லூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

எச் . பீர்முஹம்மது


அர்ஜென்டினா கலைஞனான லூயி போர்ஹேவின் கதை உலகமானது அகலமானது. லூயி போர்ஹே கதைகளின் தொகுப்பானது சமீபத்தில் பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது.

பல்வேறுபட்ட பரந்த கதை வெளியில் போர்ஹே பிரகாசிக்கிறார். அல்ூமுட்டாசிம், எம்மாசுன்ஸ், வாளின் வடிவம், ரகசிய அற்புதம், மணல் புத்தகம், நித்தியமானவன் என நீண்டு செல்கிறது. ஒவ்வொரு கதையுமே ஒன்றை ஒன்று வெட்டிச் செல்கிறது. சலனங்களின் வெளிப்பாடாக உட்கசிந்து செல்கின்றன., பாம்பே பாஸ்டரான மீர் பஹதூர் அஇயின் அல்ூமுட்டாசிம் நாவலைப் பற்றி கதையில் கதையாக களமானது கீறிட்டு போகிறது. ஆன்மாவினால் பிறர் மீது வீசப்பட்ட புலனாகாத பிரதிபஇப்புகளை தேடும் சஇப்பற்ற மனிதனாக அல்ூமுட்டாசிம் வருகிறார். வன்மை மிக்க வடுவின் வரலாற்று சொல்லாடலாக வாளின் வடிவம் நமக்கு கதை சொல்கிறது. எப்பொழுதுமே வன்மங்கள் மனித மனங்கள் மீது சாமரங்களை வீசுகின்றன. கூர்மை மிக்க ஒன்றாக ஒன்றுக்குள் ஊடுபரவி நிற்கும் வாளானது வன்மத்தின் குறியீடாக காட்சியளிக்கிறது.

காலம் / வெளி இரண்டுக்குமான இயங்கியல் இணைவுகள் நம்மை பின்னோக்கி தள்ளச் செய்கின்றன. காலம் சுருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. நாம் தான் காலத்தை அடையாளமிட்டு கொள்கிறோம். குர்ஆன் குறிப்பிடும் தொன்மங்களிளிஇருந்து நமக்கு ரகசிய அற்புதம் கதையானது தொடங்கப்படுகிறது.

‘மேலும் கடவுள் அவனை நூறு வருடங்களுக்கு இறந்து போகச் செய்து பிறகு உயிர்ப்பித்து அவனிடம் கேட்டார். எவ்வளவு காலமாய் நீ இங்கிருக்கிறாய் ? ஒரு நாள் அல்லது ஒரு நாளின் பகுதி அவன் பதில் அறிந்தான். காலமானது நமக்குள் நகர்ந்து செல்வதன் காரணமாக முழுச்சித்திரமானது நமக்குள் உருவாவதில்லை. எல்லாமே சார்பு நிலையாக தான் இருக்கிறது. ரகசிய அற்புதமானது சகமனிதனின் மரணம் பற்றிய பதிவாக இருக்கிறது. கிளை பியும் பாதைகளின் தோற்றம் முதல் உலகப்போன் நிகழ்வுகளாக பிகின்றது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளைகளாக நமக்கு காட்சியளிக்கின்றது. சதுரங்க மயமாகி போன வாழ்க்கையின் விளையாட்டு அடிக்கடி அதன் பேல் தடை செய்யப்படுகிறது.

மரணமும் காம்பஸ் கருவியும் கதை நாடோடியாகி போன மனிதனின் அலைவை நமக்கு சொல்கிறது. அவனின் மனப்பதிவுகள், நிச்சலன்ஙகள், எல்லாம் கலந்த உணர்வோட்டம் இவற்றின் அடையாளமிடலாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் மாறுதலுக்குள்ளும், சுழற்சிக்குள்ளும் ஆட்படுகிறது. அநித்தமாக எல்லாம் இருக்கிறது. அதன் ஒவ்வொரு சுழற்சியிலும் புதிய புதிய வடிவங்கள் எழுகின்றன. நாம் அநித்தங்கள் மீது தான் இயங்கி கொண்டிருக்கிறோம்.

லூயி போர்ஹே வாழ்நாளின் பெரும்பகுதியை எழுத்துக்காக செலவிட்டார். ஒரு வகையில் எழுத்தே அவருக்கு வாழ்வியக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் கவிஞனாக அடையாளம் காணப்பட்ட போர்ஹே பின்னர் தன்னை கதை உலகிற்குள் நுழைத்து கொண்டார். அவருடைய எழுத்து முறை நவீனத்துவ காலகட்டத்தை தாண்டியும், தாண்டாமலும் நின்று கொள்கிறது. தன் எழுத்தை பரோக் என்று மதிப்பிட்டார். பரோக் என்ற சொல் மத்திய கால இசையிலும் ஓவியத்திலும் நிகழ்ந்த உச்சபட்ச சலனங்களை குறிப்பதாகும். அவருடைய எழுத்துலகமும் உச்சபட்சங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. போர்ஹேவின் கதாபாத்திரங்கள் பல வேறுபட்ட வாழ்க்கை தளத்திஇருந்து வருபவர்கள். அவன் கதைகளில் வாசகன் இளவரசிகளை, மாட்டுகாரர்களை, துப்பறியும் நிபுணர்களை, மந்திரவாதிகளை, அடியாட்களை, போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை, பத்திகையாளர்களை அதிகம் காணலாம். விந்து நிற்கும் கதைக்களத்தில் கதாநாயகர்கள் இருவழியாக உரையாடி கொள்கிறார்கள். 1986 ஆம் ஆண்டு காலமாகி விட்டு போன போர்ஹேவின் கதை உலகம் இன்றும் நித்தியமாக நமக்குள் பயணம் செய்கிறது.

***

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது