குழவிக் கூடு குவலயம்..

This entry is part of 26 in the series 20020210_Issue

வ.ந.கிாிதரன்


விடிவை முடிவும் தொடர
இரவைப் பகலும் தொடர
உள்ளி ழுத்து வெளியில்
தள்ளு மொருவிதி யில்தான்
முரண்பட் டியற்கை யுண்டோ ?
அவனும் அவளும் அதுவும்
இவண்கண் இருப்ப தெல்லாம்
இதனால் தானொ ? தானோ ?
முரண்கொண் டென்னை யேனோ
உருவாக் கினாய் ? உருவாக்
கினாய் ? குணத்தைப் பற்பல
கூறுக ளாக்கி உலவ விட்டாய்.
இருப்பினைப் புாித லென்ன
இலேசா ? இயக்கம் அறித
லென்ன உலகம் புாித
லென்ன அறியாச் சீவனென
தொடரும் வாழ்விதில் தான்நான்
தொடர்ந்து செல்வேன் அறிவுத்
தேடல் கொண்டே. கொண்டே.
வரையும் நதியும் கடலும்
மலரும் மதியும் சுடரும்
வெளியும் வளியும் புள்ளும்
புல்லும் இரவும் விண்ணும்
கவியும் கங்குற் பொழுதும்
அந்திக் கதிரும் அசையும்
உயிரும் இங்கு என்னை
இளக்கி வைக்கும் ஆயின்
தொடரும் போரும் அழிவும்
இடரும் இயற்கை ஒழிவும்
குறையும் உயிாின அளவும்
குழப்பி யெனையிங் காட்டி
வைத்தே வருந்த வைக்கு
மானால் கள்ள மற்ற
வெள்ளை யுள்ள வெந்தன்
குழவியின் சிாிப்பில் கூறும்
பொருளில் அன்பின் சிறப்பை
அறிந்தே வியந்து போகின்றேன்.
குழவிக் கூடே குவலயம்
கண்டு தெளிவு மடைகின்றேன்.
அர்த்த மற்ற விருப்பிலுமொரு
அர்த்தம் கண்டு வியக்கின்றேன்.
கவலை மறந்து கிடக்கின்றேன்.
உன்னைப் போலிங்கு இருந்து
இருப்போ மென்றால் துயர்தான்
ஏதோ ? இடர்தான் ஏதோ ?

Series Navigation