சேவியர்.
ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்…
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்…
யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்…
முரணாய் பேசி முரண்டு பிடிப்பாய்,
புாிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.
கால்வலிக்கிறது என்பாய்…
கண்ணில் தூசி என்பாய்…
புதிதாய் வாங்கிய மாலையைப் பார் என்பாய்…
நமக்கிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க
நீ இடும் அறிக்கைகள் இவையென்றறிந்து…
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்…
இப்போதும்
மங்கலாய்க் கசியும் நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை…
‘மாறிவிட்டேன் ‘ என்ற ஒற்றைச்சொல்லில் என்னை
தூக்கிலிடும் முன், என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.
கேட்டாலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ – எனும் சொல்லைத் தவிர.
- அகமுடையவனே
- ஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்
- தேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்
- இட்லி மிளகாய்ப்பொடி
- கோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)
- இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை
- பெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..
- பூஜ்யநிலம்
- மனசாட்சி
- பூப்பூ (பு)
- அவர்களும், நானும்
- உயிரோடு உரசாதே
- பழைய இலைகள்…
- இன்னொரு வகை இரத்தம்
- பாதச் சுவடுகள்
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- ஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001
- நமது அகில உலகக் கலாசார சமுதாயம்
- அறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)
- சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து
- மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது ?
- இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை
- மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்
- சேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்
- சமூகப்பணி