வேத வனம் விருட்சம் 37

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

எஸ்ஸார்சி


குதிரைத் தேவர்க்கும்
ஆடு இந்திரனுக்கும்
வேள்வியில் பலி
மூன்று முறை
வலம் வந்த அவை
யாகக்கம்பத்தில் கட்டிக்கிடப்பன
ஈ அமர்ந்த மாமிசமோ
கோடாரி கம்பு மீது பட்டவையோ
கைகள் வழிந்தரணமோ
நகம் உறைந்டவையோ
தேவர் வசம் செல்க
மாசு நீக்கிய பச்சை மாமிசம்
நெருப்பிலே பதமாகிறது
எத்தனை மணம்
கொடுங்கள் யாசிப்பவற்குச்சிலதையேனும்
மாமிசம் கொதிபடும் பாத்திரம்
கலக்கும் கம்பு
கொட்டிக்கொடுக்கும் பாண்டம்
மூடும் தட்டு
வறுபடும் வாணல்
கத்தி இனம் அத்தனையும்
எத்தனை அழகு
வேள்வி எழு
வஷட் முழக்கத்தால்
குதிரையைத்தேவர்கள் பெறுகிறார்கள்
குதிரையின் முப்பத்து நான்கு எலும்புள்ளுமே
பதமாய்ச்செலுத்துக கத்தியை
அங்கங்களின் அழகுப் பெயர்ச்சொல்லித்துணியுங்கள் கத்தியை
குதிரையே நீ சாகவில்லை
வருந்தாதே
தேவர்களிடம்தான் விரைகிறாய் நீ
பசுக்கள் இன்னும் குதிரைகள் இன்னும்
வீரப்புதல்வர்கள் எமக்கு
புவிதாங்கு செல்வம்
கொண்டு தருக
வலிமை தருக யாம் செய்பாவத்திலிருந்து எம்மை மீட்டுமே தருக ( ரிக் 1/162)

அக்கினியே
சூரியனுக்கு பன்னிரு பற்கள் கொண்ட சக்கரம்- மாதங்கள்
முந்நூற்று அறுபது பகல்
இரவும் அத்தனையே

ஒரு அத்திமரத்தில் வாழும்
இரு பறவைகள்
ஒன்று உலகெனும் கனிசுவைக்க
மற்றொன்று பார்க்கிறது வேடிக்கை
உயிரும் ஆன்மாவும் அவை. ( ரிக்1/164)

வாக்குத்தாய்
மழை தருகிறாள்
எட்டொடு உச்சிசேர்த்து
ஒன்பது திக்கும்கேட்க ஆயிரம் அட்சரங்கொண்டு பாடுகிறாள்.
ஆகத்தான் உலகம் சீவிக்கிறது

வாக்கு நான்கு பாகமுடைத்து
பிராமணர்கள் அவை அறிவர்
மூன்று எப்போதும் மறைவிடம்
நான்கு மட்டுமே புழக்கத்தில் உச்சரிப்பில்.

வெப்பத்தால் நீர் மேகமாய்
மேலெழும்ப
பூமித்தாய் மகிழ்கிறாள்.
யாம் எழுப்பும் யாகத்தீயோ
மேலுறைச்சோதியை மகிழ்விக்கிறது. ( ரிக் 1/164).


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி