நிழல் யுத்தம்

This entry is part of 37 in the series 20030104_Issue

எஸ். வைதேஹி.


அப்பால் நகர்ந்து
போய் விட்டது
நான் நிற்கச்சொன்ன
நிழல்.

முற்றத்தின் ஈரத்தில்
கால்பதித்த தடயம்
உலரும் முன்
நான் நானாய் இல்லாமல்
ஆக்கிவிட்டிருந்தது
படுக்கையறையின் மூலையில்
ஒளிந்துக் கிடக்கும் கனவு.

தரையிறங்கும் எண்ணங்களின்
முன்னும்
பின்னுமாய்
அசைந்து செல்லுகிறது
தவறு செய்யக்
கற்றுக் கொண்ட
என் எதிர் நிழல்.

*

svaidehi@hotmail.com

Series Navigation