

..யிதமாய்க், கொழுக்கும் உணவுமிலை;

கதறும் குரலைக் கேட்டோர்யார் ?

..கடினம் என் ‘வாழ் வென்றாலும்,

யிதமாய் யிந்நாள் அலங்கரித்தார்;

..யிதனால் சொன்னேன் ‘வாழ்க ‘-என்றே!

3)கவிசொன்னான்;

^^^^^^^^^^^^^^

யியற்கை,மாடு சொல்வதெல்லாம்

…எனக்கே தெரியும்;நுண்ணியன்யான்!

செயற்கை மனிதர் ‘சுகம் ‘கருதிச்

….சிறிய செயல்கள் செய்தாலும்,

அயலாம் வீட்டார்ச் ‘சொல் ‘அஞ்சி

..அன்பாய்ப் பொங்கல் ஒருநாளில்,

அயனாய் அனைத்தும் அணிசெய்வார்!

..அதற்காய் யானும் வாழ்த்து சொன்னேன்!

வாழ்க உழவினம்! வாழ்க யியற்கை!

வாழ்க நம்மினம்! வாழ்க பொங்கலே!

***
$(யோகியார்)12-01-03
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்