முடிச்சு -குறுநாவல்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

உஷாதீபன்


“வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. என்னடா ஒரேயடியா பதினைஞ்சு நாள் லீவு கேட்குற? அப்புறம் கடையை யார் பார்த்துக்கிறது? என்று சலித்துக் கொண்டவர் இன்று சாதாரணமாய் அழைப்பது சற்று நிம்மதியைக் கொடுத்தது. கடையைப் பார்த்துக் கொள்ள என்று இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவனின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக அவர் கருதுகிறார் என்பதற்கடையாளமாய் அவரின் கேள்வி இருந்ததில் இவனுக்கு மகிழ்ச்சியே! “பதினைஞ்சு நாள் லீவெல்லாம் தர முடியாது…”என்று ஒரே போடாய்ப் போட்டவர் “அப்புறம் அப்டியே போயிட வேண்டிதான்…” என்று வேறு சொன்னார். வயிற்றைக் கலக்கி விட்டது இவனுக்கு. பாழாய்ப் போன இந்தச் சுற்றுலாவில் போய் ஏன் இப்படி வலிய மாட்டிக் கொண்டோம் என்று நினைத்துக் கொண்டான். எல்லாம் சின்ன வயதில் இருந்து காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைந்ததுதான். வீட்டில் தங்காத பிள்ளை என்று அப்பொழுதே தனக்கு ஒரு பட்டம் உண்டு. அது இன்று வரை நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை. ஊர் ஊராய்ப் போய்ப் பார்ப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கூட்டம் கூட்டமாய்ப் பல பேருடன் திரிந்து கொண்டிருப்பதில் என்னவோ ஒரு உற்சாகம். ஓரிடத்தில் தங்காமல் நின்ற கால் முதலாளி கடையில் மட்டும் எப்படி இத்தனை வருஷம் நின்றது என்று இன்றுவரை அவனுக்கே தெரியவில்லை. “என்னடா கேட்டுக்கிட்டே இருக்கேன்…பதிலே சொல்ல மாட்டேங்கிற?” – தினசரியிலிருந்து பார்வையை விலக்கி அவனைக் கூர்ந்து பார்த்தார். “உடம்பு முடிலிங்கய்யா…இன்னும் ரெண்டு நா லீவு வேணும்…போன எடத்திலெல்லாம் வெய்யில் ஆள உருக்கிடுச்சி…வாயி வயிறெல்லாம் ஒரே புண்ணு…ஒரு மாதிரித் திரும்பி வந்ததே பெரிசுன்னு ஆயிப்போச்சுங்கய்யா…” –சொல்லியவனின் பார்வை கொல்லைப்புறம் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்தது. கிணற்றடியில் இருந்த பட்டாக் கல்லில் நனைத்த துணியை விரித்து சோப்பை இழுத்துக் கொண்டிருந்தது அது. “வேலைசெய்ய ஆளிருக்குன்னுதெரிஞ்சிகிட்டு ரெஸ்ட் கேட்குறியாக்கும்…போடா..போடா…கடையை யாரு பார்த்துக்குவாகளாம்…அங்க இருக்கிற ஆளுகளுக்கு நீ இல்லன்னா கையொடிஞ்ச மாதிரி இருக்கு…பதினைஞ்சு நாளாச்சுடா கடை சுத்தமாவே இல்ல…நீ போயித்தான் சுத்தப்படுத்தணும்…போயி வேலையைப் பாரு…இங்க வரவேணாம்…கடையைப் பார்த்துக்க…புரியுதா? போ…போ…” “திடீரென்று வீடு கட் ஆகிப் போனதில் சூரிக்கு மெல்லிய அதிர்ச்சி. அவன் பார்வை கொல்லைப்புறமிருந்து இன்னும் மீளவேயில்லை. அது யார் அது? முன்னப் பின்ன இங்க பார்த்தது மாதிரியே இல்லையே? திடீர்னு வந்து எப்படி ஒட்டிக்கிச்சு?” …..2….. – 2 – சொன்னால் சொன்னதுதான். அதற்கு மேல் பெயராது என்று தெரியும். வாயை மூடிக்கொண்டு கிளம்பினான் சூரி. ஆனால் திடீரென்று வீட்டு வேலை கை விட்டுப் போனதில் மனதுக்கு ஒரு சங்கடம். காலையில் கடைக்குப் போகுமுன் இங்கு வந்து வீடு கூட்டிப் பெருக்கி. கொல்லைப் புறம் நனைத்து வைக்கப்பட்டிருக்கும் துணிமணிகளைத் துவைத்து உலர்த்தி விட்டுக் கிளம்பும் போது சூடாக டிபன் கிடைக்கும். டிபனுக்குப் பின் கடைசியாக அருமையான ஒரு காபியும் உண்டு. இனிமேல் அதற்கு எங்கே போவது? தனது அந்த நஷ்டத்தையும் சேர்த்து முதலாளி யோசிப்பாரா? எப்பவும்போல காலைல வந்து டிபன் சாப்பிட்டுப் போடா…! சொல்லுவாரா? சொல்லவில்லையே? வேலை செய்ததனால்தானே டிபன் கிடைத்தது. அதைச் செய்யாமல் எப்படிக் கிடைக்கும்? இனிமேல் தனது அந்தப் பங்கு அந்தப் பெண்ணுக்குப் போகுமோ? யாரோ வந்திருக்காப்போல இருக்கேன்னு ஒரு திரும்பல் கூட இல்லையே? நானான்னா அப்படியா இருப்பேன். கேட் திறக்குற சத்தம் கேட்டாலே உஷார் ஆயிடுவேனே? இனிமே முதலாளி வீட்டை அப்படி யார் கவனிச்சிப்பாங்க. இதெல்லாம் அவருக்கு ஏன் தெரியாமப் போச்சு? சட்டுன்னு கட் பண்ணி விட்டுட்டாரே? யோசனைய+டேயே போய்க் கொண்டிருந்தான் சூரி. லீவு போட்டு விட்டுப் போனவன் அப்படியே எங்காவது போயிருக்கலாமோ? திரும்ப வந்ததுதான் தவறோ? எத்தனை நாள் லீவு எடுத்தாலும் சம்பளத்தைக் கழிக்காத நல்ல மனசுக்காரராச்சே முதலாளி? முழுச் சம்பளம் கிடைக்குமேங்கிற ஆசைதானோ? “திரும்ப நம்ப ஊருக்கு வந்தேன்னா கை நிறையப் பணத்தோடதான் வருவேன்…அல்லாத வரைக்கும் இங்க எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்…என்னை மறந்துடுங்க…”சபதம் போட்டதற்கு இணையாய் தான் ஊரைவிட்டுக் கிளம்பி வந்ததை நினைத்துக் கொண்டான் சூரி. அம்மாவும் ரெண்டு தங்கச்சிகளும் அழுதுகொண்டே விடைகொடுத்தது இன்னும் கண் முன்னால் நிற்கிறது. எத்தனை வருடங்கள் ஆயிற்று. என்னைக்கு நா சம்பாதிச்சு என்னைக்கு ஊர் போய்ச் சேருறது? அதுவரைக்கும் அம்மா தங்கச்சிகளுக்கு கல்யாணம் காட்சி பண்ணாமக் காத்துக்கிட்டா கெடக்கும்? என்னை மாதிரி வீட்டை விட்டு ஓடி வந்தவன நம்பிக் கெடப்பாங்களா யாரும்? – யோசனைய+டேயே நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் அந்த மைல்கல்லின் நீண்ட தார்ச் சாலையின் துவக்கத்தில் வந்தபோது தானே தயங்கி நின்றன. ( 2 ) “உறலோ, வேதா நகர் போலீஸ் ஸ்டேஷனா? இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ஜார்ஜ் இருக்காருங்களா?”- கணேசலிங்கத்தின் குரலில் மெல்லிய பதட்டம். “லிங்கம் ஸார், நா ஜார்ஜ்தான் பேசறேன்…என்ன விஷயம் சொல்லுங்க…” “ஒண்ணுமில்ல ஸார்…காலைல உங்கள டிஸ்டர்ப் பண்றேன்…அந்தப் பய சூரியை அனுப்பிட்டேன்…அதச் சொல்லலாம்னுதான்…” “ஓ.கே., இனிமே அவன வாட்ச் பண்ணவேண்டியது என் வேல…அத நா பார்த்துக்கறேன்…கடைல எப்பவும் போல அவன் இருக்கட்டும்…மத்த ஆளுகள்ட்டயும் சொல்லி வைங்க…அவனோட எதுவும் பேசிக்க வேணாம்…” “அத அன்னைக்கே சொல்லிட்டேன் ஸார்…எந்தச் சந்தேகமும் வராம நடந்துக்குவாங்க…” “ரைட்… …உங்க வீட்டுக்கு வந்திட்டு பிறகு அவன் எங்க போனான்? தெரியுமா?” “எங்க ஸார் போகப் போறான்…எங்க ஸ்டாஃப் தங்குற எடத்துக்குத்தான் போவான்…பெறவு கடைக்கு வருவான்…ஆனா ஒண்ணு பாவம் ஸார் அவன்…ரொம்ப வருஷமா எங்கிட்டக் கிடக்கான்…அவன சந்தேகப்படுறதுல அர்த்தமேயில்லைன்னுதான் எனக்குத்தோணுது… ….3…… – 3 – “நீங்க யாரையெல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களோ, அவுங்களையும் சேர்த்துச் சந்தேகப்படுறதும், விசாரிக்கிறதும்தான் எங்களோட வேலை…போலீஸ்கண்ணுல நீங்களும்தான் இருப்பீங்க…” “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…?” “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். பயந்துட்டீங்களா?” “பயப்பட என்ன இருக்கு? உங்க கிட்டே வந்தாச்சுல்ல…எல்லாத்தையும் எதிர்நோக்கித்தான் ஆகணும்…”- எதிர்ப்புறத்தில் சிரிப்பது கேட்கிறது கணேசலிங்கத்திற்கு. போதும் என்று அத்தோடு இணைப்பைத் துண்டிக்கிறார். எத்தனை வருஷமாய் இந்த வீட்டில் நாய் போல் கிடக்கிறான் இந்த சூரி. அவனைப் போய் சந்தேகப்பட்டு விட்டேனே? நான் போடும் சோறு, நான் கொடுக்கும் துட்டு இதைத் தவிர அவனுக்கு வேறு ஏதுமே தெரியாதே! அவனைப் போய் சந்தேகிப்பதா? பாவமில்லையா? இத்தனைக்கும் சம்பவம் நடந்த அன்று அவன் ஊரிலேயே இல்லையே? அவன்தான் ஊர் சுற்றப் போய் விட்டானே? முன்னதாகவே லீவு போட்டுவிட்டுப் போனவனை இப்படி சற்றும் எதிர்பாராவிதமாக இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் என்று அனுப்பலாமா? கனகலட்சுமியாவது சொன்னாளா? அவளுக்குமே இவன் மீது சந்தேகம் இருந்ததோ என்னவோ? பேசாமல் இருந்து விட்டாளே? என் பிள்ளை மாதிரி அப்படி இப்படி என்பாளே அடிக்கடி? அதெல்லாம் என்னவாயிற்று? இப்படி முகத்திலடித்தாற்போல் வெளியே அனுப்பவா? அந்தப் பெண் யாரோ என்னவோ? திடீரென்று கொண்டு வந்து நிறுத்தி போய் வேலையைச் செய் என்று விட்டாளே? அதைப் பற்றி ஏதாவது விசாரித்துத்தான் செய்தாளா? அல்லது யாராவது சொன்னார்கள் என்று கொண்டு வந்து வைத்துக் கூத்தாடுகிறாளா? என்னதான் ஆனாலும் கல்யாணம் ஆகாத வயசுக்கு வந்த பெண்ணை இப்படிக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, செமத்தியாய் வேலை வாங்குவது சரியா? சூரி வீடு கூட்ட, துணி துவைக்க என்று முடித்துவிட்டுக் கிளம்பி விடுவான். இந்தப் பெண் இவளுக்கு அடுப்படியிலும் உதவியாய் இருக்கிறாள். தன் வேலைகளைப் பெருவாரியாய்க் குறைத்துக் கொள்வதற்கு என்று வகையாய் அமைந்தது என்று தேர்ந்தெடுத்து விட்டாளோ? எதுவோ இருக்கட்டும். அது யார் என்ன என்று விசாரிக்க வேண்டாமா? கோயிலுக்குப் போன இடத்தில் ஒரு அம்மாள் சொன்னாள் என்று மட்டும்தானே சொன்னாள். எத்தனை வருஷத்து நம்பிக்கை இந்த சூரி? அவனைப் போய் நீ கடையோடு கிட என்று திடீரென்று சொன்னால்? பாவம் அவன் விகல்பமறியாதவன். முதலாளி வாக்கு வேதவாக்கு என்று போய் விட்டான். அதுவே இவளுக்கு வசதியாய் வேறு போயிற்று. போதாக் குறைக்கு இப்பொழுது அவனைச் சந்தேகப் பட வேண்டியும் இருக்கிறது. ம்ம்! நான் எங்கே சந்தேகப்பட்டேன். போலீஸ் சொல்கிறதே என்று செய்ய வேண்டியிருக்கிறது! நினைத்துக் கொண்டே தன் அறைக்குள் காலடி எடுத்து வைக்கப் போனவரின்; பார்வை அங்கே பெருக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீது விழுந்தது. அப்ப்ப்பா….! என்ன ஒரு மதர்ப்பான தேகம்! ஒரு கணம் தடுமாறித்தான் போனார் கணேசலிங்கம். “நாந்தான் உங்க ரூமைக் கூட்டச் சொன்னேன். ரொம்பத் தூசியாக் கிடந்தது. அது கூட்டி முடிக்கட்டும்…நீங்க சித்த இப்படி வாங்க…” – உடனேயே கணீரென்று வந்த மனைவியின் குரலில் சடாரென்று நிதானத்துக்கு வந்த கணேசலிங்கம் உறாலில் வந்து மீண்டும் அமர்ந்தார். ஆனால் பார்வை மட்டும் தவிர்க்க முடியாமல் அந்தப் பெண்ணின் மீது படிந்திருந்ததை கனகலட்சுமி கவனித்து விடக் கூடாதே என்று தன்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு நிதானப்படுத்திக் கொள்ள முயன்றார் அவர். ……………4…….. – 4 – ( 3 ) “டேய், போயி கஸ்டமர்சுக்கு நாலு காபி வாங்கிட்டு வா…” – ய+னிபார்மில் இருந்த சூரியைப் பார்த்துச் சொன்னார் நாகசாமி. ரொம்ப வருஷமாய் அந்தக் கடையில் இருப்பவர் அவர். அது அந்த ஊரின் பெயர் பெற்ற நகைக் கடை. இன்று எவ்வளவோ நாகரீகமான ஷோ ரூம்களுடன் எத்தனையோ கடைகள் அந்த நீண்ட நகைக் கடை வீதியில் உதித்திருக்கலாம். ஆனாலும் அங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அவர்தான் சீனியர். நாகுண்ணே…நாகுண்ணே என்றுதான் எல்லோரும் அவரை அழைப்பார்கள். மனதில் கல்மிஷம் இல்லாமல் பல ஆண்டுகளாக உழைத்து வருபவர். அவருக்கென்று ஒரு குடும்பம் என எதுவும் கிடையாது. அந்தக் கடைதான் அவருக்கு எல்லாமும். அங்கேயே இருந்து அங்கேயே படுத்து, உருண்டு, புரண்டு, காலத்தை ஓட்டி வருபவர். அந்தவகையில்தான் அவருக்கு சூரி மேல் ஒரு கரிசனம். தன்னைப் போல் அவனும் ஒரு அநாதைப் பயல் என்று. அப்படித்தான் சொல்லியிருந்தான் சூரி எல்லோரிடமும். யாரும் இன்றுவரை அதற்கு மேல் எதுவும் அவனிடம் கேட்டதில்லை. எடுபிடியிடம் என்ன கேள்வி வேண்டிக் கிடக்கிறது என்று விட்டு விட்டார்களோ என்னவோ? நாலு மாடிக்கும் லிப்ட்டில் மேலேயும் கீழேயுமாய்ப் போய்க் கொண்டிருப்பான் அவன். எங்கெங்கு கஸ்டமர்கள் நுழைந்தாலும் அவர்களுக்கு காபி, டீ வேண்டுமா என்று கேட்க வேண்டியது அவன் வேலை. தரை தளத்தில் நுழைபவர்களை எங்கே அழைத்துச் செல்ல வேண்டி கை காண்பிக்கிறார்களோ அங்கே கூட்டிச் சென்று விடுவதும் இவன் வேலையாகிறது. அழகழகாய்ப் பதுமைகளாய்ப் பெண் பிள்ளைகளை முதலாளி நிறுத்தித்தான் இருந்தார். ஆனாலும் சூரியின் முக்கியத்துவம் என்பது தனி. நாகசாமிக்கு சமதையாகப் பொறுப்புக்களைச் சுமப்பவன் அவன். எல்லாம் சரிதான். ஆனால் இன்று வந்ததிலிருந்து அவரைத் தவிர வேறு எவரும் அத்தனை முகம் கொடுத்துப் பேசவில்லையே ஏன்? இவனுக்கு மட்டும் நினைச்சா லீவு, நினைச்சா பணம், பீத்தப் பயலுக்கு வந்த வாழ்வப் பாரு…என்று பொறாமைப் படுகிறார்களோ? அதுக்கென்ன செய்றது? என்னமாதிரிக் கதியாக் கிடந்து வேலை செய்யணும்ல…கூப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு ஓடுறேன்ல…எவன் செய்வான்? எவனையாவது செய்யச் சொல்லு பார்ப்போம்? ஒரு நாளைக்காச்சும் சலிச்சிருப்பனா? சடைச்சிருப்பனா? என் அலுப்பை முகத்துல காட்டிக்கவே மாட்டனே? அதுதான முதலாளிக்கு என்னைப் பிடிச்சிப் போச்சு! அப்பத்தான நெருங்க முடியும்! இந்த சூட்சுமம் எவனுக்குத் தெரியுது இந்தக் கடைல? எல்லாம் படிச்சவுகளாத்தான் இருக்காங்க…புண்ணியம்? மனுஷாளப் படிக்கலையே? தனக்குத்தானே பெருமைப் பட்டுக் கொண்டான் சூரி. இன்றைக்கு என்னவோ ஓய்வில்லை ஒழிவில்லை. வந்ததிலிருந்து டைட். “எங்கெங்கயோ சுத்தியடிச்சிட்டு வந்து இன்னிக்கே என்ன ஓட்டம் ஓடுறான் பார்த்தியா?” டைமன்ட் செக்ஷன் அருணாச்சலம் சொல்வது இவனின் காதில் விழுந்து விட்டது. அருணாச்சலம் அங்கு வந்ததிலிருந்து அருண் ஆகி விட்டான். இம்மாதிரிப் பெயர்களையெல்லாம் அழகாகச் சுருக்கியிருந்தார் முதலாளி. டேய் நாராயணா…என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவர்தான். கடைக்கு வந்த நாளிலிருந்து வெறும் சூரி ஆகிவிட்டது. சரி, கெடக்கட்டும், ஒண்ணுமில்லாதவன எப்படிக் கூப்பிட்டா என்ன என்று விட்டு விட்டான் இவனும். அவரே சதம் என்று வந்து விழுந்து கிடப்பவனுக்கு பெயரில்தான் வந்ததா கேடு! மதியத்திற்கு மேல் வெயில் தாழ முதலாளியிடம் அனுமதி கேட்டுக் கொண்டு புறப்பட்டான் இவன். அவன் கால்கள் நேரே ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தார்ச்சாலையை நோக்கி வேகமாய் நகர்ந்தன. அங்கிருந்து எத்தனை கி.மீ. என்பதை அவன் மனம் இதுநாள்வரை கணக்கிட்டதில்லை. ஆனால் அன்று எப்படியும் அந்த அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடுதான் போய்க் கொண்டிருந்தான் சூரி. …………5………. – 5 – என்னாச்சு அந்தப் பயலுக்கு. அன்னைக்குப் பார்த்தபிறகு ஆளையே காணோம். என்ன நினைச்சிக்கிட்டிருக்கான் அவன் மனசுல? சரி அக்கா பையன்தானேன்னு எடம் கொடுத்தா மடத்தப் பிடிக்கப் பார்ப்பான் போல? இத்தனைக்கும் அடிக்கடி என்னைத் தேடி வராதடான்னு வேறே சொல்லியிருக்கேன். அதுக்காகக் காசு வாங்கிட்டுப் போனா திருப்பிக் கொடுக்கிறதேயில்லையா? நானே ஊரு ப+ராவும் சுத்திப்பிட்டு வெறும் ஆளா வந்திருக்கேன்…இவன் என்னடான்னா திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்கிறானே? இவன நம்பி எதுவும் செய்ய முடியாது போலிருக்கே! நினைத்தவாறே கால்களை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சூரி. அந்த வழியே எந்த பஸ்களும் அந்த நேரத்தில் இருக்காது என்பதை அறிவான். ஆனாலும் அதுவே அவனுக்குச் சாதகமாகி விடக் கூடாதே என்கிற பயம் மனதுக்குள் பற்றிக்கொள்ள மெதுவே வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் சூரி. ( 4 ) “ஏட்டையா, கொஞ்சம் இப்டி வாங்க…பேசுவோம்…” – இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஏட்டு பீதாம்பரத்தை அழைத்தபோது அதிர்ந்துதான் போய்விட்டார் அவர். என்றைக்குமில்லாமல் இன்னைக்கு என்ன புதுசாய்? மதிய வேளையில் பொழுது போகவில்லையோ? நேற்றுத்தான் மினிஸ்டர் ப்ரோக்ராம்.. இன்று காலையோடுதானே ஓய்ந்தது. அந்த ஆசுவாசத்தில் அழைக்கிறாரோ? எப்பொழுதும் இம்மாதிரிக் கூப்பிட்டுப் பேசியதில்லை. இன்று என்ன மனதில் கொண்டு கூப்பிடுகிறாரோ? எவனுக்குத் தெரியும்? தயக்கத்தோடேயே போய் அமர்ந்தார் பீதாம்பரம். “ஏன் ஏட்டயா, அந்த நகைக்கடைக்காரர் வீட்டுல யாரு திருடிருப்பாங்கன்னு நினைக்கிறீக நீங்க?”- கேள்வி இம்மாதிரி வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஸ்டேஷன் உண்டு, தான் உண்டு என்று இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வியைத் திடீரென்று வீசினால் என்னதான் செய்வது? எப்.ஐ.ஆர் எழுதினேன் என்பதற்காக என்னையே கேஸை அலசுமய்யா என்பார் போலிருக்கிறதே? “யாருங்கய்யா கண்டது? யாரை நம்பறது இந்தக் காலத்துல? எனக்கென்னமோ எல்லாமும் தப்பாகிப் போச்சுன்னு தோணுது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, தாய், தகப்பன், மாமன், மச்சான்னு எந்த உறவையும் நம்ப முடிலங்கய்யா…என்னடா இவன் இப்டிச் சொல்றானேன்னு தோணும்…நட்பு, நம்பிக்கை, பாசம், நேசம்னு எல்லாமும் இருக்கத்தான் செய்யுது…ஆனா இந்தப் பணத்து முன்னால எல்லாமும் அடிபட்டுப் போகுதுங்க…” “நீங்க சொல்றது கரெக்ட்தான்யா…அவர் வீட்ல திருடுனவங்ஞ கூட இருக்கிற நகையையெல்லாம் விட்டுட்டு பணத்த மட்டும் எடுத்திருக்கானுங்க…அதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கு…நகையை எடுத்தா அத அடையாளம் வச்சு பிடிபட்டுக்கிருவோம்னு நினைச்சிட்டாங்களா? பணம்னா சந்தேகம் வராது. எங்கயாச்சும் வெளிய+ர் போயி ஜாலியாச் செலவு செய்யலாம்னு தோணியிருக்கும்…பணமாக் குறி வச்சவங்ஞ லிஸ்ட் நம்மகிட்ட இருக்குல்ல…அதுல எவனாச்சும்தான் இருப்பான்னு பார்த்தா எல்லாப் பயல்களும் உள்ளதான கிடக்கானுங்க? பின்ன புதுசா எவன் முளைச்சிருப்பான்? ஒருவேளை திருவிழாவுக்குன்னு ஏதாச்சும் கோஷ்டி வந்து எறங்கியிருக்குமோ? இந்தத் திருச்சிப் பசங்களும் ஒடுங்கித்தான கிடக்கானுங்க…அப்டியே அவிங்ஞ கிளம்பினாலும் பக்கத்துல வச்சிக்கிறமாட்டானுங்களே? வெளி மாநிலத்துக்குத்தான போயிட்டு வருவானுங்க…அதான் ஒரே யோசனையா இருக்கு…” “என்னங்கய்யா…நீங்களே குழம்புறமாதிரிப் பேசுறீங்க…எங்கிட்ட இப்டித்தான் பேசுவீங்க…இன்னொரு பக்கம் வேல நடந்திட்டிருக்கும்…இந்நேரம் எவன் உங்க மைன்ட்ல பிடிபட்டு மிதிபட்டிட்டிருக்கானோ….கொலை கிலன்னா இப்பல்லாம் கோர்ட்ல போய் ஜாக்ரதையா சரண்டர் ஆயிடுறானுங்க…இந்தத் திருட்டுலதான் இன்னும் வழி பிறக்கல…இதுல எப்படி சரண்டர் ஆகுவானுங்க… ….6……. – 6 – “நல்லா ஜாலியா ஊர் சுத்தணும்னுதான பணமாத் திருடுறானுங்க…அதுலயும் பாருங்க எம்புட்டு ஜாக்கிரதன்னு…திருட வந்தாச்சு…வசதியா எடுத்திட்டுப் போறமாதிரி சூழ்நிலையும் இருக்கு…ஆனா பணத்த மட்டும் கை வைக்கிறானுங்க…நகையைத் தொடக்கூடாதுன்னு ஒரு சங்கல்பம்…அப்போ திருட வர்றவனும் மனுஷந்தாங்கிறதும், அவன்ட்டயும் ஏதோ ஒரு மூலைல ஆசையில்லாத தன்மையும் இருக்கிங்கிறது உறுதியாகுது பார்த்தீங்களா? இந்தத் தன்மையை முழுக்க நல்லதுக்குத் திருப்பி விடுறதுக்கு ஒருத்தர் இல்லாமப் போகக் கண்டுதான அவனுங்க இப்டி ஆயிட்டானுங்க? இன்னும் தெளிவாச் சொல்லப் போனா இந்தப் பணம்தாங்கய்யா மனுஷன எல்லாவிதமாவும் மாத்திடுது. சின்ன வயசுலேர்ந்து நல்ல வழில வந்தவனுங்க தப்புத் தண்டான்னு போறதில்லீங்க…வளர்ப்பு சரியில்லாம, அல்லது கவனிப்பு இல்லாம, குடும்ப சூழ்நில சரியில்லாம நில குலைஞ்சு போயிடுதே எத்தனையோ குடும்பம்…அதுலதாங்கய்யா பல பேரு இப்டி ஆயிடுறானுங்க…” பீதாம்பரம் சொன்னதை ஜார்ஜ் கவனித்தாரா தெரியவில்லை. அவர் சிந்தனை எங்கேயோ இருந்தது. இரண்டு நாட்களாக பஜாரில் நகைக் கடைத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது அவருக்கு அந்த நேரத்தில் கவலையளிப்பதாக இருந்தது. இப்படி எடுத்ததற்கெல்லாம் கூட்டம், கோஷம் என்று கிளம்பினால் பிறகு என்னதான் செய்வது? ஒரு நகைக் கடையில் திருட்டுப் போனாலும், நகைக் கடை முதலாளியின் வீட்டில் திருட்டுப் போனாலும் சந்தேகக் கொக்கிகளை எல்லாத் திசைகளிலும் வீசிப் பார்ப்பதுதானே காவல் துறையின் வேலை. சம்பந்தப்பட்டது, சம்பந்தப்பட்டவர் என்று கிளை பிரிந்து கொண்டுதானே போகும்? வந்து விசாரிக்கவே கூடாது என்று சொன்னால் பிறகு அவரவர் கடமையை எப்படித்தான் செய்வது? – யோசனையில் ஆழ்ந்திருந்த அவரின் சிந்தனையை தொலைபேசி அலறிக் கலைக்க, ஓடோடி வந்த பீதாம்பரத்தைத் தடுத்து, நா பார்த்துக்கிறேன் என்றார் ஜார்ஜ. ( 5 ) எந்த முயற்சியாவது செய்து அந்த ஊரைவிட்டுப் போய் விட வேண்டும் என்றுதான் தோன்றியது இன்ஸ்பெக்டர் ஜார்ஜுக்கு. அப்படி எதுவும் நடக்காவிட்டால் குறைந்த பட்சம் அந்த ஏரியாவிலிருந்து மாறிக் கொள்வது என்ற எண்ணத்தில் தவிர்க்க முடியாமல் விழுந்தாh.; திடீர் திடீரென்று வந்து விசாரணை என்று அழைத்துச் செல்வது கூடாது என்றும், சம்பந்தப்பட்ட கடையையும் கடைப் பணியாளர்களையும் மட்டும்தான் விசாரிப்பது நலம் என்றும் சகட்டு மேனிக்கு எல்லாரையும் சந்தியில் கொண்டு நிறுத்துவது தொழிலாளர்களை அவமானப் படுத்துவதாகும் என்றும் இதற்கு ஒரு முடிவு கட்டும்வரை ஓயப் போவதில்லை என்றும் ஒட்டு மொத்தத் தொழிலாளர்களும் மொத்த வீதியிலும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தர்ணா என்று சொல்லி; அமர்ந்து கிடந்தது பார்த்தவர் எல்லோரையும் மலைக்கத்தான் வைத்தது. உணர்ச்சிப் பிழம்பான கூட்டம் என்று சொல்வதை விட உண்மையான தன்மானமிக்க கூட்டம.; கூடிக் கலைவது கும்பல், கூடிச் சிந்திப்பது கூட்டம், நாம் இங்கே கூடிச் சிந்திக்கத்தான் இப்படிக் கடலளவு கூடி ஒற்றுமையுடன் நிற்கிறோம். நமது கடுமையான உழைப்பை மதிக்காத எந்த நடவடிக்கைகளையும் யாமும் மதிக்கப் போவதில்லை. வாழ்ந்தால் நேர்மையோடும், மானத்தோடும் வாழ்வோம்…இல்லையேல் ஒரு லட்சியத்திற்காக வாழ்ந்தோம் என்று அறைகூவல் விடுத்துச் சாவதற்குத் தயாராவோம்…! கட்டுப் படுத்த முடியாத கூட்டம் எவ்வகையிலும் கட்டறுத்துக் கொள்ளக் கூடாது என்று கருதிய ஜார்ஜ் ரொம்பவும் நிதானத்தோடுதான் செயல்பட்டார். தங்கள் கோரிக்கைகளை பண்பாட்டு