எச். பீர்முஹம்மது.
மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பெளத்தத்தின் கோட்பாடு விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான் ? அவனின் இருப்பு என்ன ? உடல் என்பது என்ன ? புலன் செயல்பாடுகள் எதனை பொறுத்து அமைந்துள்ளன ? என்பதற்கான கேள்விகளுக்கு பெளத்தம் பதில் கண்டது. புத்தாின் சமகலாத்தவர்கள் இது குறித்து இரு வேறு கருத்துடையவர்களாய் இருந்தார்கள். ஒரு பிாிவினர்கள் அமரத்வ வாதிகள் என்றும் மற்றொரு குழுவினர் நிலையாமைவாதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆன்மா இறப்பதில்லை. எனவே வாழ்க்கை அமரத்வமானது. அது மறுபிறப்பை புதுப்பிக்கப்படுகிறது என்றனர் அவர்கள். நிலையாமைவாதிகளின் கோட்பாடு உத்சேதவாதம் என்னும் ஒரே சொல்லாக தொகுக்கப்படுகிறது. மரணம் அனைத்துக்கும் இறுதியானது. மரணத்திற்கு பின் எஞ்சுவது எதுவுமில்லை.
புத்தர் மறுபிறப்பை நம்பினாரா ? என்பது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புத்தாின் கருத்துப்படி ஓர் உடலை உருவாக்கும் மூலங்கள் நான்காகும்.
1) ப்ாித்வி (2) அபா (3) தேஜ் (4) வாயு.
உடல் மரணமடையும் போது இந்த நான்கு மூலங்களுக்கும் என்ன நேர்கிறது ? அவைகளும் மரணமற்ற உடலோடு சேர்ந்து மரணித்து விடுகின்றனவா ? அவ்வாறு தான் நடைபெறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். இதனை மறுத்தார் புத்தர். அவை வெளியோடு கலந்துஅதனை ஒத்த மூலங்களின் தொகுதியோடு இணைந்து விடுகின்றன என்றார்.
இந்த மிதக்கும் தொகுதியில் இருந்து நான்கு மூலங்கள் ஒன்றாக இணையும் போது ஒரு புதிய பிறப்பு தோன்றுகிறது. மறுபிறப்பு பற்றி புத்தர் கருதியது இதுவே. இந்த மூலங்கள் இறந்த ஒரே உடலிலிருந்தவையாயிருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்பந்தமுமில்லை. அவை இறந்த வெவ்வேறு உடல்களிலிருந்து சேர்ந்த தொகுதியிலிருந்து ஈர்க்கப்பட்டிருக்கலாம். உடல் இறக்கிறது. ஆனால் மூலகங்கள் எப்போதும் வாழ்கின்றன. இம்மாதிாியான மறுபிறப்பிலேயே புத்தர் நம்பிக்கை கொண்டிருந்தார். மஹாகோத்திதரோடு சாாிபுத்திரர் மேற்கொண்ட உரையாடலில் இந்த விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை புத்தர் சிராவஸ்தியில், அநாதபிண்டிகாின் ஆசிரமத்திலுள்ள ஜேதவனச் சோலை விகாாில் தங்கியிருக்கையில், மாலை நேர தியானங்களிலிருந்து எழுந்த மஹாகோத்திதர் சாாிபுத்திராிடம் வந்து தம்மைத் தொல்லைப்படுத்தும் சில கேள்விகளை தெளிவுப்படுத்தும்படி கேட்டார்.
மஹாகேத்திதர் : முதற்பேரானந்தம் தியானம் வெளிவிடும் காரணிகளும் தானிருத்திக் கொள்ளும் காரணிகளும் எத்தனை ?
சாாிபுத்திரர் சொன்னார் : ஒவ்வொரு வகைக்கும் விட்டு விடுபவை ஐந்து அவை காமம், குரோதம், சோம்பல், கவலை மற்றும் சந்தேகம். உற்று நோக்கல், உயத்துணரல், ஊக்கமுடிடமை, திருப்தி மற்றும் ஒருமைப்பட்ட மனம் ஆகியவை நிலைத்திருப்பவை.
மஹாகோத்திதர் : பார்வை, சப்தம், சுவை, ஸ்பாிசம், வாசனை ஆகியவற்றின் ஐம்புலன்களை எடுத்துக் கொள்வோம்.ஒவ்வொன்றும் அதன் சுயதளத்திலும், வரம்பிலும் தனித்தும், வேறுபட்டும் இயங்குகின்றன. இவற்றின் அடிப்படை யாது ? அவற்றின் ஐந்தளங்களையும், வரம்புகளையும் அனுபவிப்பது எது ?
சாாிபுத்திரர் சொன்னார் மனம். அப்படியானால் புலன்களின் இந்த ஐந்து செயல்திறன்களும் எதனை பொறுத்துள்ளன ?
உயர்சக்தியை என்றார் சாாிபுத்திரர்.
கோத்திதர் கேட்டார் உயிர்சக்தி எதனை பொறுத்துள்ளது ?
வெப்பத்தை என்றார்.
வெப்பம் எதை பொறுத்துள்ளது ?
உயிர்சக்தியை என்றார்.
கோத்திதர் கேட்டார் உயிர்சக்தி வெப்பதை பொறுத்துள்ளது என்கிறீர்கள். வெப்பம் உயிர்சக்தியை பொறுத்திருக்கிறது என்று கூறுகிறீர்கள். அதன் சாியான அர்த்தம் தான் என்ன ?
நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை கூறுகிறேன். ஒரு விளக்கில் நிகழ்வது போல் ஒளி சுடரை வெளிப்படுத்துகிறது, சுடர் ஒளியை வெளிப்படுத்துகிறது. அதே போல் உயிர்சக்தி வெப்பத்தைப் பொறுத்துள்ளது. வெப்பம் உயிர்சக்தியை பொறுத்துள்ளது. கோத்திதர் கேட்டார் உணர்ச்சியற்ற ஒரு மரத்துண்டைப் போல உடல் தூக்கி எறியப்படும் முன், அதை விட்டு எத்தனை பொருட்கள் சென்று விடுகின்றன.
சாாிபுத்திரர் சொன்னார் உயிர்சக்தி, வெப்பம், தன்னுணர்வு.
மஹாகோத்திதர் கேட்டார் காணும் உணர்வும்,. உணர்ச்சிகளும் செயலற்று நிற்க, உறங்குகிற பிக்குவிற்கும் உயிரற்ற பிணத்திற்குமிடையே என்ன வேறுபாடு ?
சாாிபுத்திரர் சொன்னார் பிணத்தில் உடலின் வேதியல் இயங்குசக்திகளும், பேச்சும் மனனும் அடங்கிச் செயலற்று போவதோடு மட்டுமன்றி, உயிர்சக்தி அற்று விடுகிறது. ஆனால் உறங்கும் பிக்குவிடம், சுவாசம் குறைந்து, கூர்நோக்கும் பார்வையும் செயலற்று நின்றிருப்பினும், உயிர்சக்தி நிலவுகிறது. வெப்பம் நிலைத்திருக்கிறது மற்றும் செயல்திறன்கள் தெளிவாகஇருக்கின்றன. அநேகமாக இது தான் இறப்பு அல்லது அழிவு குறித்த தெளிவான விஷயமாகும்.
மஹா கோத்திதருக்கும் சாாிபுத்திரருக்கும் இடையே நடந்த மேற்கண்ட உரையாடல் மனிதனின் மறுபிறப்பு குறித்த தர்க்கத்திற்கு வருகிறது. சாாிபுத்திரர்இறுதியில் சொன்ன வெப்பம் என்பது சக்தி தான். சக்தியே உடலின் இருப்புக்கு காரணமாக அமைகிறது. ஒருவன் இறக்கும் போது இந்த சக்தியின் உற்பத்தி தடைப்பட்டு போகிறது. என்ன மாதிாியான சக்திகள் உடலிலிருந்து விடுபட்டு போயிருக்கின்றனவோஅம்மாதிாியான சக்திகள்பிரபஞ்ச வெளியானது மறுசுழற்சியால் ஆனது. விஞ்ஞூானம் இதனை பலமுறை நிருபித்திருக்கிறது. ஆகவே நிலையாமை இருவித அம்சங்களை உடையது. ஒன்று அதன் ஆற்றல் உருவாக்கம், மற்றொன்று மிதந்து செல்லும் வெளியில் இருப்பின் புதிய சேர்க்கை. அநேகமாக அழிவின் இந்த இருவிதமான அம்சங்களை வைத்து தான் புத்தர் தாம் ஒரு முற்றான அழிவு நிலை வாதி அல்ல என்று கூறினார். ஆன்மாவை பொறுத்தவரை அவர் ஓர் அழிவு நிலை வாதி தான். பருப்பொருளைப் பொறுத்தவரை அவர் ஓர் அழிவுநிலை வாதி அல்ல. பருப்பொருளின் மீட்டுருவாக்கத்தில் அவர் நம்பிக்கை கொண்டாரே ஒழிய ஆன்மாவின் மறுபிறப்பில் அல்ல.
மனிதனின் மறுபிறப்பு குறித்த புத்தாின் கோட்பாடு தெளிவானதாகவும், இயங்கியலாகவும் உள்ளது. மிதந்து செல்லும் உடல்களுக்கும், நிலைக்கும் உடல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மறுபிறப்பு கோட்பாட்டோடு நன்றாகவே பொருந்துகிறது.
***
peer13@asean-mail.com
- அப்பாஸின் நான்கு கவிதைகள்
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா [Kalpana Chawla Ph.D.] (1962-2003)
- ரோட்டி கனாய்
- கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)
- சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)
- மனிதனும் இருப்பும் – மறுபிறப்புப் பற்றி – சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்
- சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)
- பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- முகவரி இல்லாத கடிதம்
- எட்டிப் பாரடி..
- பிப்ரவரி 1, 2003
- ஒரு தந்தையின் கடன்
- எங்கிருந்து வருகிறது ?
- இந்தியாவின் விடிவெள்ளி
- நஞ்சுண்டன் கவிதைகள்
- காகிதங்களாய் நாம்
- தொட்டி(ல்) குழந்தை
- தலைப்புகளற்ற மூன்று கவிதைகள்
- வாழ்வுகள் வாழும்
- குறிப்பு
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை
- கடிதங்கள்
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)
- நே வா.
- வாசித்து முடித்த குழு – உரை வெண்பா
- சொல்ல மறந்த கவிதை
- சில குறும்பாக்கள்
- மூன்று கவிதைகள்
- வா கண்ணா
- தேடித் தொலைந்தது
- நல்ல வார்த்தைக் கிளி
- என்னவள்
- அறிவியல் துளிகள்-13
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை