மீராவாணி கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

மீராவாணி


இரவின் பிசுபிசுப்பில்….

நினைவுகளை மீட்டெடுத்து

நீண்டிருக்கும் இரவு…

ஒருப்பொழுதில் நிதர்சனத்தில்

தள்ளாடும் கலங்களாய்,

மறுபொழுதில்…

கனவும் கற்பணையும்

இணைந்த கலவையாய்!

என்னறையின் காற்றாடியைப்

போன்று அவை

கொஞ்சமும் சலிப்படையாதவை!

மனம் பேசுவதை

இதழ்கள் பேச மறுப்பதால்

விரல்கள் பேசவும் செய்கின்றன…

ஒரு மோன தவத்திற்காக

ஏங்கும் விரல்கள்

கூப்புகின்றன…

கைகளில் விலங்கு!

வாள்ளெடுக்கத் தெரியாத

வளைக்கரங்ளுக்கு

போர்த்தெடுக்கவும் தெரிவதில்லை!

மூச்சுவிடத் திணறும் நகங்கள்

விழிமுளைத்த கசிகின்றன…

என் விரல்களின் சுவாசத்தை

யாரறிவார்? -மீராவாணி

கவிதை: ‘மின்னல் எரிந்த வெளிச்சமல்ல…..’

நுணுக்கமான

தத்துவார்ந்த ஞானத்துடன்

இந்த யாழ்

பாதாளத்திலிருந்தும்

மெல்லிய ஓசையுடன்

மெள்ள வாசித்துக்கொண்டிருக்கும்…!

ஒப்பணையின் போதும்

கலங்கிவிடக் கூடாதென்று

மையெழுதாத விழிகள்

பெரும் துயரத்தையும்

நீர் தீண்டாமல்

ஒரு புன்னகையில்

எதிர்க்கொள்ளும்.

கலைமகளின் கரங்களில்

வீணை கயிரறுந்துப் போனாலும்

கூர்ந்த அவதானிப்புகளுடன்

சொல் நயங்கள்

தினமும் பிறப்பெடுக்கும்…!

இறந்தப்பின்பும்

இந்த கண்கள்

இன்னொரு கருமணிக்குள்

பிரகாசித்திடும்..

சிறுநீரகங்கள் இடம்

பெயர்க்கப்படும் முகமறியாத

ஜீவனின் இரத்ததை சுத்தகரிக்க!

உடல் எரிந்தப் பிறகும்

இதயம் இனிதே

துடித்திடும் இன்னொரு

இதயம் இருந்த இடத்திலிருந்து..!

நான் என்ற என்னையும்

மனதையும்

போல் இன்னொரு பிரதி

செய்ய பிரமனுக்கும்

சில சங்கடங்கள் ஏழும்…

ஏனெனில்……

மின்னல் எரிந்த

வெள்ளிச்சமல்ல…நான்…,

தேய்ந்தாலும் எழுகின்ற

பிடிவாத நிலவு….!

-மீராவாணி

Series Navigation

மீராவாணி

மீராவாணி