மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

ரசிகன்


ஒரு பெண்ணின்
மிக குறுகிய சிரிப்பழகில்
விரிந்திருக்கும் ரகசியங்கள்…

ஈர்த்தல்
அல்லது பொய்த்தல்
அவரவர் சௌகரியத்திற்கு!

ஒரு கிளாஸ் பழரசத்தில்
ஈருயிர் உறிஞ்சுதல்
அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு…

இதை காதலென
குழம்பி விடுதலும்
குழப்பி விடுதலும்
அடுத்தவன் காதலியையோ
அடுத்தவள் காதலனையோ
தரம் மாற்றும் கூடுதல் சிறப்பு…

பெண்மையின்
இயற்கை சீற்றங்களில்
பாகுபாடு இருப்பதில்லை எவருக்கும்…
குறிப்பிடும்படியாக எனக்கும்!

மேஜையில் சிந்திய
சில உண்மைகளும்
கிளாசில் கசிந்த
பல உளறல்களும்…
ஏனோ அடுத்த வோட்கா பாட்டிலில்
அதிக விருப்பத்தை
ஏற்படுத்தி விடுகின்றன…”

– ரசிகன்

durai.vt@gmail.com

Series Navigation

ரசிகன்

ரசிகன்