பூஜ்யமாய் ஒரு கனவு.

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

எஸ். வைதேஹி.


நரைத்த நேற்றைய யிரவின் கனவு
யின்று அர்த்தம் பெறாமல் போனது.
சுற்றிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
பார்க்கவிடாமல் வாழ்க்கை;

மூளையில் அறுபட்ட வார்த்தைகள்
கனவெங்கும் பரவ, தேடிய பாதை திரை விழுந்து மறைய…
அதெப்படி ? எனக்கு மட்டும்..
தினமும் என் தூக்கத்தில்
துக்கமான ஒரு
கனவு
என்னை
தூக்கிலிடுகிறது ?

*

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.