வேத வனம் விருட்சம் 92

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

எஸ்ஸார்சி


தீமை தீயோனுக்கு ஆகுக
பழிச்சொல் சொல்பவனைச்சேர்க
தீமை எதிரணிக்கு ஏகுக
யாம் எப்போதும் மாசற்றவர்கள்
தேர்ச்செய்வோன் அதன் பாகங்கள் அறிவபோலே
தீமைச்செய்தோனை தீமையே அறியும்
இச்செடிகள் இவண் அவுடதங்கள்
பிதிர்க்கடன் கழிக்கும் காலை
வேள்விசெய் தருணம்
நினக்கு நேர் இன்னல்கள் தீர்க்குமிவை
புவியினின்று புழுதி
வானின்று மேகம் காற்றால் விரட்டப்படுவதுபோலே
புன்மைகள் தூரம் போகட்டும்
அவிழ்படு கழுதையென ஓடுக தீமை
கடக்கக்கடினமான நதிகள் தொண்ணூறும் அது தாண்டுக
தீமை செய்தோனுக்கு சந்ததிகள் ஒழியட்டும்
தருப்பைகொண்டு மயானம் புதைத்த தீச்செயல்கள்
அக்கினியில் மடிக
செய்திட்டத் தீமைகள் செய்தவனைச்சேர்ந்து
குதிரையெனத்தரை வீழ்ந்து புரளட்டும்
உலோகக்கத்திகள் எம் அகம் உண்டு
தீமை யே அறிக இதனை
நின் கழுத்தெலும்பும் இருகால் கால் எலும்பும் துணிபடும்
இந்திரன் அக்கினி சோமன்
எமக்கே காப்பு என்றும்
தீச்செயல்கல் இருகால் நான்குகால் கொண்டவை
எட்டு கால்கலொடு இங்கிருந்து தொலைக
ஒருபெண் தன் தந்தையைத்தான் அறிவதுபோலே
தீச்செயல்கள் செய்தோனைத்தொ¢வன
அன்பு துன்பம் துயில் இன்பம்
எங்கிருந்து தொடக்கம்
துன்பம் அழிவு தேய்வு துக்கம்
எங்கிருந்து சனனம்
நின் சிரசில் ஏழுத்துளைகள் வந்தெதெப்படி
இருகால் நான்குகால் விலங்குகள்
தம் வழிபோதல் எங்கனம்
சுவாசமும் உயிரும் ஆனகதை தொ¢வாயோ
நீர் வானம் கதிரோன் உஷை
எங்கிருந்து வந்தன இங்கு
பிரமபுரம் அறிந்தோன் இதன் விடை தொ¢வான்
பிரமபுரம் அறிந்தூன் மூப்புக்கு முன் சாவான்
வரணமணி என்னும் மூலிகை
பகை அழிப்பது எமக்கு
தீக்கனவு வனமிருகம் அதிதும்மல் பறவைவின் தீத்துவம்
இவை விலகிப்போகும்
என் அன்னை தந்தை செய்த பாவம் தொலைப்பதது
என் மார்பிலுள்ளது வரணமணி
இந்திரன் தசுயுக்களை அசுரர்களை
வீழ்த்துவதுபோலே பகைவர் ஒழிக
பாம்புகள் கொல்லப்படுக
நதி நடுவே நஞ்சலசப்படுக
வா¢யுடையன கரு நிறத்தன வெண்ணிறத்தன
கொல்லப்படுக யாவும்
விடத்தில் விடம் சேர்க
கட்செவிகள் மாயட்டும்
மூன்றாண்டுகளில் யாம் பேசிய பொய்மைதுன்பம் தொலைக
திருமாலின் திருப்பாதம்
புவி விண் ருக்கு வேள்வி மூலிகை தண்ணீர் உழவு ஆசை உயிர்
இவைகொண்டு கூர்மையுறுக
யாம் வெறுப்போனும் எம்மை வெறுப்போனும்
சுவாசம் தொலைக்கட்டும்
எனது தாயத்து எனக்கு அரண் ஆகுக
என் தந்தை அது
அதர்வணர் அதனை தா¢த்தன்பின்னரே
தசுயுக்களின் கோட்டை தகர்த்தனர்
தாத்ரு அது அணிய அனைத்தும் அவர்க்கு வசமாயின
வெற்றிக்கு ச்சக்தி தருவது
எதி¡¢யை நிலைகுலையச்செய்வது
கலப்பையால் உழு நிலத்தில் வித்து முளைப்பதுபோலே
மக்கள் பசு அன்னம் உணவுவகை
எமக்குச்செழுமையுறுக
காலத்தூண் முன்னே புவி நிலா அனல் பகல் இரவு மாதம் ருது இவை
எப்படி ப்பொருந்தின
அவன் எவன்
மக்கள் தம் சொல்லிலடங்கா இரணிய கருப்பத்தைப்
பரமன் என்கிறார்கள்
காற்று நிற்பதில்லை
மனம் நிலைப்பதில்லை
நீர் சோம்புவதில்லை
இரவு பகல் என இரு யுவதிகள் ஆறுதிசைகளில்
நெசவு செய்கிறார்கள்
ஒருவர் இழைக்க மற்றொருவர் பரப்புகிறார்கள்
ஒரு சூ¡¢யச்சக்கரம் மூன்று ருதுப்பற்கள் பன்னிரு மாத ச்சுற்றுக்கள்
யார் அறிவர் முன்னூற்ரு அறுபது முட்கள் இவண்
நிலையாய் செறுகப்பட்டுள்ளன என்பதுவும்
நீரை உச்சியில் சுமக்கும் ஒருவனை
கலசம் நிறை நீரைப்போல்
கண்ணால் காண்கிறார்கள் யாரும் ஆனால் கருத்தால் அறிவதில்லை
சொர்க்கம் பறக்கும் பொன் அன்னத்தின் சிறகுகள்
ஆயிரம் தினங்கள் பயணிக்கின்றன
சந்திரன் அழகி மூப்பாகாள்
அவளைச்செய்தூந்தான் மூப்படைந்தான்
பிரமனே பெண் புருடன் குமா¢ கிழவனாகிக்கையில்
கம்பு தாங்குபவன்
அவனே தந்தை அவனே மகன் முன்னூன் பின்னோன்
கருப்பாயசத்தில் சலனிப்பவன்
நிறைவினின்று நிறைவு எழ நிறைவு நிலைக்கிறது
பசுவே வேள்விக்கு அருகனானுக
விண்ணகம் செல்க நீ
பசு வான் பசு புவி பசு விட்ணு பசு பிரசாபதி
நீர் காற்பங்கு அமுதம்காற் பங்கு வேள்வி காற்பங்கு பசுகாற்பங்கு
பாலாகிப்பொழிகிறது எமக்கு
பசுவைப்பிராமணர்க்குத்தானமாய் த்தருவோனே
எல்லா உலகையும் அடைகிறான். ( அதர்வ வீதம் காண்டம் 10),
—————————————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி