சுய ரூபம்

This entry is part of 37 in the series 20030104_Issue

வை. ஈ. மணி


உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி
…. ஒளித்திடும் பகலவன் சுயரூபம்
தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும்
…. தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1)

வாழ்வினில் வந்திடும் இடுக்கண்கள்
…. மமதையை ஓர்கணம் ஒறுத்தியே
ஆழ்கடல் ஒத்திடும் உள்மனதின்
…. அகமதைத் துலக்கிடச் செய்திடுமே (2)

ntcmama@pathcom.com

Series Navigation