சிருஷ்டி

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

ருத்ரா


ஏன் உடைத்தாய்
பெண்ணே
இந்த சிலம்பை ?
உடைந்து
வெடித்து
சிதறி
காலப்பரல்கள்
ஒவ்வொன்றிலும்
நீ..நீ..நீ..
நீயே தான்.

பிரபஞ்சம் தன்
கர்ப்பப் பையை
முதலில் திறந்தபோது
விஞ்ஞானிகள் அதை
‘பிக் பேங்க் ‘ என்றார்கள்.
ஆனால்
அது காதலின்
முதல் ‘லப் டப் ‘.
அவள் இதயம் எனக்குள்
துடிக்கத் துவங்கிவிட்டது.

காதல் எனும்
முதல் ஆணியை
அந்த சுவற்றில் அடித்தது யார் ?
தேவ வசனங்களில்
ரத்தம் பீறிட்டது.
ஆதாமும் ஏவாளுமாய்
பாம்பு-பழத்தின் தோட்டத்தில்
புதைக்கப்பட்டிருந்த
கண்ணிவெடிகளில்
அது சிதறிப்போனது.

சிந்திய சோழிகளில்…
என் ரத்த அணுக்கள்
குறு குறுக்கின்றன.
அண்டமுடியாத
அண்டவெளியாய்….பெண்ணே
நீ எங்கு நிற்கிறாய் ?
கொழுந்து விட்டு எாிகிறது தீ.
அம்பிகாபதி அதை
அமராவதி என்றான்.
லைலாக்களும்
ரோமியோக்களும்
மஜ்னுக்களாய்
ஜூலியட்டுகளாய்
கூடு விட்டு
கூடு பாய்ந்தார்கள்.
சேதுக்களும்
அபயகுஜலாம்பாக்களும்
நரம்புகளைப் பிய்த்து
சங்கிலிகளாக்கி
பிணைத்துக்கொண்டார்கள்.

ருசியின் வெறியாய்
வெறி பிடித்த ருசியாய்
வறுத்த கோழியாய்
இங்கு
காதல் ..காதல்…காதல்.
கோழி ருசியாய் இருந்தால்
கோழியைத் தின்னு.
குமாி ருசியாய் இருந்தால்
குமாியைத் தின்னு.

‘அகத்திணை ‘ பாடக்கிளம்பி
அகத்தினை குதறிய
இந்த கோரைப்பற்கள்
சங்கத்தமிழ் தேடியதில்..ஒரு
சதைத்தமிழ் தான்
கிடைத்தது.

‘இந்தக் குளத்தில்
இப்படிகல்லெறிந்தது யார் ? ‘
சினிமாக் கிளிஞ்சல்களை
உடைத்துப் பார்த்து
உடைத்துப் பார்த்து
பொறுக்கிக் கொண்டது
வைரமுத்துக்களை மட்டும் அல்ல..
இந்த ‘வைரஸ் வித்துகளையும் ‘ தான்.

***

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா