பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஈ.பரமசிவன்


இயற்பியல் துகள்களை இருவகையாக சொல்கிறது.இவை அணுக்கருவின்
அடிப்படைத்துகள்கள்.இதில் ஒருவகை பொருள்திணிவு எனும் நிறையுடைய
“பிண்டத்துகள்” (மேட்டர் பார்டிகிள்)ஃபெர்மியான் எனப்படும்.இரண்டாவது வகை
ஆற்றல் தாங்கிச்செல்லும் (ஃபோர்ஸ் கேரியர் பார்டிகிள்)துகள்
எனப்படும்.இதுவே புலத்துகள் (ஃபீல்டு பார்டிகிள்) ஆகும்.இது போஸான்
எனப்படுகிறது.இதில் நிறை பூஜ்யம் ஆகும்.இயற்கையில் ஆற்றல்கள் (ஃபோர்ஸ்)
நான்கு பிரிவுகளாகாக இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியுள்ளது.அவை முறையே
(1)மின்காந்த ஆற்றல் (2)வலுவற்ற(கதிர்வீச்சில் கசியும்)ஆற்றல் (3)வலுமிகு
அணு அற்றல்(4)ஈர்ப்பு ஆற்றல் ஆகும்.

இதில் மின்காந்த ஆற்றல் அடிப்படையில் ஒளி ஆற்றலே ஆகும்.எதிர் அழுத்தம்
கொண்ட எலக்ட்ரான் துகள் நிறையுடையதாக இருக்கும் போது அது ஃபெர்மியான்
ஆகும்.அதுவே நிறை பூஜ்யமாகி ஒளி அல்லது ஆற்றல் தாங்கி வேகமாக பாயும்போது
அது போஸான் ஆகும்.ஒளியின் அந்த ஆற்றல் தாங்கும் துகளே ஃபோட்டான் ஆகும்.

பொதுப்ப‌டையாய் ஆற்ற‌ல் தாங்கும் புல‌த்துக‌ள் ஆன‌ “போஸான்க‌ள்” மேலே
க‌ண்ட‌ நான்கு வ‌கை ஆற்றல்க‌ளுக்கு முறையே (1) ஃப்போட்டான் ,(2)வீக் காஜ்
போஸான்,(3)குளுவான்,மற்றும் (4)கிராவிடான் முதலியவை ஆகும்.

(1)”போட்டான்”கள் எலக்ட்ரான்களுக்கு உரியவை.மின்காந்த ஆற்றல் அற்புதங்கள்
நடைபெறும் களங்கள் ஆகும்.
2) “வீக் காஜ் போஸான்”(WEAK GAUGE BOSON) (W+ W- Z0 எனும் வலுவற்ற
துகள்களுக்கு உரிய “ஆற்றல் தாங்கி” ஆகும். காஜ் என்பது மாறாத தன்மை
(இன்வேரியன்ஸ்)கொண்ட ஒரு விசை அலகு ஆகும்.

(3)குளுவான் (GLUON)(ப்ரோட்டான் நியூட்ரான் போன்ற வலுமிகு
துகள்களுக்குரியவை .இவை குவார்க்குகள் எனும் ஒட்டிக்கிடக்கும் அதிக விசை
மற்றும் நிறையுடையவை ஆகும்.இவற்றிலும் கொஞ்சம் லேசானவை “லெப்டான்”
என்றும் கனமாவை “ஹேட்ரான்”என்றும் தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.குளு
என்றால் ஒட்டு என பொருள்படும்.இவை பிரிக்கப்படுவது மிகக்கடினம்.குளுவானை
“ஒட்டுவான்”என தமிழில் அழைக்கலாம்.குவார்க்குகள் எனும் இந்த
ஒட்டுத்துகள்கள் உடைபடுவதும் (ஃபிஷன்)மெலும் ஒன்றாய் இழைந்து ஒட்டுவிக்க
(ஃப்யூஷன்)படுதலுமே அணுஆற்றலாய் வெளிப்படுகிறது.

(4)கிராவிடான் (GRAVITON) எனும் “ஈர்ப்பான்” எனும் மிகப்பிரம்மாண்டமான‌
ஆற்றல் ஆகும்.இதனோடு மற்ற மூன்று ஆற்றல்களும் ஒன்றியப்பட சாத்தியமே
இல்லை.மேலும் அணுக்கருவியல் அளவிற்கு சிறு நுண் துகள்களோடு ஈர்ப்பான்
போன்றவை பொருந்துவ‌தில்லை.இவை தள்ளுபடி செய்யும் அளவுக்கு
(NEGLIGIBLE)மிக மிக லேசானவை.அதனால் விஞ்ஞானிகள் கனவு காணும் “பெரு
ஒன்றிய கோட்ப்பட்டில்”(GRAND UNIFICATION THEOry)இதை விட்டு விட்டு மற்ற
மூன்று ஆற்றல்கள் மட்டுமே முன் நிற்கின்றன.

இந்த பிரபஞ்சம் நிறையால் நிரவப்பட்டது.அதில் ஒளிவேகத்தில் செல்லும்
ஆற்றல் தாங்கி துகள்களில் தான் நிறை என்பது பூஜ்யம்.இந்த துகள்களில்
நிறையற்ற தன்மையிலிருந்து திடீரென்று எப்படி நிறை தோன்றியது?அதுவும்
“ஆற்றல் தாங்கித் துகள்களான “வீக் காஜ் போஸான் களில்”
(W+,W-,Z0) இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது?ஏதோ பூதமோ பிசாசோ உள்ளே
இருக்கிறதா?என்று விஞ்ஞானிகள் திகில் அடைந்து விட்டார்கள்.
பயப்பட தேவையில்லை என்று ஸ்காட்லாண்டு நாட்டை சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ்
என்பவர் ஒரு வினோத துகள் அடங்கிய ஒரு வினோத புலம் (ஃபீல்டு)
ஒன்று இருப்பதாக கண்டுபிடித்தார்.அது ஹிக்ஸ் பார்டிகிள் என்றும் ஹிக்ஸ்
ஃபீல்டு என்றும் மற்ற துகள்கள் மற்றும் பீல்டுகளோடும் இருப்பதாக
விவரித்தார்.ஒன்றுமே இல்லாத வெறுமை (வேக்குவம்)யிலிருந்து நிறையால்
நிரவப்பட்ட இந்த பிண்டப் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அவரே அவிழ்த்து
விட்டார்.அது ஒரு சுவாரஸ்யமான ஆனால் நுண்ணறிவுக்குத் தீனி தருகின்ற
சமாச்சாரம்.அது என்ன? பார்ப்போம்.

LHC என்ப‌து லார்ஜ் ஹேட்ரோன் கொலைடெர் எனும் “ஹேட்ரோன் துக‌ள்”மோது
உலையின் பேர‌ணு உலை ஆகும்.இதில் ப்ரோட்டான் துக‌ள்க‌ளை ஒளியின்
வேக‌த்தில் பாய‌ச்செய்து எதிரும் புதிருமாய் மோத‌விட்டு சோத‌னை செய்யும்
போது சித‌றிய‌ புது துக‌ள் ஒன்று தான் இந்த‌ ஹிக்ஸ் துக‌ள்.போஸான்
துக‌ளான‌ இதில் நிறை எப்ப‌டி வ‌ந்த‌து என்ப‌தே புதிர்.இது ந‌ம்
க‌ண‌க்கீட்டுக்குள் அட‌ங்காம‌ல் ந‌ழுவி விடுகிற‌து.ம‌றுப‌டியும் இது
எப்ப‌டி எப்போது உருவாகும் என்ப‌து இன்னொரு ம‌ர்ம‌ம்.ம‌ர்மமாய்
தோன்றுவ‌து க‌ட‌வுள் என்றால் இது “ஒரு க‌ட‌வுள் துக‌ள்” (GOD PARTICLE)
என்றும் சில‌ விஞ்ஞானிக‌ள் த‌த்துவார்த்தமாய் கூறுகிறார்க‌ள்.இது திகில்
நிறைந்த‌தாக‌ இருப்ப‌தால் “பூத‌த் துக‌ள்”(PHANTOM PARTICLE) என‌வும்
குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து.

======================

Series Navigation

ஈ.பரமசிவன்

ஈ.பரமசிவன்