தேவதேவன் கவிதைகள் : 2. மரம்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

தேவதேவன்

1 ] பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?

பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

3] பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

4] தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்

தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை

அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

5] பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?

அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?

ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?

அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது

கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .

6] நச்சுமரக்காடு

ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?

அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்

எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

7] பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.

8] புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘
எல்லாம் வெகு சுலபம்

புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .

மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.

அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .

முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

9] இலையசைவு

விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலை

அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்

இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .

கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும்

தேவதேவன்

சும்மா இருக்க வந்ததுதான் என்றாலும் கவிதையால் நமது உலக வாழ்வை மதிப்பிடாமல் இருக்க் முடியவில்லை .உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று அதற்காக கவிதையை உலகவாழ்வு மதிப்பிட்டு விடலாமா ? விட முடியுமா ?கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். அதாவது கவிதை தன்னைத்தான் மதிப்பிட்டுக் கொள்கிறது.வேறு எதற்கும் அந்த அதிகாரத்தை அது கொடுக்கவில்லை .

ஓர் இலக்கியக்கூட்டத்தில் பிரமிள் தனது கவிதைகள் குறித்து கேட்கப்பட்டபோது ‘ அவையெல்லாம் ரத்தினங்கள் ‘ [gems] என்றார். அதற்கு அந்த வாசகர் ‘ அப்படியானால் அவை வெறும் அணிகலன்கள்தானா ? ‘ ‘ என்று எதிர் வினை செய்ததற்கு அவர் ‘ ரத்தினம் — அது ஓரு சக்திமிக்க ஆயுதம்! ‘ என்றார்

பிரமிள் தனது வாசகனுக்கு தான் சென்றடைந்த உயரத்துக்கு அவனை அழைத்துச்செல்ல அடிவாரத்திலிருந்து உச்சிவரை படிகளை அமைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனது ஆர்வத்திலும் திராணியிலும் நம்பிக்கை வைத்தபடி வெகு வேகமாயும் லாவகமாயும் தாவித்தாவிசெல்வது அவர் சிந்தனை.

எனது நீள் கவிதையான கானகவாசியில் ரத்தினத்தை தேடிசெல்கிறது ஒருகூட்டம் .இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டியாகிய ரத்தினம் இங்கு பேராசையின் குறியீட்டாக ஆவது தேர்ந்த வாசகர் ஒருவரை திடுக்கிட வைத்தது .

ஒரு சந்தர்ப்பத்தில் ‘….அப்படியானால் கவிதை இந்த வாழ்வுக்கு ஒன்றும் செய்யாதா ? ‘ என்று கேட்கப்பட்ட போது நான் சொன்னேன் ‘ ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி என்ற முறையில் நம்மிடம் கேட்டு நிற்கும் விலை என்ன ? மனித சமூக அளவுகோல்களால் நாம் அதற்கு அளித்திருக்கும் மதிப்பு, விலை மனிதனை படுகுழிக்குள் தள்ளிவிடக்கூடியது என்ற உண்மை நமக்கு உணர்த்துவது என்ன ? ரத்தினம் ஒரே சமயம் சிருஷ்டிகரத்தின் குறியீடாகவும் , பேராசையின் குறியீடாகவும், நிகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிகொள்ளும் முறையே கவிதை என்பது … ‘

உண்மைதான் , ஒரு பொருளின் உலகியல் மதிப்பை அறவே ஒதுக்கிவிடுகிறது கவிதை .ஆகவே நாம் மீண்டும் மீண்டும் இதை சொல்லிக் கொள்கிறோம் ,உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட்டுவிட முடியாது .கவிதையை கவிதையால்தான் மதிப்பிட முடியும். [நுழை வாயிலிலே நின்றுவிட்ட கோலம் முன்னுரை 19991]

தேவதேவன் கவிதைகள்
==================
1 ] குளித்து கரையேறாத கோபியர்கள்
2 ] மின்னற்பொழுதே தூரம்
3 ] மாற்றப்படாத வீடு
4 ] பூமியை உதறி எழுத மேகங்கள்
5 ] நுழைவாயிலிலே நின்றுவிட்ட கோலம்
6 ] சின்னஞ்சிறிய சோகம்
7 ] நட்சத்திர மீன்
8 ] அந்தரத்தில் ஓர் இருக்கை
9 ] நார்சிசஸ் வனம்
10] புல்வெளியில் ஒரு கல்
11] விண்ணளவு பூமி
பிற
===

12] கவிதை பற்றி [உரையாடல்]
13] அலிபாபாவும் மோர்ஜியானாவும் [நாடகம்]

கிடைக்குமிடம்
============
தேவதேவன் , [ பிச்சுமணி கைவல்யம்] 4/5 மணி நகர், தூத்துக்குடி- 1 ,தமிழ் நாடு ,இந்தியா.
ஃபோன் 0461 338240

பார்க்க
http://www.thinnai.com/ar0812023.html
http://www.thinnai.com/pm0812024.html

=================================

Series Navigation