பழமொழியும் பாட்டியும் அம்மாவும்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

தேவமைந்தன்


கார்த்திகைக்கு மிஞ்சின
மழையுமில்லை
கர்ணனுக்கு மிஞ்சின
கொடையுமில்லை –
பாட்டிக்கு இதை எப்படியாவது,
ஒரு தடவையாவது சொல்லிவிட
வாய்ப்பில்லாமல், போன
வருடமும் தான் போய்விட்டது.
அவர்களும் கூடத்தான்…
அம்மாவாவது இந்தக் கார்த்திகைக்கு
இருந்திருக்கக் கூடாதா ?
பழமொழியின் மறுபிரதியையாவது
வாய்க்குவாய் வாசித்திருப்பா ‘ங்களே!
பழமொழியும் பாட்டியும்
கைகோத்துக்கொண்டு வந்து —
கார்த்திகைக் குளிர்மழை இரவில்,
இழுத்துப் போர்த்திக் கொண்டு
இமைகளுக்குள் விழிகள் ஒடுங்கி
இழுத்துக்கொண்டு,
என்னைவிட்டுவிட்டு நானே எங்கோ
சென்று, படிமங்களின் உலகில்
சஞ்சரித்துக்கொண்டு மீளமுடியாமல்
மிதந்து கொண்டிருந்தபோது –
தைரியமாய் அழைத்துப்
போய்விட்டார்களோ..
ஐந்தரைவயதுவரை பால்கொ
டுத்து….
சொந்தமாய் வாழத் தெரியாமல்
தனிமையை ரசிக்கத் தெரியாமல்
மருண்டுவாழும் தன்பிள்ளையை
இந்த உலகில் விட்டுவிட்டு.
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்