நந்தா விளக்கு !

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சொந்தமாய் வீடொன்று இருந்தாலும்
தந்திரமாய் மறுத்துப் பொய்யுரைத்து
நந்தவனம், நீச்சல் குளம் சூழ்ந்திட்ட
அந்தமிகு அரண்மனை போல் வீடு கேட்டு
இந்திய அரசினையே இம்மியும் கூசாமல்
தொந்தரவு செய்கின்ற தலைவரிடையே
‘இந்தா, இந்தா ‘ இலவச வீடென்று
முந்திக்கொண்டு அரசினரே
தந்தாலும் மறுதலித்துத் தகைமையொடு
சொந்தக் கால்களிலே நின்றபடி
‘வந்தனம்! ‘ என்று கூறி, தானாக
வந்ததையும் கைகூப்பிப் புறக்கணித்து,
கந்தலைத் தைத்துடுத்திக் காசுதேடும்
உந்துதல் உமியளவும் இன்றி வாழ்ந்த
நந்தாக்கள் நலியும் நாள்
இந்தியாவில் என்று வரும் ?

(இந்தியாவின் தற்காலிகப் பிரதமராய்ச் சில மாதங்களே பதவி வகித்த –
வறுமையில் செம்மையுடன் வாழ்ந்த – குல்சாரிலால் நந்தாவைப் பற்றியது.)

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா