பவளமணி பிரகாசம்
கடு கடுவென்று முகமிருக்கு,
சிடு சிடுவென்று பேச்சிருக்கு.
உப்புப் போட கவனமிருக்கு,
சூடாக காப்பி போட்டிருக்கு.
கொலுசில் இளமை ஒலிக்குது,
கொஞ்சல் மட்டும் விலக்குது.
பாட்டில் சரச சங்கேதம் புரியுது,
பார்த்தால் கழுத்தை நொடிக்குது.
சினிமா பார்க்க கூப்பிட்டால்,
வெளியே உண்ண விரும்பினால்,
வேண்டா வெறுப்பாய் கிளம்புது,
வேப்பங் காயாய் கசக்குது.
நாட்டு நடப்பில் நாட்டமாய்
நானாய் கருத்து கூறினால்,
வாதம் ரொம்ப வளருது,
வம்புச் சண்டை போடுது.
வலிய நானும் பேசினால்
வாயை மூடிக் கொள்ளுது;
உப்புப் பெறாத சங்கதியும்
வீண் விவகாரமாய் மாறுது.
பழைய பகையை நினைக்குது-
வார்த்தையெல்லாம் சாட்டை.
வயது ஏறிப் போனாலும்
வீம்பு ரொம்ப காட்டுது.
கருத்தில் புதுமை மிளிருது,
கடுப்பாய் எனைத் தவிர்க்குது.
தாசனாகத் தண்டனிட்டேன்,
தாமரை இலை நீராய் நழுவுது.
கணிணியில் பொழுதைக் கழிக்குது,
கதைகள் கூடிப் பேச மறுக்குது.
தனியறையில் படுத்துறங்குது,
தவிப்பை ரசித்து களிக்குது.
ஏளனமாய் நகைக்கையிலே,
அந்த வலி கூட இதமாயிருக்கு.
முகத்தைத் திருப்பிக் கொண்டாலும்,
கரையில் மோதும் அலையானேன்.
கள்ளாய் மனசும் கிறங்குதே,
கள்ளம் புரிஞ்சி போனதே.
முள் மூடிய பலாச் சுளை இதுவோ ?
முழுதாய் பகிர்ந்த உணர்விதுவோ!
சூரியனைச் சுற்றும் பூமி,
பூமியைச் சுற்றும் நிலவு-
மாறாத இயற்கை நியதி,
அதுவும் ஒரு யந்திர கதி.
உற்றார் உறவினர் ஆசி கூற,
ஆசையாக கலியாணம் முடிச்சோம்,
பிள்ளைகளைப் பெத்து வளத்தோம்,
ஆளாக்கி அனுப்பியும் வச்சோம்.
திரும்பத் திரும்பத் தனி வீட்டிலே,
நினச்சி நினச்சித் திகட்டலியே!
வாழ்நாளும் வீணாய் போகுதே,
விருந்து இன்னும் முடியலியே!
பொத்திப் பொத்தி வச்சாலும்
பூவின் வாசம் வீசாதோ ?
பாறை இறுகிக் கிடந்தாலும்
அடியினில் சுனை ஊறாதோ ?
அலங்கார வல்லியே! அல்லியே!
அரக்கி போல் ஆடுறியே!
ஊனும், உயிரும் உருகிடுதே!
உலையில் போட்டு அவிக்காதே!
ஏதுக்கடி இந்த வீராப்பு ?
இன்னும் என்ன பொல்லாப்பு ?
எட்டி எட்டிச் செல்லும் என் கிழவியே!
உன் தடந்தான் என்றும் என் வழியே!
***
pavalamani_pragasam@yahoo.com
- நீயும் பாரதியும்.
- நீரும் நானும் சிலபொழுதுகளும்
- கடலின் கூப்பாடு
- ஒன்பதில் குரு
- பலா
- பி. வி. காரந்த்
- ரஜினி என்ற ஆதர்சம்
- ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் – 27 -எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘)
- பெண்கவிகள் சந்திப்பு-2002 இடம்-புதுவை நாள்-11.9.02
- ராகி சப்பாத்தி/ரொட்டி
- மேதி பரத்தா (வெந்தயக்கீரை சப்பாத்தி)
- இந்திய அமெரிக்க வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் [1910-1995]
- இந்திய தட்பவெப்ப துணைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது
- இணையத்தின் புனிதர்
- சக்திமுக்தியடைந்தவளாகினள் யொருதினத்தில்.
- பாிசுப் பேழை
- தெரியாமலே
- பெண்களின் காலங்கள்.
- நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்
- குப்பைத் தொட்டி
- இன்னொரு பிறவி வேண்டும்…….
- இடி, அடி, தடி
- சிருஷ்டி
- மேலே பறந்து பறந்து….
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 13 2002 (காவிரி,செப்11, அமெரிக்காவில் முஷாரஃப், கல்லூரிகள்)
- தமிழாசிரியர்கள் என்ன செய்யலாம் ? : கனல் மைந்தன் கவனத்திற்கு
- அண்ணல் சாம்பலாருக்கு அடியேன் அஞ்சல்
- உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..
- சங்கரன் என்னும் சில மனிதர்கள்…
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)