“பண்பின் வழியில்……………..“

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
படித்தான் நன்கு படித்தான் ஆனால்
படிக்கவேண்டியதைப் படித்தானில்லை!
படித்தால் அதன்வழி நடப்பாரில்லை
அனைத்தும் ஏட்டுக் கல்வி என்றார்!
ஏட்டில் படித்தது ஏட்டோடென்று
ஏன்படித்தேனென்று ஏங்கித் தவித்தார்

அறைகுறைப் படிப்பு அவனையும் கெடுத்தது
அனைத்தையும் கெடுத்தது அன்பையும் கெடுத்தது!
அகிலத்தை நன்கு அடுத்துக் கெடுத்த்து
அன்னையும் பிதாவும் தெய்வம் என்றான்
அவர்களிருவரை அலையவிட்டான்
அனைத்தையும் படித்த மனிதன் ஏனோ
அவலத்தை மட்டும் எடுத்துக் கொண்டான்?
அன்பை மறந்து அன்னையை மறந்து
எலும்பாய்த் தோலாய் மாறிப்போனான்!

இயந்திரக் கல்வி இனிதாய்ப் படித்து
இதயம் அழிந்து இயந்திரமானான்!
இனிதாய்ப் பேசும் குணத்தை இழந்தான்
ஈகைக் குணத்தை மறந்துவிட்டு
ஈனப்பிறவியாய் மாறிப்போனான்

தன்னலச் சேற்றில் மறைந்து விட்டான்!
தற்பெருமை பேசித் தன்னை இழந்தான்
தகுதியும் இழந்தான் தரத்தையும் இழந்தான்!
அடுத்தவர் பொருளை அபகரித்தான்
அடுத்துக் கெடுக்கும் குணத்தைக் கொண்டான்
அனைத்து மதங்களும் அறிவுரை கூறியும்
அவனோ அவற்றைப் புறந்தள்ளிவிட்டான்!

பண்பை மறந்தான் படிப்பை மறந்தான்
பண்பை நல்கும் கல்வியை மறந்தான்
பணத்தை மட்டும் மறந்தானில்லை! நல்ல
பண்பு தான் ஒருவர்க்குப் பாரினில் புகழ்தரும்
பண்பை இழந்தால் படிப்பை இழப்பான்
பரிதாபகரமாய் பாரில் திரிவான்!
பண்பிலி மக்களில் பதடியாவான்!

உயர்ந்த இந்த மானிடப் பிறவி
பண்பால் உயர்ந்து நிற்க வேண்டாமா?
பண்பே உலகை வாழச் செய்யும் – நல்ல
பண்பே மாக்களை மக்களாக்கும்
பண்பில் பெரியார் பாரினில் உயர்ந்தார்
பண்பை மறந்தார் பதராய்ப் போனார்!
பண்பை நல்கும் கல்வி கற்போம்!
பாரினில் அனைவரும் அன்பாய் வாழ்வோம்!
பண்பு ஒன்றே மகிழ்வை நல்கும்
மகிழ்வை நல்கும் பண்பின் வழியில்
பாங்காய் நடந்து வாழ்வோம் நன்கு

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.