கோமாளி
மரத்தின் நிழல் வெயிலுக்கு சற்று ஆற்றுப் படுத்தும். உங்களையும் என்னையும் தொடர்ந்து வரும நிழல் யாருக்காவது பயன்படுமா? அந்த நிழல் சந்தர்ப்பவாத நிழல். காலையிலும் மாலையில் நன்றாகத் தெரியும் நிழல் மதியத்தில் காலடியில் ஒளிந்து கொள்ளும். இந்த மனிதனின் நிழலுக்கு ஜன் நாயகத்திற்கு ஒற்றுமை உண்டு. அது என்ன? மனித நிழலே சந்தர்ப்பவாதியான போது மனிதன் மட்டும் என்ன மஹாத்மாவாகவா இருக்கப்போகிறான். விரும்பினாலும் விரும்பாவிட்டால் ஜன நாயகம் மனிதன் கூடவே வரும் நிழலாய் அவன் வாழ்க்கையில் விளையாடும் விபரீதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்திய இரயில்வே இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். 16 இலட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். 2005 நிதிநிலை அறிக்கையின் படி, இந்திய இரயில்வே 46,635 கோடி ரூபாய்களை வருவாயாகப் பெற்றுள்ளது. மக்களின் தோழனாக, அவர்களின் பயணத்திற்காக செயல்படும் இரயில்வே துறையில் ஊனமுற்றவர்களுக்காகவென்று டிஸேபில்ட் கோச்சு ஒன்றினை ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் இரயிலிலும் இணைத்திருப்பார்கள். அந்தக் கோச்சில் நடைபெறும் கொடுமையினை விளக்குவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சக மனிதனுக்கு கிடைத்திருக்கும் வசதிகளை மற்றவர்கள் அராஜகமாக பிடுங்கி அனுபவிப்பது என்பது கொலைக் குற்றத்துக்கு நிகரான செயல்.
எனது சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் எனக்கு இருக்கிறது. பிறந்ததிலிருந்து மாமா வீட்டில் வளர்ந்த படியால் அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உறவுக்காரர் ஒருவர் நான் இறந்து விட்டதாக விஏஓவின் சான்றிதழ் வாங்கி சொத்தை அவர் பெயருக்கு மாற்றி விட்டார். இதற்கு விஏஓவும் உடந்தை. இதை அறிந்த அம்மா சமாபந்திக்கு அழைத்துச் சென்றார். ஆர்ஐ எங்களது புகாரைப் படித்து மிரண்டு விட்டார். விஏஓவினை அழைத்து விபரம் கேட்க ஊரில் நான்கு பேர் சொன்னார்கள் என்று விட்டேத்தியாகச் சொன்னார். நம்ப மாட்டீர்கள். கோபத்துடன் எழுந்த ஆர்ஐ செருப்பைக் கழட்டி விஏஓவினை அடி பின்னி எடுத்து விட்டார். சுற்றி நின்றவர்கள் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார்கள். நீயெல்லாம் ஒரு மனிதனாடா என்று கோபத்துடன் கேட்டு லெட்ஜரில் என் பெயரை மாற்றி எழுதி கையெழுத்து இட்டு முன்பு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்தார். இதே போன்ற அவலத்தை இந்திய ரயில்வே துறையின் டிடிஆரும், ரயில்வே போலீஸாரும் இன்றளவும் இணைந்து
வாழவும் வழியின்றி சாகவும் முடியாமல் பூமிக்கும் பாரமாய் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கும் ஊனமுற்றவர்களை புழுவிலும் கேவலமாக மதித்து மனம் கூசாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் இவர்களை அடிப்பது ???? அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கீழே படியுங்கள்.
வயதான மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒவ்வொரு டிரெயினிலும் டிசேபில்ட் கோச்சு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இவர்கள் பாத்ரூம் செல்லவும், வசதியாக இயங்கவும் வசதிகள் இருக்கும். கூட்டம் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு இடம் கொடுத்த பிறகு மீதி இடங்களை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இவர்கள் செய்வது என்ன ?
