அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

செந்தில்


அமெரிக்க இந்திய உறவுகள் பல தளங்களில்-பொருளாதார, வணிக, கல்வி போன்ற தளங்களில்- தொடரும் நிலையில், ஆசிய, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளான குறிப்பாக இலங்கை, ஈரான், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா மற்றும் அரபு நாடுகளுடனான உறவு குறித்து, இந்த இரு இரு நாடுகளின் வெளியுறவு கொள்கைகள், சிலவற்றில் வேறுபடவும், மற்ற சிலவற்றில் ஒன்றுபடவும் நேரிடலாம். இந்தியாவும், அமெரிக்காவும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் குறித்த கொள்கைகளை ஒரு குறுகிய வியாபார, ராணுவ அடிப்படைகளில் அமைந்த புரிந்துணர்வின் அடிப்படைகளில் மட்டுமே அமைக்குமெனில், அமெரிக்க-இந்திய நாடுகளின் உறவுகளை பலவித சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஆட்படுவதோடு, இந்தியாவின் உள்நாட்டு அரசியல், பொருளாதார தளங்களில் பலவித சிக்கல்களை உருவாக்கலாம்.

அமெரிக்காவின் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள் குறித்த கொள்கைகள் மனித உரிமைகள், ஜனநாயகம், மனிதவள மேம்பாடு, அமைதி, சமத்துவம், வளர்ச்சி போன்ற பலமான தளங்களின் மேல் கட்டப்படுமெனில், இந்த இரு நாடுகளின் உறவுகள் பலமாவதோடு, இந்த பிராந்தியத்தில் உள்ள எல்லா நாடுகளின் உயர்வுக்கும், அமைதிக்கும், வழிவகுக்கும்.

முதலாவதாக இலங்கை குறித்து: இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சந்தர்ப்பவாத குழப்பங்களாலும், குழப்பவாத அதிகாரிகளினாலும் (இவர்களது கொள்கை பேரினவாத நோக்கில் அமைந்தது என்று சொன்னால் மிகையாது), இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை தோல்வியடைந்தடோடு, தமிழ் இனப்படுகொலைக்கும் வழிவகுத்து, இந்தியாவின் பாதுக்காப்பிற்க்கு பாதகம் ஏற்படும் வகையில் சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியாவின் எல்லைக்குள் இருந்தே செயல்படும் வகையில் செய்துவிட்டது. இந்திய பெருங்கடலில் சீனாவையும், பாகிஸ்தானையும் நிலைப்படுத்த இந்திய இலங்கை கொள்கை வழி செய்ததோடு, அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகளையும் இந்திய பெருங்கடலில் மட்டு படுத்த செய்துவிட்டது. 50 வருடங்களாக ஜனநாயக, மனித உரிமைகளுக்கும், உயிருக்கும், உடைமைகளுக்கும் போராடி வரும் இலங்கை ஈழ தமிழர் உரிமைகளை மீட்டெடுத்து, அவர்களது தேசிய-தனிநாடு அமைய வழிவகுத்து, சிங்கள பேரினவாத அரசை கட்டுக்குள் கொண்டு வரச்செய்யாமல் (Sri Lanka should be Demilitarized), இலங்கையை பாகிஸ்தானை போன்று ஒரு ராணுவ அரசாக மாற்றியிருக்கிறது இந்தியா. அதுவும், சீன, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆயுத உதவியுடன்; இலங்கைக்கு எந்த பக்கத்தில் இருந்தும், எந்த விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத நிலையில், ஆயுதங்கள் வழங்கி இலங்கையை ஒரு ராணுவ நாடாக வளர விட்டிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்.

அடுத்து ஈரான் குறித்து: அமெரிக்க தொலைக்காட்சிகளிலும், தூதுவர்களாலும் அடிக்கடி சொல்லபடும் செய்தி: ஈரான் ஒரு ரோஃக் (பயங்கரவாத) தேசம் என்பது. இந்த நிலைப்பாடு, அமெரிக்க-இஸ்ரேல் உறவினாலும், அமெரிக்க-அரேபிய உறவுகளை பலபடுத்துவதற்க்காகவும், அமெரிக்காவை சீனாவின் எல்லை நாடுகளில் கொண்டு நிறுத்த செய்வதற்க்க்கான முயற்சிகளின் தொடர்ச்சிதான் என பல காரணங்கள் உண்டு. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை ஈரான் ஒரு ஜனநாயக இஸ்லாமிய குடியரசு. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஈரானின் கனிம வளங்கள் பலவிதங்களில் உதவக்கூடும். மனித உரிமைகள், ஜன நாயகம் என்ற தளத்தில் பாகிஸ்தான் மற்றும் எந்த ஒரு அரபு-இஸ்லாமிய நாட்டினை விடவும் ஈரான் சிறந்து விளங்குவதாகவே தெரிகிறது. ஆதலால், ஈரானை, (ஈராக்கினை குற்றம் சாட்டியது போல) பயங்கரவாத அரசு என்று முத்திரை குத்துவது சீனாவையும், ரஷ்யாவின் ராணுவ பலத்தினையும் இந்த பிராந்தியத்தில் அதிக படுத்துவதோடு, ஈரானையும் ஒரு அணு ஆயுத நாடாக விரைவில் மாற்றிவிட கூடும். அமெரிக்காவின் கட்டுக்குள் வந்துவிட்ட அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை மட்டும் நம்பி இந்தியா எப்படி வளர முடியும்? ஒரு பில்லியனுக்கும் (120 கோடி) மேலான மக்கள் தொகையை கொண்ட நாடு, எப்படி அதன் எரிசக்தி தேவைகளுக்கு அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியும்?

அடுத்து திபெத் குறித்து: அமெரிக்கா சீனாவுடன் உறவுகளை வளர்த்து கொண்டவுடன், சிறிய அரசுகளுக்கு எல்லாம் மனித உரிமை குறித்து பாடம் எடுக்கும் அமெரிக்க அரசின் கொள்கை, சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பு குறித்து மௌனம் சாதித்தே வருகிறது. திபெத் சீனாவின் அங்கமாகயிடினும் (சீனாவின் கொள்கை), ஒரு பகுதியாகி விட்டிருப்பினும் கூட, திபெத்திய-தேசிய-மொழி-கலாச்சார உரிமைகளை பாதுகாப்பது உலக மக்களின் கடமையாகும். முதளாளித்துவம் ஆனாலும் சரி, ஜனனாயகம் ஆனாலும் சரி, கம்யூனிசமானாலும் சரி, எந்த ஒரு மொழி-இன கலாச்சார மக்களின் உரிமைகளை பாதுகாப்பது எல்லா நாடுகளின் கடமையாகும். இது அமெரிக்காவில் உள்ள செவ்விந்திய மக்களின் உரிமைகளுக்கும் இது பொருந்தும். சீனாவின் திபெத்திய நடவடிக்கைகளை சுட்டி காட்டுவது, பொருளாதார உறவுகளை மட்டுபடுத்துவது, தடைகள் விதிப்பது, போன்ற கொள்கைகள் ஒரு நாட்டினை(சீனாவினை) நெறிபடுத்தும். எல்லோரும் அறிந்ததே, ராணுவ நடவடிக்கையின் மூலம் திபெத்தை மீட்க முடியாது என்று. ஆப்கானிஸ்தானை மீட்க ஆயுதம் வழங்கி உதவி செய்தது போன்ற கொள்கைகளும் திபெத்தில் வெற்றி பெறாது. ஆனால், எல்லா சர்வ தேச அரங்குகளிலும், சீனாவின் திபெத்திய கொள்கை குறித்து பிரச்ச்சனைகள் எழுப்புவது, தடைகள் விதிப்பது, சீனாவை நெறிபடுத்தும். ஒன்று புரியவில்லை- உலக மக்கள் அனைவருக்கும்- கூயுபாவுக்கு (cuba) பொருளாதார தடைகள் விதித்திருக்கும் அமெரிக்கா, சீனாவிற்க்கு ஏன் தடைகள் விதிக்கவில்லை என்பது?

ஆகவே, இந்திய அமெரிக்க உறவுகள் மனித உரிமைகள், அமைதி, எல்லோருக்கும் வளர்ச்சி, சமத்துவம் போன்ற பலமான தளங்களில் அமைவது உலகுக்கு வழிகாட்டும்!

Series Navigation

செந்தில்

செந்தில்