7 அனுபவ மொழிகள்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

கோமதி நடராஜன்


1# பிறரைப் பற்றிய உங்கள் கணிப்பை,உங்கள் அபிப்பிராயத்தை ,அது சாியோ தவறோ,அதை உங்கள் குழந்தைகள் உள்ளத்தில் விதைக்காதீர்கள்.இளம் நெஞ்சங்களில் நீங்கள் விதைத்த வித்துக்கள்,விஷ வித்துக்களாக இருந்தால் அதனால் பாதிக்கப் படப்போவது உங்கள் குழந்தைகள்தான்.அடுத்தவரைப் பற்றி அ பிப்பிராஅத்தை வளர்த்துக் கொள்ள அவர்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்குங்கள்.ஒருவருக்கு விஷமென்றால் அது அடுத்தவருக்கு அமிர்தமாகலாம்.

2# பாண்டவர்கள்,ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு முடிவெடுக்கும் பொழுது,இளையவர்களான நகுலன்,சகாதேவன் ஆகிய இருவருக்கும் தங்கள் கருத்தை க் கூற முதல் சந்தர்ப்பம் அளிப்பார்,மூத்தவரான தர்மர்.பொியவர்கள் பேசி முடிவெடுத்தபின்,வயதில் சிறியவர்கள்,தங்கள் கருத்தை வெளிப்படுத்தாமலேயே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.இதுபோல் அருமையான விதிமுறைகள் பல குடும்பங்களில் அறவே இல்லாததால்,சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பூதாகாரமாக ஆக்கப்பட்டுக் குடும்பம் பிளவு பட்டு விடுகின்றன.மகாபாரதமும் இராமாயணமும் வெறும் பொழுதுபோக்குக்காகப் படைக்கப் படவில்லை.

3# கிரகங்கள் ஒன்பது.ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட குணம்,தனிப்பட்ட பாதை.இருந்தாலும் அத்தனையும் அதன் பாதை மாறாமல்,சூாியனைச் சுற்றி வருகிறது.அதுபோல்,குடும்பத்தினர் குணத்தில் மாறுபட்டிருந்தாலும் அனைவரும் அன்பு என்ற ஆதவனைச் சுற்றியே வரவேண்டும்.ஒன்று பாதை மாறினாலும் அழிவு அத்தனை கிரகங்களுக்கும்தானே ?

4# நாட்டை அழிக்க ஒரு அணுகுண்டு என்றால்,மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள அவன் உள்ளத்தில் குடியிருக்கும் கோபம் என்ற அரக்கனே போதும்.கோபத்தால் அனைவரையும் அடக்கிவிடலாம் என்று தவறாகக் கணக்கிட்டுவிடாதீர்கள்.அன்பும் அரவணைப்புமே ஒருவரை உங்களோடு உண்மையாக உறுதியாகப் பிணைத்துவைக்கும்.

5# உங்களுக்குக் கோபம் வந்தால்,இவனுக்கு /இவளுக்கு எதற்குத்தான் கோபம் வராது என்று அலட்சியமாகப் போகும்வண்ணம் உங்களையும் உங்கள் கோபத்தையும் செல்லாக் காசாக்கி விடாதீர்கள்.உங்கள் கோபத்தில்,நிச்சயம் நியாயம் இருக்கும் என்று பாதிக்கப்பட்டவரே ஆணித்தரமாக உணரும்படி இருக்க வேண்டும் உங்கள் கோபம். கோபம் கொள்வது பெருமைக்குாிய விஷயமுமில்லை,சந்தோஷப்படவேண்டிய சமாச்சாரமும் இல்லை.

5# ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரைப் பற்றித் தவறான கருத்து ஒன்று உங்கள் மனதில் விழுந்துவிட்டால்,அதையே அவனுடைய குணத்துக்கான அளவுகோலாகக் கொண்டு ஆயுளுக்கும் மாற்றாமல் கல்வெட்டாய் மனதில் பதித்துக் கொள்ளாதீர்கள்.சந்தர்ப்பம் சூழ்நிலை காாிய காரணங்களை ஆராய்ந்து முடிவு எடுங்கள்.தவறுபவர்களையும் தவறு செய்பவர்களையும் தவிர்த்துக் கொண்டே வந்தால் அப்புறம் யாருமே மிஞ்சமாட்டார்கள்.தனிமரம் தோப்பாகாது.மனதை ஒரு பூக்கூடையாக வைத்திருங்கள்,குப்பைத்தொட்டியாக்காதீர்கள்

#குடும்பம் என்றிருந்தால் ,இடையிடையே சின்னச்சின்னக் குழப்பங்கள் தகராறுகள் ஏற்படத்தான் செய்யும்.உடனே இதுதான் சமயம் என்று ஒதுங்

க்கியும் விடாதீர்கள்.

6# அனுசாித்துப் போகிறேன் என்று ,உங்கள் தனித்தன்மையை அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.பாத்திரம் அறிந்து பிச்சையிடு ,என்பது போல் எதிராளியின் நோக்கம் சுயநலமா பொதுநலமா என்று அறிந்து உங்கள் பொறுமையையும் அனுசாிப்பையும்,புாிந்துகொள்ளுதலையும் கடைபிடியுங்கள்.தகுதியற்றவர்களுக்காக உங்கள் தகுதியை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.நாணயமானவர்களுக்கு முன்னே நாணலாய் வளையுங்கள்,ஏமாற்றுபவர்களுக்கு முன்னே இமயமாய் நில்லுங்கள்.

7# ஒருவனுடைய இழப்பால் எத்தனை உள்ளங்கள் உண்மையாகக் கலங்குகின்றனவோ,எத்தனை நெஞ்சங்கள் நடிக்காமல் வாடுகின்றனவோ,அவை வடிக்கும் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் அவனை இறைவனின் அடிகளுக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் என்பதை மறந்துவிடாமல் வாழ்க்கையை ,அர்த்தமுள்ளதாக்குவோம்.அர்த்தமுள்ள வாழ்க்கையே வாழ்வதற்கு இனிமையான வாழ்க்கை. —————————–

[1994லில் வெளிவந்த மங்கையர்மலாில் மலர்ந்தவை]

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்