ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில்


ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில்
முனைவர் பட்டஆய்வாளர்
முன்னுரை:
காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில், அவ்விலக்கியம் தோன்றிய காலங்களில் நிலவும் சமூகச் சூழலும் மரபும் காணப்படுவது இயற்கையே. சங்கம் மருவியக்காலம் தொடங்கி சோழர் காலம் வரைத்தோன்றிய காப்பியங்கள் பெரும்பாலும் சமயங்களை வலியுறத்துகின்றக் காப்பியங்களாகத் திகழ்ந்தன. இதனை ஆ.ளு.பூரணலிங்கம் பிள்ளையவர்கள் “காதலும் போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும் சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும் விஞ்ஞானமும் மனிதவியலும் இக்கால இலக்கியங்களின் பிரிவாகவும் அமைந்துள்ளன.” என்று குறிப்பிடுகிறார் ஐம்பெருங்காப்பியங்கள் சமண, பௌத்தக் காப்பியங்களாக விளங்குகின்றன. அக்காலக் காப்பியங்களில் சமயம் பரவலாகப் பேசப்பட்டது. அண்மைக்காலத்தில் தோன்றுகின்ற காவியங்களில் சமயப்பதிவுகள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளன. அதற்கு இன்றையச் சமூகச் சூழலேக்காரணமாக அமைகின்றது. அண்மைக்காலத் தமிழ்க் காவியங்களில் வாலி எழுதிய இராமானுஜ காவியத்தில் காணப்படும் சமயப்பதிவுகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
அண்மைக்காலத் தமிழ்க் காவியங்கள்:
அண்மைக்காலத் தமிழ்க் காவியங்களாக விளங்கக்கூடிய வண்டார்குழலி, நேதாஜிகாவியம், இயேசு காவியம், ராமானுஜகாவியம், கலைஞர் காவியம், காரல்மார்க்சு காப்பியம், கப்பலுக்கொரு காவியம், காமராஜர் காவியம், பெரியார் காவியம் போன்ற காவியங்களின் பாடுபொருள் பற்றியும் நோக்கும் போக்கும் பற்றியும் ஆராய்ந்தோமானால் அவைகள் சமுதாயத்திற்காக உழைத்தத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடுவது என்ற ஒன்றையே முக்கிய நோக்கமாகக் கொண்டாலும் அந்தந்தத் தலைவர்கள் கொண்டிருக்கிறக் கொள்கைகள், சமயங்கள் பற்றியும் ஒரு சிலப்பதிவுகள் இடம் பெறுவது இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இராமானுஜ காவியத்தில் வைணம்
ராமானுஜர் வைணவச் சமயத்தைச சார்ந்தவர் என்பதால் கவிஞர் வாலி அவர்கள் ராமானஜரின் கொள்கைகளையும் அவர் சார்ந்தச் சமயத்தையும் இராமானுஜ காவியத்தில் பதிவ செய்திருக்கிறார். வைணவச் சமயத்தில் வடமொழியின் ஆதிக்கம் அக்காலத்தில் பெருமளவு இருந்துள்ளது என்பதை.
“ஆதி திராவிடர்களைப் போல்
ஆழ்வார்களின் தமிழுக்கும்
ஆகாதென மறுக்கப்பட்டது
ஆலயப் பிரவேசம்
ஆதி நாள்களில்
அந்தளவு இருந்தது
வைதிகர்களின்
வடமொழி விசுவாசம்!
வேதங்களும்
உபநிஷதங்களும்
வடமொழியிலேயே
வார்க்கப்பட்டிருந்ததால்…
அவை தமிழர்க்கு
அடைத்த கதவென ஆயின
தொன்மரபு வாய்ந்த
தென்திசை மாந்தர்க்கு
வீடு பேறு பெறும் 2
வாய்ப்புகள் அற்றுப் போயின!” (இரா.கா.பா.எ-4)
என்று மேற்கண்ட பாடல்வரிகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன. வைணவ சமயத்தில் வடமொழி ஆதிக்கமும் சாதிசமய வேறுபாடும் பெருமளவு மண்டிக் கிடந்தன. இதனால் வைணவர்களில் பழமைவாதிகள் ஆழ்வார்களின் தமிழ் மொழிப் பாடல்களை எதிர்த்தனர் என்பதை
“அந்நாளைய
அந்தண வைதிகர்க்கு:
அவர்களை
ஆட்டி வைத்தது
சாதி கிறுக்கு:
சமயக் கிறுக்கு
சனாதனக் கிறுக்கு
சமஸ்கிருதக் கிறுக்கு!
சாதி பலவற்றைச்
சேர்ந்த ஆழ்வார்களை
சிலா ரூபத்தில் வைத்து
சேவிப்பதையும் அவர்கள்
பலாச்சுளைத் தமிழில்
பாடிய பிரபந்தங்களை
பழமறைக்கு நிகராக
பாவிப்பதையும்
வயதான வைதிகம்
வழிமொழிய வில்லை
விசாலமாக – அதன்
விழிவிரியவில்லை 3 (இரா.காவி.பா.எ-4)
என்று கவிஞர் வாலி அக்கால வைணவச் சமயத்தினருக்கு சாதி, சமயக் கிறுக்கு, பிடித்து ஆட்டிவைத்தாகவும் ஆழ்வார்களையும் அவர்கள் படைத்த பிரபந்தங்களையும் ஏற்க மறுத்ததாகக் கூறுகிறார். மேலும் வைதீக நெறிகளைச் சாடும் போது “ வயதான வைதிகம் வழிமொழியவில்லை என்றும் விசாலமானப் பார்வை வைணவச் சமயத்தில் இல்லாது இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார். வைணவரின் தெய்வமான பெருமாளின் புகழைக் காவியத்தின் பல இடங்களில் வெளிப்படுத்தியிருப்பது வைணவ நெறிகளை மக்கள் மத்தியில் பரப்பும் வண்ணம் அமைந்திருக்கிறது.
“நெற்றியில்
நாமக் குறி
உள்ளத்தில்
வைணவ நெறி
விழிகளில்
வரதன் வெறி
என்றிருந்தால்
என்றைக்கும்
புகவேண்டாம்
பிறவிப் பொறி 4 (இரா.கா.பா.எ-6)
என்று நாராயணின் பெருமைகளை வாலி குறிப்பிடுகிறார்.
இராமானுஜரின் முற்போக்கு கொள்கை:
பெருமாள் மீது தீராத காதல் கொண்டிருந்த இராமானுஜர் அக்காலத்தில் நிலவிய வைணவ நெறிகளை எதிர்த்துச் சமயப்புரட்சி செய்தவர் அவரது விசிட்டாத்துவைதம் நெறி உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வீடு பேறு அடைய வகை செய்யும் விதத்தில் இருந்தது என்பதை,
“ஒரு
சம்மட்டி நகர்த்து
சாதிகதைகளைத் தகர்த்து
சம திருஷ்டியே – கீதா
சாரமென்று உணர்ந்து…
ஒரு குடைக் கீழ்
உயிர்க்குலம் அனைத்தையும்
ஒருசேரக் கொணர்ந்து
வெய்யவினை நீங்கி
வையமெல்லாம்
உய்ய…
புகுத்துவான் நாட்டில்
புது நெறியை : எவர்க்கும்
பொருந்திவரும் – ஒரு
பொது நெறியை…” 5 (இரா.கா.பா.எ-1)
என்று இராமானுஜரின் விசிட்டாத்துவைத நெறியை விளக்குகிறார் வாலி. மேலும் இராமானுஜரது மதப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது.

“முக்காடிடுகின்ற
முகமதியப் பெண்ணுக்கு
நிக்கா முடித்தான்
நாராயணனோடு
அரங்கன்பால் அவளுக்கிருந்த
அசைக்கவொண்ணாத
அன்பைக் கண்டு – அவளைத்
துலுக்க நாச்சியாய்த்
துதிக்கிறது நாடு” 6 (இரா.கா.பா.எ-1)

என்று ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே மதப்புரட்சி செய்த மகானாக இராமானுஜர் விளங்கியதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருமாலின் வருத்தம்:
ஒவ்வொரு முறையும் உயிர்களைக் காக்க வானம் விட்டு இந்த பூமிக்கு வருகிறேன். அவரவர் செய்த பாவங்களைப் போக்கி மோட்சம் அடைவதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கினேன், வாழ்ந்தும் காட்டினேன். ஏற்பார் எவருமில்லை, எடுத்துரைத்த நெறிகளைப் பின்பற்றுவார் யாருமில்லை. என்னை ஒரு மனிதப் பிறவியாகத்தான் நினைத்தனரே ஒழிய ஒரு இறையாக கருதவில்லை என்ற திருமாலே வருந்தி
“அவதாரங்கள்
அர்த்தமற்றுப் போயின
விழலுக்கிறைத்த
வெள்ளமாயின” 7 (இரா.கா.பா.எ-3)
என்று திருமால் கூறுவது போல் குறிப்பிடுகிறார் இதன் மூலம் அவதாரங்கள் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது நமக்குத் தெளிவாகின்றது.
வைணவச் சம்பிர்தாயம்:
இராமானுஜருக்குத் திருமணம் செய்துவைக்கப் பெண்பார்க்கும் பொழுது மணப் பெண்ணானத் தஞ்சமாளைப் பற்றிக் குறிப்படும் பொழுது அவள் அந்தணர் குலம். ஆசாரம் அனுஷ்டான்ம தான் அதன் பலம் என்று சொல்லும் போது
“பட்டால் தீட்டு
தொட்டால் தீட்டு
என்று
எடுத்ததற் கெல்லாம்
பஞ்சகவ்வியம் சாப்பிடும் பரம்பரை” 8 (இரா.கா.பா.எ-9)
என்று குறிப்பிடுகிறார்
இதன் மூலம் வைணவ சமயத்தார்க்கே உரிய ஆச்சார அனுஷ்டானங்களைக் குறிப்பிட்டு உயிரோட்டம் உள்ள காவியமாக விளங்கச் செய்துள்ளார் வாலி.
தொகுப்புரை:
இராமானுஜரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செய்திகளைச் சொல்வதுதான் காவியத்தின் நோக்கமாகக் கொண்டாலும் அதன் ஊடே சமயச் செய்திகளையும் வாழ்வியல் செய்திகளையும் புகுத்தியிருப்பது காவியம் படிப்போருக்கு இன்பம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் வைணவ நெறிகளையும் இராமானுஜரது முற்போக்குச் சிந்தனைகளையும் காவியம் எடுத்தியம்புகிறது. வைணவ சமயத்தில் புரட்சி ஏற்பட்ட காலம் இராமானஜரது காலம் என்று சொல்லுமளவுக்கு இராமானுஜரது கொள்கைகள் இருந்தன என்றே கூறலாம். இராமானுஜ காவியத்தில் வாலியின் கவிநயமும் உவமை நயமும் வாசிக்க வாசிக்க இன்பத்தை வாரி வழங்குகிதென்றால் அது மிகையாது.

அடிக்குறிப்புகள்
1. வுயஅடை டுவைநசயவரசநஇ ஐவெசழனரஉவழைn Pயபந 2
2. இராமானுஜ காவியம் பக் 19
3. மேலது பக் 20
4. மேலது பக் 30-31
5. மேலது பக் 6
6. மேலது பக் 4
7. மேலது பக் 14
8. மேலது பக் 47
பயன்பட்ட நூல்கள்:
1.Pரசயெடiபெரஅ ஆ.ளு வுயஅடை டவைநசயவரசந
2.கவிஞர் வாலி இராமானுஜ காவியம்

Series Navigation

ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில்

ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில்