கோமதி நடராஜன்
# உங்களுக்கு எல்லாமே தொியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்,தவறில்லை.ஆனால்,அடுத்தவனுக்கு எதுவுமே தொியாது என்று கணித்து விடாதீர்கள்.தற்பெருமையைக் கூட மன்னித்து விடலாம்,அகம்பாவத்தை மன்னிக்க முடியாது அது அழிக்கப் படவேண்டிய ஒன்று
# உங்கள் திறமையை அடுத்தவாிடம் எதிர்பார்க்காதீர்கள்.ஒரே கலையை ஒரே திறமையை,ஒரே மாதிாி எல்லோருக்கும் தந்து விடுவதில்லை.ஆணவம் வந்து விடக்கூடாதே என்றுதான்,அழகு மணம் மென்மை நிறைந்த ரோஜாவுக்கு முள்ளைக் கொடுத்திருக்கிறான்.அவன் தருவதற்கும் காரணம் இருக்கும் தராமல் விட்டதற்கும் காரணம் இருக்கும்.
# அடுத்தவரைக் குறை கூறு முன் ,உங்கள் பக்கம் விரல் திரும்பாதிருக்க,உங்களைக் கவனமாக ஒருமுறை ஆராய்ந்து கொள்ளுங்கள்.நீங்கள் ஒரு விரலை நீட்டினால்,ஓராயிரம் விரல்கள்,உங்களைச் சுட்டிக் காட்டக் கழுகுகள் போல் வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.இரையாகிவிடாதீர்கள்.
# உங்கள் பேச்சும் நடத்தையும்,உங்கள் வாழ்க்கை வயலில் நீங்கள் தூவி வரும் விதைகள்.தீமையை விதைத்து நன்மையை அறுவடை செய்ய எண்ணாதீர்கள்.முள்ளை விதைத்துத் தானியத்தைத் தேடாதீர்கள்.
அடுத்தவர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பிழையின்றி அழகாகக் கணக்குப் போடும் நீங்கள்,அடுத்தவாிடம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய கணக்கில் மட்டும் தவறி விடுகிறீர்களே !எப்படிப் பார்த்தாலும்,ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றுதானே வரவேண்டும்,உங்கள் கணக்கில் மட்டும் விடை வேறு படலாமா ?
# வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம்,அடுத்தவரைக் கிண்டலும் கேலியும் குத்தலுமாகப் பேசி வதைப்பதில் குடூரமான சந்தோஷம் அடைபவரானால்,உங்களிடம் இல்லாத ஏதோ ஒரு உயர்வை,அவரக்ளிடம் கண்டு அதனால் வெளியாகும் தாழ்வு மனப்பான்மையும் ,பொறாமையும்,உங்களை ஆட்டிவைக்கின்றன,என்பதை அப்பட்டமாக உலகுக்கு உணர்த்திவிடுகிறீர்கள்.தன்னிறைவு பெற்றவன் இது போன்ற மட்டமான கேளிக்கைகளில் ஒரு நாளும் ஈடுபடமாட்டான்.
# அடுத்தவர் தோல்விகளைக் கண்டு சந்தோஷம் அடைபவரா நீங்கள் ?ஆம் என்றால்,சந்தோஷத்தின் உண்மையான அர்த்தத்தைப் புாிந்து கொள்ளாதவர் நீங்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.அடுத்தவர் துக்கத்தில் இன்பம் காணும் அற்பத்தனமானக் காாியத்தை மிருகங்கள் கூடச் செயாது.ஐந்தறிவு ஜீவன்கள் கூட சமயத்தில் நமக்கு ஆசானாக உயர்ந்து நிற்கின்றன.
# அடுத்தவர் தோல்வியில் நீங்கள் காட்டும் மகிழ்ச்சியானது,அடுத்தவர் வெற்றியில் நீங்கள் பொறாமை கொள்பவர் என்ற அருவருப்பான உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லிவிடும்.உங்கள் முகத்தில், நீங்களே சேற்றைப் பூசிக்கொள்ளாதீர்கள்.
# நாம் அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்று ஆசைப் படாமல் இருப்போமே.நமக்குள் இருக்கும் நம் மனதை அரை நிமிடம் கூட நம்மால் அடக்க இயலாத போது,அடுத்தவரை அடக்க நினைத்தால் அது ஆகக் கூடியக் காாியமா ?நமக்கு அடங்கி நடப்பதற்காக ஒரு புழுவைக் கூட இறைவன் படைத்திருக்க மாட்டான்.அவரவர்களுக்கென்று தனி பாதை உண்டு,ஆற்ற வேண்டியக் கடமைகள் உண்டு.
# உங்கள் ஆசைப் படியே அடுத்தவரை அடக்க நினைக்கிறீர்களா ?அப்படியென்றால் அதற்காக நீங்கள் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் ,கனிவு,புன்னகை,அன்பு,இன்சொல்,அரவணைப்பு என்றிருந்தால்,உங்கள் நோக்கத்தில் தவறே இல்லை,இத்தனையும் கொண்டு போராடினால்,உங்களுக்குத் தோல்வியும் இல்லை.உறவு என்ற சாம்ராஜ்யத்தி
யாத இனிய சர்வாதிகாாி நீங்களாகத்தான் இருக்க முடியும்.உங்கள் எல்லைக் கோட்டைத் தாண்டி யாரும் தப்பி ஓடவும் மாட்டார்கள்.
–கோமதிநடராஜன்—
ngomathi@rediffmail.com
- எப்போது…
- ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்
- கவிதைகள் மூன்று
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
- ஈரானிய சினிமா
- வாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே
- காதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)
- அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)
- செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- சுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- காத்திருத்தல்
- இரவுக் காட்சிகள்
- கவிதைக்குள் நான்
- ஒருத்தருக்கு ஒருத்தர்
- இன்னும் ஒரு உறவு
- பதவி! பதவி!
- இன்றாவது வந்து விடு.
- பெய்பேய் மழை!
- கண்ணிவெடி
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
- சென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)
- பங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்
- ஈரானிய சினிமா
- அனுபவ மொழிகள்
- தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)
- போட்டி