தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

நிகழ்ச்சிகள்



தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3 மணிக்கு
சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது.
குத்துவிளக்கேற்றி அமைப்பைத்தொங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு அவர்கள் இசைந்துள்ளார்.பாவலர் த.பழமலை அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.பேராசிரியர் பிரம்மராசன் அவர்கள் தொடக்கவுரையாற்ற உள்ளார்.இலக்கியமும் இயக்கமும் என்னும் தலைப்பில் பாவலர் செயபாசுகரன் அவர்களும் கலை இலக்கியக் களத்துமேடு என்னும் பொருளில் பாவலர் பச்சியப்பன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

வாழ்த்துரை வழங்கி அமைப்பைப் பெருமைப்படுத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் அப்துல்ரகுமான்,முனைவர் பொற்கோ,உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்,பாவலர் இன்குலாப்,தோழர் சி.மகேந்திரன்,எழுத்தாளர் பிரபஞ்சன்,தோழர் தியாகு,தோழர் ச.தமிழ்ச்செல்வன்,எழுத்தாளர் இரவிக்குமார்,திரைப்பட இயக்குநர் பாரதி கிருட்டிணகுமார்,எழுத்தாளர் இராசேந்திரசோழன்,முனைவர் க.பன்னீர்செல்வம் ஆகியோர் இசைந்துள்ளனர்.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களின் நன்றியுரையிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களின் தொகுப்புரையிலும் விழா சிறக்க உள்ளது.திருக்கோவிலூர் அபிராமி-ஆனந்தி அகியோரின் நாகசுர இசையும்,பொங்குதமிழ்ப் பண்பாட்டுக் கலைப்பயிலகத்தின் மகளிர் பறைமுழக்க இசை நடனமும் நடைபெற உள்ளன.

அனைவரும் கலந்துகொண்டு விளிம்புநிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் கலை,இலக்கிய வெளிப்பாட்டு விழிப்புணர்ச்சிக்குத் துணைநிற்கலாம்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி


muelangovan@gmail.com

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்