சென்னையிலிருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் டிஸேபில்ட் கோச்சில் யாராவது சற்று எட்டிப்பாருங்கள் தெரியும் அங்கு நடக்கும் அவலங்களை. டிடிஆரும், இரயில்வே பாதுகாப்பு போலீஸாரும் சேர்ந்து கொண்டு ஊனமுற்றோருக்கான கோச்சுகளின் டிக்கெட்டுகளை மற்றவர்களுக்கு விற்கின்றனர். முன்பே பதிவு செய்து வைத்த ஊனமுற்றவர்கள் கோச்சில் ஏறினால் அவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை. டிக்கெட்டை காட்டி இடம் வேண்டுமென்று கேட்டால் மற்றவர்கள் நாங்களும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருப்பதாக சொல்லி இடம் தர மறுக்கின்றார்கள். டிடிஆரிடம் புகார் சொன்னால் போடா வேலையைப் பார்த்துக் கொண்டு மிரட்டுகிறார் டிடிஆர். புகார் சொன்ன என் நண்பரை அடிக்க வந்திருக்கிறார் ஒரு டிடிஆர். அதற்கு இரயில்வே போலீஸார் வேறு துணை போனார்களாம். இந்த போலீஸாரை நம்பி மக்கள் பயணம் செய்கிறார்கள். வேடிக்கையாய் இல்லை.
டிடிஆருக்கு காசு சம்பாதித்துக் கொடுக்கவும் இரயில்வேயில் வேலை செய்வோரும் இலவசமாகவும் வசதியாகவும் செல்ல அந்த கோச்சினைத் தான் பயன் படுத்துகிறார்கள்.
இந்தத் திருட்டுக் கூட்டத்தினை பற்றியோ, இரயில்வே துறையில் நடந்து வரும் இந்த அராஜகப் போக்கினையோ கம்ப்ளைண்ட் செய்தால் என்னவென்று கேட்கக் கூட ஆட்கள் இன்றி இருப்பது இந்திய இரயில்வே துறையின் கேடு கெட்ட நிர்வாகத்தினைக் குறிக்கிறது. புகார் செய்ய தொலைபேசி எண் ஒன்றினை இரயில்வே துறை அறிவித்து இருக்கிறது. யாராவது புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்களா என்றால் இல்லை. ஒரு புண்ணாக்கும் கிடையாது.
திருடன் செய்யும் கொலை திருடும் போது யாராவது பார்த்து விட்டால் தப்பிக்க கொலை செய்வான். ரவுடி கொலையினைத் தொழிலாகச் செய்பவன். யாருக்கும் எந்தப் பாவமும் செய்யாத செய்ய்யும் இயலாத ஊனமுற்றவர்களை உயிர்வதை செய்து கொல்வது என்பது மேற்படி செயலை விடக் கேவலமான செயல்தானே. இந்திய இரயில்வேத் துறை கொலைகாரர்களின் கூடம். எம கிங்கரர்கள் உலாவும் எமலோகம் இந்திய இரயில்வேத் துறை. இப்படிப்பட்ட கொலைகார துறை லாபத்தில் இயங்குவது என்று சொல்லி பெருமை அடித்துக் கொள்வது கொலைகாரன் ஒருவன் கொலை செய்து சொத்து சேர்ப்பது போன்ற அவலமான காரியத்துக்கு ஒப்பானதாகும்.
இரயில்வேத் துறை அமைச்சர் இவற்றையெல்லாம் கவனிக்காமல் பல்கலைக் கழகங்களில் உரையாற்றச் செல்கிறார். மனித உரிமை அமைப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. மெஷின்கன்னால் கண்ணில் படுவோரை எல்லாம் ஈவு இரக்கம் காட்டாமல் சுட்டுத்தள்ளும் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் மனித உரிமை அமைப்புகள் டிஸேபில்ட் கோச்சில் ஊனமுற்றவர்களை வதைக்கும் டிடிஆரையும், இரயில்வே போலீஸாரையும் கண்டு கொள்ளாமல் விடுவது மனித உரிமை அமைப்புகளின் கேலிக்குரிய செயல்பாட்டினைச் சுட்டுகிறது.
யார் கேட்பது ? எதிர்த்துக் கேள்வி கேட்டால் அடிக்க வரும் டிடிஆரை யார் தடுப்பது? தடுக்கக்கூடிய நிலையில் இருக்கும் இரயில்வே போலீஸாரும் சேர்ந்து அடிக்க வருவதை என்னவென்று சொல்வது ?? புகார் செய்தால் கேட்க நாதியில்லை. யாரும் எதுவும் செய்யவில்லை எனில் என்ன செய்வது ? என்ன வழி ?
பணக்காரனும், ஏழையும் ஓட்டுப் போட்டுத்தான் அரசியல்வாதி ஜெயிக்கிறான். அந்த அரசியல்வாதியினால் தான் நாட்டு நிர்வாகம் நடக்கிறது. மாற்றுகிறோம் வாய்ப்புக் கொடுங்கள் என்று கூவிக் கூவி ஓட்டி வாங்கிய அரசியல்வாதி பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு கல்வி முறை, ஏழைக்கு ஒரு கல்வி முறை என்ற வழிமுறைகளை உருவாக்குகிறான்.
அது என்ன பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்கிறீர்களா ? பொதுமக்கள் பெருவாரியாக பயன்படுத்தும் பெட்ரோலின் விலையினை உடனடியாக குறைத்தானா நாட்டை ஆளும் அரசியல்வாதி. கச்சா எண்ணை விலை குறைந்ததும் உடனடியாக விமானத்திற்கான எரிபொருள் விலையினை அல்லவா குறைத்தான். விமானத்தில் குடியானவனும், ஏழையுமா பயணம் செய்கிறார்கள். பணக்கார்ர்களுக்கு மட்டுமே பயன்படும் சட்ட்த்தை போட்டவன் ஏழைகளின் ஓட்டையுமல்லவா பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு வந்தான்.
உங்களுக்கும் உங்களது சந்த்திகளுக்கும் கிடைக்ககூடிய வசதிகளையும், வாய்ப்புக்களையும் அரசியல்வாதிகளின் குடும்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அவனுக்கு குண்டி கழுவி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அரசியல்வாதி விடும் குசுவில் கூட ம்ணமிருக்கிறது என்று ஒத்து பாடிக்கொண்டிருக்கின்றீர்கள்.
ஜன நாயக நாட்டில் அரசியல்வாதிகளால் அடுக்கடுக்காய் செய்யப்படும் குற்றங்களில் பலியாகி விடுவது நமது வாழ்க்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாய் மாறி அவர்களுக்கு சிரைத்து விட்டுக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களும் சேர்ந்து கொண்டு உங்களை மட்டும் அழிக்க முற்படுவதில்லை. உங்களது சந்ததிகளையும் அழிக்க தனது வாரிசுகளை களமிறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது கையைக் கொண்டே உங்களது கண்களையே குத்திக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களை என்ன செய்வது? சொல்லுங்கள்… நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேலாய் வரியாய் உனக்கே தெரியாமல் கொள்ளை அடித்து விமானத்திலும், காரிலும் சுகமாக பயணம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் என்ன செய்வது? நீங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களின் பிள்ளைகளுக்கு என்று தனிக் கல்வி. ஆனால் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் இன்றோ நாளையோ இடிந்து விழக்கூடிய ஆசிரியர்களும் இன்றி கிடக்கும் குப்பைக் கூடங்களில் கல்வி. உங்களுக்கு கிடைக்க்க்கூடிய வசதிகளை, உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க்க் கூடிய வசதிகளை, வாய்ப்புகளை வழியில் பிடுங்கிக் கொள்ளும் கொள்ளைக்கார்ர்களை என்ன செய்யப்போகின்றீர்கள். மனிதா… மனிதா… ஏன் இந்த நிலை. நீயும் புழுவும் ஒன்றா ? மலத்தோடு கேவலமானவனா நீ… என்றைக்கு விழித்தெழப் போகிறாய் ? என்று உன்னிடம் இருந்து உன் சொத்துக்களை பிடுங்கிக் கொண்டிருக்கும் திருடர்களை விரட்டப்போகிறாய் ? ஏன் இந்த அக்கிரமங்களை இன்னும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் உலகோரே ??? ஏன் ???
அநியாயம் செய்வதே தொழிலாய் செய்து வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க வேண்டாமா இல்லையா ? சொல்லுங்கள் உலகோர்களே ??? சொல்லுங்கள்….
ஏய் கேடுகெட்ட சமூகமே ! விழித்தெழு… உன்னையும், உன் சந்ததியும் அழிக்க கிளம்பி இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும். இனிமேலும் தூங்க வேண்டாம். ரத்தம் கொதிக்க வில்லையா. இன்று ஊனமுற்றவர்களை அடிக்க வருபவர்கள் நாளை உன்னையும் அடிக்க வருவார்கள். உன் பிள்ளைகளையும் அடிப்பார்கள். வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க போகிறாயா? அடிவாங்கி வாங்கி செத்துப் போக போகின்றாயா ? உப்புப் போட்டுச் சாப்பிடுகிறாய் தானே ? பொங்கி எழு. கண்களில் ரத்தம் சிவக்கட்டும். கைகள் துடிக்கட்டும். நரம்புகள் புடைத்து ரத்தம் தெரிக்கட்டும். போராடு. போராட்ட்த்தில் செத்துப் போனாலும் பரவாயில்லை! மற்றவன் வாழ நீ செத்துப் போவதில் தவறில்லை.
அதோ பாருங்கள். பனி மலையிகளில் காசுக்காக நாட்டின் பேரால் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத, முன்னே பின்னே பார்த்தே அறியாதவனைக் கொலை செய்ய துப்பாக்கியும் கையுமாக விழி கடுக்க காவல் காக்கிறார்கள் அவர்களின் பெயர் ராணுவ வீர்ர்கள். நாட்டைக் காக்கிறேன் பேர்வழி என்று சட்ட்த்திற்குற்பட்டு உயிரைப் பறிப்பது கொலைகள் அல்லவாம். என்னே ஒரு சட்டம். மக்களின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் சட்டங்களின் மறுமுகத்தைப் பாருங்கள் மக்களே… பாருங்கள்.
அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் மரணப் படுகுழியில் தள்ளப்படும் ராணுவ வீர்ர்களைப் பார்… உலகெங்கிலும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன் ராணுவ வீரனுக்கு எதிரி என்று அடையாளம் காட்டப்பட்டு சுடப்படுகிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு நீயும், உன் சந்ததிகளும் அரசியல்வாதிகளின் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகின்றீர்கள். என்றைக்கு விழித்தெழப் போகின்றீர்கள் உலகோரே…. என்றைக்கு விழித்தெழப் போகின்றீர்கள் உலகோரே….
நீங்களும் நானும் அடிமை வம்சத்தை சார்ந்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? ஆம் அரசியல்வாதியும், நம்மிடம் சம்பளம் வாங்கும் நமது வேலைக்கார்ர்கள் அரசு அலுவலர்களிடமும் நாம் அடிமையாய் கிடக்கிறோம். இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்று எவன் சொன்னாலும் அவன் வாயிலேயே போடுங்கள். சம்பளம் கொடுக்கும் முதலாளி வேலைக்காரனிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலத்தை எங்காவது கண்டிருக்கின்றீர்களா உலகோரே…. எம்மைப் பாருங்கள்.. எமது இந்தியாவைப் பாருங்கள். நாங்கள் வேலைக்கார்ர்களிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலத்தைப் பாருங்கள்… பார்த்து கை கொட்டிச் சிரியுங்கள்…
இப்படியெல்லாம் எழுதியும் பேசியும் பொது மக்களுக்கு உணர்வூட்டி அக்கிரச் செயல்களை செய்து வரும் இவர்களை அடக்க வேண்டுமென நினைத்து கொண்டிருந்த போது நான் இறங்க வேண்டிய ஸ்டேசன் வர இரயிலில் இருந்து இறங்கினேன். மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்த போது வழியில் இருந்த கடையில் சூடாக வடையும், டீயும் சாப்பிட்டு விட்டு கிளம்பினேன் ஒரு காலை இழுத்துக் கொண்டே…. எனது நிழலாய் பின் தொடர்ந்தது இந்திய ஜன நாயகம்.
komaalee@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- ஏதேதோ…
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- எல்லைகள் இல்லா உலகம்
- நாகேஷ்
- மோந்தோ -3-2
- பேச்சுத்துணை…
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- சாத்தான்களின் உலகம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- இரயில் பயணங்களில்
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மோந்தோ -3 – 1
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- தட்சணை
- பரிமள விலாஸ்
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- திருப்புமுனை – 2
- திருப்புமுனை -1