நிதானத்தோடு முன் வைப்போர்களை மதித்து மௌனம் காப்பதுதானே காவல்துறையின் கடமையாகவும் கூட இருக்கும். அதிலிருந்து அது என்றும் தவறியதில்லையே! இந்த எண்ணம்தான் ………..7…………………… – 7 – அந்த நேரத்தில் அவர் மனதில் ஓடியது. அவர்களாகவே கூடிச் சிந்தித்துக் கலைந்து செல்லட்டும் என்று காத்திருந்தார். குறிப்பிட்ட சில பிரதிநிதிகளோடு தக்க பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வதுதான் சரி என்று தோன்றியது அவருக்கு. நாங்கள் மாதாந்திரச் சம்பளத்திற்கென்று வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள். பொருளாதார மந்த நிலையில் எங்கள் அன்றாட வாழ்க்கையே சீர் குலைந்து கிடக்கும் பொழுது அதற்குப் போராடி எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள என்னவெல்லாம் நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதாக எங்கள் முதலாளிகளோடு சுமுக உறவில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரி வாழ்க்கைச் சிக்கலில் அமிழ்ந்து கிடக்கும் எங்களுக்கு இந்த மாதிரியான அநாமதேய விசாரணை மிகவும் இழுக்கான ஒன்று. அது எங்களையும், எங்கள் ஒழுக்கங்களையும், எங்கள் நேர்மையையும் சந்தேகிப்பதாக உள்ளவை. ஆகவே அவற்றை ஒரு போதும் அனுமதியோம். ஒரு போதும் அனுமதியோம்…வீழ்வதற்காகவா வாழ்வு…வாழ்வதற்காகவே வாழ்க்கை…! ஒரு நாள் ப+ராவும் அவர்களின் கோஷம் நீண்ட போதும், சிறிதும் நிதானம் இழக்கவில்லை காவல் துறை. அதுவே அன்றைய வெற்றியாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே அவருக்குக் கிடைத்த ஒரு செய்தி அப்போதைக்கு அவரைத் திருப்திப் படுத்துவதாக இருக்கவே மேற்கொண்டு தொழிலாளர்களை விசாரிப்பது என்பதான நடைமுறையை இனி நிறைவேற்றத் தேவையில்லை என்றுதான் தோன்றியது அவருக்கு. ( 6 ) பொசுக்கும் வெயிலில் ஓட்டமும் நடையுமாக சூரி வேகமெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்த பொழுது அவனைக் கடந்து சென்ற காவல் துறையின் வாகனங்கள் அவனைச் சற்றே தயங்கத்தான் வைத்தன. ஏதேனும் சாலை விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று நினைத்தவனுக்கு, ஒரு ஆம்புலன்சும் கூடவே வேகமெடுத்தது அதை உறுதிப்படுத்தியது. ஆனால் கடந்து போகும் ஒரு ஜீப்பை அவனால் மனதில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காலையில் கடை வாசலில் பார்த்த மாதிரி இருக்கிறதே! என்று நினைத்தான். எத்தனையோ கேசுகள் அவர்களுக்கு இருக்கும். நாம் ஏன் நினைக்க அதைப்பற்றி? என்று போய்க் கொண்டிருந்தவன்தான். தொடர்ந்து சென்ற பல காவல் துறை வாகனங்கள் அவன் தயக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. ஒரு டூவிலரில் வந்து கொண்டிருந்தவரிடம் வாய்விட்டுக் கேட்டபோது “நாலு ரோடு சந்திப்புல ஒரே கலவரமாக் கெடக்குய்யா…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனவரைப் பார்த்தவாறே நின்றுவிட்ட இவனுக்கு மேற்கொண்டு இந்த நேரத்தில் அங்கே போவது அத்தனை சரியில்லை என்று ஏனோ தோன்றி விட்டது. ஏதோவோர் வேகத்தில் கிளம்பி விட்டோமே தவிர போனால் அவன் இருப்பானோ மாட்டானோ உறுதி சொல்வதற்கில்லை. வேகாத வெயிலில் வெட்டி அலைச்சல் எதற்கு? முதலாளியிடம் கேட்க வக்கில்லை. அவரிடம் வாங்கித்தான் எல்லாக் காசையும் ஸ்வாஉறா பண்ணித் திரும்பியாயிற்று. இனிமேல் சம்பளத்தில் கொஞ்சமாவது கழிந்தால்தான் அவரிடம் மீண்டும் கேட்க முடியும். அதுவரை வாய் திறக்க ஏலாது. இந்தப் பயல் ஏதாச்சும் கொஞ்சமாவது கொண்டு வந்து தருவான் என்று பார்த்தால் ஆளையே காணோமே? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியிருப்பானாம்? அப்படிக் காசை வாங்கி என்னதான் செய்கிறான்? ஏதேனும் வியாபாரம் அது இது என்று இருந்தாலும் பரவாயில்லை. எந்த ஊன்றலும் கிடையாது. பிறகு காசுகளைப் பல பேரிடம் இப்படி கடன் வாங்கிக்கொண்டு அவற்றை யாரிடம்தான் கொடுக்கிறான்? ஏதேனும் குடி,கூத்தி என்று திரிகிறானோ? இவனுகளயெல்லாம் நம்பிப் பணத்தைக் கொடுத்தது நம்ப தப்பு. ஏதோ சொந்த பந்தம்னுட்டு வந்து கெடக்கானேன்னு பார்த்தா, எதேதோ ஒண்ணு ரெண்டு சட்ட துணிமணிய வேறே எடுத்திட்டுப் போயிட்டான். …….8……… – 8 – நல்லவேள…அடுத்தாளு துணிகளக் கைய வைக்காமப் போனானே அந்த மட்டுக்கும் பரவால்ல…எந்துணியை எடுக்கிறவன் ஒரு வார்த்தை வாய் விட்டுக் கேட்க வேண்டிதான…மாட்டேன்னா சொல்லப் போறேன்….எத்தன உரிம….மாமன் முறைன்னா அத்தன நெருக்கமா? யாருடாதுன்னு கேட்டவுகளுக்கு பிரண்டுன்னு சொல்லி வச்சனே…அது ஏன்? அக்கா பையன்னு சொன்னா என்ன? அது எப்புடி? நாந்தான் அநாதப்பயன்னு முத்திர குத்தி வச்சிருக்கனே? பெறவு ப+ராவும் பொய்யின்னுல்ல ஆயிப்போகும்? என்னவோ சொன்னம், என்னவோ இருக்கம்…இதுக்கெடைல இவன் வேற…நாமளே ஒரு தண்டம்…நம்மள அண்டி இன்னொரு தண்டமா? சிரித்துக் கொண்டான் சூரி. எத்தனை வேகமாய் கால்கள் முன்னெடுத்தனவோ அத்தனை வேகமாய் வந்த வழியில் திரும்பி விட்டன. ( 7 ) கான்ஃபரன்ஸ் உறாலில் அத்தனை தொழிலாளர்களும் அமர்ந்திருந்தார்கள். கணேசலிங்கத்திற்கு மனதிற்குள் பெருமை பொங்கியது. இத்தனை பணியாளர்களா என் கடையில் உள்ளார்கள்? தனக்குத்தானே சந்தோஷப் பட்டுக் கொண்டார். அவரும் ஒரு சாதாரணத் தொழிலாளியாகத்தான் அந்த நகைக் கடை வீதிக்குள் புகுந்தார். அது முப்பது ஆண்டுகள் முன்பு. இன்று அவா,; பெயர் சொல்லும் மிகப் பெரிய நகைக் கடையின் அதிபர். ஆனால் அவர் என்றுமே தன்னை முதலாளி என்று நினைத்துக் கொண்டதேயில்லை. அவர்களில் ஒருவராகத்தான் தன்னை இன்றும் கொள்கிறார் அவர். தன் பணியாளர்களின் வீட்டு விசேடங்களில், துக்க நிகழ்வுகளில் என்று ஒன்று விடாமல் கலந்து கொள்கிறார். அவர்களின் தேவைகளை அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் இயன்றவரை செய்கிறார். யாரும் தன்னை வித்தியாசமாய் நினைத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறார். எல்லா லட்சணங்களும் பொருந்திய ஒரு முன்னேறிய தொழிலாளியாகத்தான் தன்னை வரித்துக் கொண்டிருக்கிறார். “தோழர்களே,. நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் பணிவான வணக்கங்கள். பிரதி மாதமும் நாம் எல்லோரும் இங்கே கூடுவது நம்மிடையே ஏற்றத் தாழ்வு என்று எதுவும் இல்லை என்பதற்கும், நம்மிடையே இருக்கும் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கும் ஆன சந்திப்பு என்றே கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகளை என்னிடம் மனம் விட்டுப் பேசலாம். உங்கள் குடும்பச் சிக்கல்களை என்னிடம் தாராளமாகத் தெரிவித்து இயன்றவரை தீர்வு கொள்ள முனையலாம். இன்று நாம் இங்கே கூடியிருப்பது இதற்காக மட்டும் அல்ல. நம்மோடு பணியாற்றும் இரு தொழிலாளத் தோழர்களுக்கு இன்று பிறந்த நாள் என்ற சந்தோஷமான, நிறைவான நிகழ்வுக்காகவும்தான். அந்த ;இரு அன்பர்களையும் அவரின் குடும்பத்தாரையும் இந்த மேடைக்கு நான் அழைக்கிறேன். உங்கள் எல்லோரின் நீண்ட பலத்த கரகோஷத்தின் நடுவே அவர்களின் வரவு இங்கே மகிழ்ச்சிய+ட்டட்டும்….” ‘எங்க கிடைப்பார் இப்டி ஒரு முதலாளி…அவர் நல்லா இருக்கணும்…நல்ல மனசு உள்ளவங்களுக்கு எப்பவுமே நல்லதுதான் நடக்கும்…எவ்வளவு செய்றாரு எங்களுக்கெல்லாம்…அவருக்கொழைக்காம வேறு யாருக்கு ஒழைக்கிறது? ஆனா ஒண்ணு என்ன காரணத்துனால என்னை வீட்டுக்கு வர வேணாம்னு சொன்னாருங்கிறதுதான் தெரில…காரணமில்லாமச் சொல்லியிருக்க மாட்டாரு…அது அவர் வீடு, அவர் இஷ்டம்…நாம் யாரு கேட்குறதுக்கு…பொம்பளைக்குப் பொம்பள ஒத்துக் போகும்னு கூடச் சொல்லியிருக்கலாம்… ……….9…………… – 9 – அடுப்படிக் காரியத்துக்கு ஒத்து வரும்னு கூட நினைச்சிருக்கலாம். அவுக இஷ்டம்தான…வீட்டுல இருக்கிற பொம்பளைகளுக்கு வசதி செய்து கொடுக்கலேன்னா வீட்டுக் காரியம் கெட்டுடும்ல…அதான முக்கியம்…இத்தன தொழி;லாளிங்கள வச்சு மேய்க்கிற முதலாளிக்கு இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியாதா என்ன? நானே இதச் சட்டுன்னு புரிஞ்சிக்கிட்டேன்…அவர் அனுபவத்துக்கு இது எம்மாத்திரம்? கடைக்குப் போடான்னுதான சொன்னாரு…வெளில போன்னா சொன்னாரு…அப்டிச் சட்டுன்னு சொல்லிப்புடுவாரா? இல்ல சொல்லிப்புடுவாரான்னு கேட்குறேன்? அவர் ஜட்டி பனியன் எம்புட்டுத் துவைச்சுப் போட்டிருக்கேன்…அதெல்லாம் மறந்துடுவாரா? தங்கிட்ட வேல பார்க்கிற தொழிலாளிகளோட பிறந்த நாளக் கூட ஞாபகம் வச்சிக்கிட்டு விழா எடுக்கிறாரே…எந்த முதலாளி செய்வான்? எவனுக்கு மனசு வரும் இப்டிக் கை வளைஞ்சு கொடுக்கிறதுக்கு? இதே வீதில எத்தன கடை இருக்கு? எம்புட்டுப் பேரு செய்றாக இதையெல்லாம்? அதெல்லாம் அடிமட்டத்துலேர்ந்து வந்தவனுக்குத்தான தெரியும்? சும்மா மனசு வருமா? வாழ்க்கைல அடிபட்டு, நொந்து, நூலானவனுக்குத்தான் அடுத்தவன் கஷ்ட நஷ்டம் புரியும்…அது நம்ப முதலாளிதான்….அதுனால ஏன் வீட்டுக்கு வர வாணாம்னு சொன்னாருங்கிறதப் பெரிசு பண்ணக் கூடாது. அது வீட்டுப் பொம்பளைங்க சமாச்சாரம்…- நினைத்துக் கொண்டே விழா விருந்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சூரி. மெல்லிசைக் கச்சேரி ஒரு புறம் முழங்கிக் கொண்டிருந்தது. பஃபே சிஸ்ட விருந்தினைக் கையில் வைத்துக் கொண்டு அங்கங்கே கோஷ்டி கோஷ்டியாய் நின்றிருந்த தொழிலாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியிலும் ஆரவாரத்திலும் ப+ரித்திருந்தன. அந்தப் பயலைக் கூட்டி வந்திருந்தால் அவனையும் சேர்த்துத் திங்க வைத்திருக்கலாமே என்று ஏனோ சம்பந்தமில்லாமல் அந்த நேரத்தில் தோன்றியது சூரிக்கு. அவ்வளவு தூரம் போனவன் தேவையில்லாமல் திரும்பி வந்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டான். ( 8 )
இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் அதிர்ந்தார். அவர் சந்தேகத்தில் அவன் இல்லவேயில்லை. எதோ வயிற்றுப் பிழைப்புக்கு பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு திரிபவன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார் அவனை. அவ்வப்போது கேசுகளுக்கு உதவுபவன். ஏதாச்சும் வேலைகளப் பார்த்து பொழைக்கப் பாரு என்று எத்தனையோ முறை எச்சரித்து விட்டிருக்கிறார். அவ்வப்போது கவனிக்கவும் செய்திருக்கிறார். அங்கங்கே Nஉறாட்டல்களுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றுபவனாகவும், சர்வராகவும், சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவனாகவும், டீக்கடையில் எடுபிடியாகவும்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். சமீபமாக அவன் பெயர் எதிலும் அடிபடவில்லை. அந்த மட்டுக்கும் திருப்தியாகவேதான் இருந்தார். ஏதோ சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனாக ஒருவனாவது இருக்கிறானே என்று ஒரு ஆறுதல். அவர் சர்வீஸில் யாரையும் அப்படிப் பார்த்ததில்லை. ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஒன்று மாற்றி ஒன்று. இல்லையெனில் முன்னை விடப் பெரிய குற்றம் என்றுதான் போகும். எவனும் அடங்கிக் கிடந்ததுமில்லை. அப்படி அடங்கிக் கிடக்க சூழல் அவர்களை விட்டதுமில்லை. ஆனால் இவன் அப்படியில்லையே? வித்தியாசமாய்த்தானே இருந்தான். எப்படி மாறினான்? கையில் வைத்திருந்த அந்த ஒப்புதல் வாக்குமூலம் அவன் கதையைச் சொன்னது அவருக்கு. கோபால,; த.பெ. சந்தான கிருஷ்ணன், வயது 34, எவ்விதமான வற்புறுத்தலும், அச்சுறுத்தலும் இல்லாமல் தானாகவே முன் வந்து கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் வருமாறு: …………..10……….. – 10 – என் பெயர் கோபால் என்கிற கோபாலன். என் அப்பா சந்தானகிருஷ்ணன், செந்தூர் மில்லில் செக்ய+ரிட்டியாக இருந்து ரொம்ப வருஷத்துக்கு முன்பே செத்துப் போனார். அம்மா கொஞ்ச நாளைக்கு முன்புதான் இறந்து போனார். எனக்குத் தம்பி தங்கச்சிகள் என்று யாரும் கிடையாது. எனக்கு வேலைகள் என்று எதுவும் இல்லை. சில நாள் லாரியில் ஓடுவேன். கிளீனராக இருக்கும் வேலை எனக்குப் பிடித்திருந்தது. பல ஊர்கள் பார்க்கலாம். சுற்றலாம் என்ற ஆசையில் அந்த வேலயைப் பார்த்தேன். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் பெண்களோடு ஜாலியாக இருக்கும் டிரைவர்களைப் பார்த்து எனக்கும் அது பழக்கமானது. பிறகு நானும் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். nஉறவி லைசன்ஸ் ஒன்றும் ரொம்பவும் கஷ்டப்பட்டு நாலு வருஷத்துக்கு முன்பு வாங்கிக் கொண்டேன். பிறகு லாரி ஆபீஸ் முதலாளிமார்களை கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சி ஒரு வண்டியையும் பெற்றுக் கொண்டு பக்கத்து ஸ்டேட்டுக்;கெல்லாம் போய் வந்தேன். வண்டி ஒரு நாள் ஆக்ஸிடென்டில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து எனக்கு வேலை போனது. நான் செக்ய+ரிட்டியாகக் கட்டியிருந்த பணமும் அத்தோடு கழிந்து போனது. வண்டியில் சென்று கொண்டிருந்த நாட்களில் பெண்கள் பழக்கங்களோடு தண்ணியடிக்கும் பழக்கமும் எனக்கு உண்டு. வேலையும் போய், கையில் காசும் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது எனக்கு உதவியவன் என் மாமன்தான். அவர் அடிக்கடி எனக்குப் பணம் கொடுத்து உதவியிருக்கார். அவுங்க குடும்பத்துக்கு எங்க அம்மா டவுனுக்கு வந்த புதுசுல நிறைய ஒதவி செய்திருக்காங்க. அதுதான்; அவன் எனக்கு ஒதவி செய்ய வச்சிருக்கணும். அவன என் வழில இழுக்க நா எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா அவன் மாட்டேன்னுட்டான். இதனால அவன் மேல கோபம் எனக்கிருந்திச்சி. எனக்கு அவன் ஒரு நல்ல கூட்டாளியா இருப்பான்னு நினைச்சேன். அதுக்கு அவன் ஒத்துக்கலை. ஒரு நா நானும் அவனும் ரெண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்திட்டு ஓரமா இருந்த பெட்டிக்கடைல கொஞ்சம் தண்ணியையும் ஊத்திக்கிட்டு வந்திட்டிருந்தோம். அன்னைக்குத்தான் அவன் முத முதல்ல குடிச்சான். பாலத்துக்கு அடில வர்றைல குறுக்க வந்த ஒரு பொம்பளைய கத்தியக் காட்டி மிரட்டி வாடின்னேன். அவ மாட்டேன்னு மறுத்தா. இப்ப என்னோட வறப்போறியா இல்ல உன் பொடவையை அவுக்கட்டுமான்னு மிரடடினேன். அவ சேலை நுனியைப் பிடிச்சுக் கிழிச்சு பயமுறுத்தினேன். அந்தப் போதையிலும் என் மாமன் இதெல்லாம் வாண்டாம்னான். இதுதான் சாக்குன்னு அவ அவன் பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டா. கைல கத்தியோட இருந்த என்னைத் தடுத்தான் என் மாமன். ஒன்னையக் குத்திருவேன்னு நா அவனையும் பயமுறுத்தினேன். சரியான எடத்துல மாட்டியிருக்கிற இவள அனுபவிக்காம விட மாட்டேன்னு கத்தினேன். அந்த நேரம் பார்த்து போலீஸ் வேன் ஒண்ணு அந்தப் பக்கமா வர்ற சத்தம் கேட்டுச்சு. என் மாமன் என்னையும் இழுத்திக்கிட்டு ஆத்துக்கு அந்தப்புறம் இருக்கிற கெடங்கு போல பள்ளத்துல சடார்னு குதிச்சிட்டான்.போலிஸ்காரவுக அந்தப் பொம்புளய விசாரிச்சிக்கிட்டு இருக்கிறத நாங்க ஒளிஞ்சிருந்து பார்த்துக்கிட்டிருந்தோம். அவ என்ன சொன்னாளோ தெரில, அவளையும் ஏத்திக்கிட்டு எதிர்த்திசைல அந்த வேன் போயிடுச்சி. போதை தெளிஞ்ச அந்த வேளைல நான் என் மாமன்கிட்ட மன்னிப்பு கேட்டுக் கிட்டேன். ஒழுங்கா எனக்கு ஒரு வேலை இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா மாமான்னு வருத்தப் பட்டேன். அவன் எனக்கு ஆறுதல் சொன்னான். அது மட்டுமில்ல. அடிக்கடி பணம் கொடுத்து என் பசியைப் போக்கினான் அவன். ஊருக்கு வந்தா பணத்தோடதான் வருவேன்னு சபதம் போட்டுட்டு அவன் வந்த கதையைச் சொன்னப்போ எனக்குப் பரிதாபமா இருந்திச்சி. எனக்கு கூடிய சீக்கிரம் ஒரு வேலை வாங்கித்தர்றதா வேற சொல்லியிருந்தான். நா அத நம்பிக் காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆனாலும் வெட்டிக்கித் திரியறதைப் பார்த்து போலீஸ் என் மேல சந்தேகப் படுதோன்னு என்னவோ ஒரு பயம் என் மனசுல இருந்திச்சி. அப்படியான ஒரு நாள்லதான் அவனோட அவன் முதலாளி வீட்டுக்கு நா போனேன். எனக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்லியிருந்தானே அது கிடைக்குமோங்கிற ஆசைல நானும் போனேன். ஆனா அன்னைக்கு அவன் நிலைமையே சரியில்லாம இருந்திச்சி. எதுக்கோ அவன் மொதலாளி அவனச் சத்தம் போட்டு விட்டிட்டாரு. …………..11………… – 11 – ரொம்ப நேரம் அந்த வீட்டுல இருந்ததுல அந்த வீட்டோட படம் அப்படியே என் மனசுல பதிஞ்சி போச்சி. என்னென்னவோ யோசனையெல்லாம் வந்திடுச்சி எனக்கு. எதுக்கு வாழ்க்க ப+ராவும் இப்படிக் கிடந்து கஷ்டப்படணும்னு அப்பத்தான் தோணிச்சி. என் மாமன்கூட இருந்த மறுநாதான் நானா தைரியமா அந்தக் காரியத்துல எறங்கினேன். ஊருல தென்னமரம் ஏர்ற பழக்கம் எனக்கு உண்டு. காய்ப்புக் காலத்துல நூத்துக்கணக்கான மரத்துல ஏறி எறங்கியிருக்கேன். அந்தப் பழக்கம் எனக்கு ஒதவிச்சு. எந்தப் பக்கமா ஏறி ஈஸியாப் போய் வந்தனோ அந்தப் பக்கமாவே எறங்கியும்வந்திட்டேன். ஆனா என்னோட அந்தத் திருட்டுல என் மாமன் மாட்டுவான்னு நா நினைக்கவேயில்ல. அவனக் கூப்பிட்டு விசாரிக்குது போலீசுன்னு தெரிஞ்சப்போ என் மனசு கேட்கல. என்னால அவன் வாழ்க்கை கெடக் கூடாதுன்னு மட்டும் கேட்டுக்கறேன். அதனாலதான் எல்லா உண்மையும் சொல்லிட்டு நானே என்னை சரண்டர் ஆக்கிக்கிட்டேன். நா செய்த தப்புக்கு என் மானத்தக் காக்க எனக்குத் துணிமணி மொதக் கொண்டு கொடுத்து ஒதவின மாமன் அடி வாங்குறது என் மனசுக்குப் பொறுக்காது. ஆனாலும் அவர் சொன்னத வச்சித்தான் போலீசு என்னத் தேடி வந்திச்சிங்கிறதுல எனக்குக் கொஞ்சமும் கோபமில்ல. ஏன்னா குத்தம் செய்தவன் நாந்தான். அவுரு எந்தத் தப்பும் செய்யல. அவுரு என்ன அவர் மொதலாளி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனது எனக்கு ஒதவத்தான். ஆனா அங்க எம்புத்தி பிரண்டிடுச்சி. இந்தத் திருட்டு முழுக்க என் புத்தில தோணி நானாவே செஞ்சது. இதுக்கும் என் மாமனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்ல…அவர மன்னிச்சு விட்ரணும்னு பணிஞ்சு கேட்டுக்கிறேன். என் தப்புக்கு எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க நா தயாரா இருக்கேன்….ஒப்பம் கோபால். ( 9 ) போலீஸ் கூப்பிட்டு விசாரித்ததிலேயே மிகவும் குன்றிப் போயிருந்தான் சூரி. கடையில் உள்ள எல்லாப் பணியாளர்களையும்தான் அழைத்து விசாரித்தார்கள் என்றாலும் இவனுக்கான விசாரணை சற்று வித்தியாசமாய் இருந்ததாகவே தோன்றியது அவனுக்கு. ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக முதலாளி தன்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னதின் காரணம் இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் தன் மேல் ஏன் அவர் சந்தேகப் பட வேண்டும்? தான்தான் ஊரிலேயே இல்லையே? பின் ஏன் இப்படி விசாரித்தார்கள்? குறிப்பாகத் தன் மேல் சந்தேகம் வர எது காரணமாயிருந்திருக்கிறது? புரியவேயில்லை அவனுக்கு. தன்னை அடிச்சி விசாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் கோபாலு வந்து சரண்டர் ஆன விஷயம் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவனுக்கு எப்படி முதலாளி வீட்டில் திருடும் எண்ணம் உதித்தது?;. ஒரே ஒரு முறைதானே அவனை அவர் வீட்டுக்கு அழைத்துப் போனது. அந்தச் சில நிமிடங்களிலேயா இந்தத் திட்டமிட்டிருக்கிறான் பாவி!;. என்ன ஒரு தைரியம் ? பாம்பை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்திருக்கிறோமே? இவனுக்கு உதவி செய்யலாம் என்று மனமுவந்து நினைத்ததற்கு இதுதானா பரிசு? வியப்பு விலகாமலேயே கிடந்தான் சூரி. ( 10 )
“தேங்க்ய+ வெரிமச் மிஸ்டர் ஜார்ஜ் ஸார், உங்க முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். இத்தனை சீக்கிரம் இதை சக்ஸஸ் பண்ணுவீங்கன்னு நா நினைக்கவேயில்லை. வெரி க்ய+ட் அன்ட் க்விக். காவல் துறையின் உண்மையான முயற்சிக்குப் பின்னால மூளை செயல்படுற வேகம் யாராலேயும் ஊகிக்க முடியாதுங்கிறதை நிரூபிச்சிட்டீங்க…ரொம்ப மகிழ்ச்சி…சொல்லியடிக்கிற மாதிரி அந்தச் சூரியை வீட்டு வேலைகள்லேர்ந்து நிறுத்துங்கன்னதும், அதனைத் தொடர்ந்து அதை ஃபாலோ அப் பண்ணினதும், ரொம்ப ஸ்பீடுதான்….ஆச்சரியமாயிருக்கு…அது எப்படிச் சாத்தியமாச்சு உங்களுக்கு?” ………….12……….. – 12 – “ந்நோ….ந்நோ…ந்நோ…..இ டீஸ் ப்ய+ர்லி ஆன் அர் இன்வெஸ்டிகேஷன்….அதெல்லாம் நீங்க கேட்கக் கூடாது அது தொழில் ரகசியம்… …ஓ.கே.. ஆல் த பெஸ்ட்…..” சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ். வெளியேறும் போது அவரின் பார்வை ஒரு கணம் அந்த வேலைக்காரப் பெண்ணின் மீது படிந்து திரும்பியதை யாரும் கவனித்திருக்கவில்லை. அவள் போலீஸ் இன்ஃபார்மர் என்பதையோ, அவள்தான் மாடிப் பால்கனியை ஒட்டியிருந்த லைட் கம்பத்தில் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த கைலித்துணியின் ஒரு சிறு கிழிசலைச் சாட்சியாய் எடுத்துக் கொடுத்தவள் என்பதையோ, அதுதான் சூரி அவன் அக்கா பையன் கோபாலுக்குக் கொடுத்து உதவிய லுங்கி என்பதையோ, சந்தேகத்தின் பேரில் எல்லாத் தொழிலாளர்களும் விசாரிக்கப்படுகையில் அவர்களின் இருப்பிடமும் பார்வையிடப்பட, தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த சிலதுணிகளைக் கோபாலுக்குக் கொடுத்து உதவிய விபரத்தை சூரி சொல்லியிருந்ததும் ஆன வகையில்தான் இந்தத் துப்புத் துலங்கியிருக்கிறது என்பதை நிச்சயமாக எவரும்; ஊகித்;திருக்க வாய்ப்பில்லைதான். ————————– உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ——————————– செல்: 94426 84188

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்