தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

வைஷாலி


மராட்டிய மன்னர்கள் நன்கு கற்றவர்களும் சிறந்த எழுத்தாளர்களுமாக , பக்தியில் சிறந்தும் விளங்கினர்.

வெங்கோஜி ராவ் போன்ஸ்லே ( 1676 முதல் 1684 வரை):

********

இவர் தான் தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னர். வெங்கோஜி மன்னர் வேறு யாரும் அல்ல நாம் மிகவும் அறிந்த மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் சகோதரர். இவ்விருவரின் தந்தையான ஷாஜிராவ் போன்ஸ்லேயின் இரண்டாவது மனைவி மற்றும் ஸ்ரீமன்ந்த் பாஜிராவ் மொகிதே பொங்வாடிகரின் மகளுமான ஸ்ரீமன்ந்த் துகு அனு ராஜே சாகிப்பின் இரண்டாவது மகன்தான் இந்த வெங்கோஜி ராவ் போன்ஸ்லே.

வெங்கோஜி ராஜாவின் ஆண்டுகாலம் 1630 முதல் 1684 வரை. ஆனால் இவர் அரசாண்ட காலம் 1676 முதல் 1684 வரை. இவர் ஆட்சியின் போது இவரது சகோதரரான சத்ரபதி சிவாஜி ராஜாவின் மகன் சாம்பாஜி ராஜா வருகை புரிந்தார். அவரை மகிழ்விக்கும் பொருட்டு தஞ்சை அரண்மனை சமையலர்கள் ஒரு புதுவகையான சமையல் செய்யவேண்டும் என்று ஒரு பதார்த்தம் செய்தனர். அது சாம்பாஜி ராஜாவுக்கு மிகவும் பிடித்து போய்விடவே அவரது பெயரையே அதற்கு வைத்தனர். அந்த பதார்த்தம் எது தெரியுமா இன்று நாம் பரவலாக உபயோகிக்கும் சாம்பார் தான் அது.

வெங்கோஜி மன்னர் யாத்திராயக திருச்சியில் சக்திவாய்ந்த அம்மனான சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வரும் பொழுது அவரது கனவில் அம்மன் தோன்றி, தஞ்சை அருகே இருக்கும் புன்னைமரங்கள் சூழ்ந்த புன்னைநல்லூரில் அம்மன் இருப்பதாக் தோன்ற, மன்னர் சமயபுரம் அம்மனை தரிசித்து விட்டு புன்னைநல்லூர் சென்று தன் கனவில் தோன்றிய அந்த இடத்தை கண்டு பிடித்தார் அங்கே புன்னை மரங்கள் சூழ்ந்த இடத்தில் அம்மன் சிலை இருப்பதையும் கண்டார். அங்கேயே அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அது புன்னைநல்லூர் மாரியம்மன் என்று வழங்கப்படுகிறது.

வெங்கோஜி ராஜாவின் பத்து மகன்களில் ஷாஜிராவ் போன்ஸ்லே, சரபோஜி ராவ் போன்ஸ்லே மற்றும் துகோஜி ராவ் போன்ஸ்லே ஆகிய மூன்று மன்னர்கள் தஞ்சையை ஆண்டனர். அவர்களின் காலங்கள்:

ஷாஜிராவ் போன்ஸ்லே (1684 முதல் 1712 வரை):

*******

இவரது ஆட்சிகாலம் 1684 முதல் 1712 வரை. இவரது ஆட்சிக்காலத்தில் மூன்று சகோதரர்களும் அதாவது இவர் மற்றும் சரபோஜி ராவ், துகோஜி ராவ் ஆகியோரும் சேர்ந்து ஒற்றுமையாக அரசாண்டார்கள். ஷாஜிராவ் போன்ஸ்லேயின் இறப்பிற்கு பிறகே இவரது சகோதரர் சரபோஜி ராவ் அரியணை ஏறினார்.

சரபோஜி ராவ் போன்ஸ்லே I (ஒன்று) (1712 முதல் 1728 வரை):

*****

இவரது ஆட்சிக் காலம் 1712 முதல் 1728 வரை. இவர் முதலாம் சரபோஜி ராஜா. இவர் ஒரு பிள்ளையை தத்து எடுத்து வளர்த்தார். அவர் பெயர் ஷாஹ்உஜி ராவ். இந்த ஷாஹ்உஜி ராஜாவைப் பற்றி அவரது ஆட்சிக்காலம் முறைப்படி வரும்போது பார்க்கலாம். முதலாம் சரபோஜி ராவ் போன்ஸ்லேயின் இறப்பிற்கு பிறகு அவரது சகோதரரான துகோஜி ராவ் அரியணை ஏறினார்.

துகோஜி ராவ் போன்ஸ்லே (1728 முதல் 1736 வரை):

******

இவரது ஆட்சிக்காலம் 1728 முதல் 1736 வரையிலானது. துகோஜி மன்னர் பாடல்கள் பாடுவதில் சிறந்த புலமை பெற்றவர் மற்றும் சிறந்த இசை கலைஞர். சங்கீத சாராமிருதா இவர் இயற்றியதாகும். உத்தரராமாகரித்ரா மற்றும் கிரிஹமத்யாவை எழுதியவரும் இவரே. இவரின் மகன்கள் வெங்கோஜி பாபா சாகிப் போன்ஸ்லே, பிரதாப் ராவ் போன்ஸ்லே. துகோஜி ராஜா தன் தந்தையின் பெயரான வெங்கோஜி என்பதையே தன் மகனுக்கும் வைத்துள்ளார். அவரின் ஆட்சிக்காலம் பற்றிப் பார்ப்போம்.

வெங்கோஜி ராவ் போன்ஸ்லே II (இரண்டு):(1736 முதல் 1737 வரை)

******

இவரது ஆண்டுகாலம் 1696 முதல் 1737 வரை. ஆனால் இவரது ஆட்சிக்காலம் 1736 முதல் 1737 வரை மட்டுமே. இவருக்கு தன் தாத்தாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளதால் இவர் இரண்டாம் வெங்கோஜி ராவ் என்று அழைக்கப்பட்டார். இவர் இறப்பின் பிறகு இவரது மனைவி சிஜன் பாய் போன்ஸ்லே அரியணை ஏறினார். இவரது ஆட்சிக்காலம் 1737 முதல் 1740 வரை.

சிஜன் பாய் போன்ஸ்லே (1737 முதல் 1738) :

******

வெங்கோஜி ராவ் போன்ஸ்லே II இறப்பின் பிறகு இவரது மனைவி சிஜன் பாய் போன்ஸ்லே அரியணை ஏறினார். இவரது ஆட்சிக்காலம் 1737 முதல் 1738 வரை.

காட்டு ராஜா (1738 முதல் 1739 வரை)

*******

ஷாஹ்உஜி ராவ் போன்ஸ்லே 🙁 1740 முதல் 1749 வரை)

*****

இவரை நினைவிருக்கிறதா ? இவர்தான் முதலாம் சரபோஜி மன்னரின் தத்துப்பிள்ளை. முன்னரே குறிப்பிட்டிருந்தோமே அவரைப்பற்றி அவரது ஆட்சிக்காலத்தில் பார்க்கலாம் என்று. அவரது ஆட்சிகாலம் இப்பொழுதுதான் வந்துள்ளது. அதாவது இரண்டாம் வெங்கோஜியின் மனைவியின் ஆட்சிக்குபிறகு தான் இவரது ஆட்சிக்காலம் வந்துள்ளது. ஆட்சிக்காலம் 1740 முதல் 1749 வரை. இவருக்கு பிறகே துகோஜியின் இரண்டாம் மகனான பிரதாப் ராவ் அரசாட்சி ஏற்றுள்ளார்.

பிரதாப் ராவ் போன்ஸ்லே :(1749 முதல் 1763 வரை.)

********

இவரது ஆட்சிக்காலம் 1749 முதல் 1763 வரை. இவரின் மகன்கள் துளஜாஜி ராவ், அமீர் சிங் ராவ் ஆவர்.

இவர்களின் ஆட்சிக்காலங்கள் பற்றிப் பார்ப்போம்.

துளஜாஜி ராவ் போன்ஸ்லே (1763 முதல் 1787 வரை):

*****

இவரது ஆட்சிக்காலம் 1763 முதல் 1787 வரையிலானது.

இவரது மகளுக்கு ஒருமுறை கண்பார்வை போய்விட, அவரது கனவில் புன்னை நல்லூர் மாரியம்மன் தோன்றி மகளை அழைத்துக்கொண்டு தன் ஆலயம் வரும்படி கூற, அதன்படி மன்னர் தம் மகளை அழைத்துக் கொண்டு அம்மனை தரிசிக்க சென்றார். அப்போழுது அங்கே உள்ள எண்ணற்ற தீபங்களை பார்க்கையில் மன்னரின் மகளுக்கு ஒருமுறை கண்பார்வை போய்விட, அவரது கனவில் புன்னை நல்லூர் மாரியம்மன் தோன்றி மகளை அழைத்துக்கொண்டு தன் ஆலயம் வரும்படி கூற, அதன்படி மன்னர் தம் மகளை அழைத்துக் கொண்டு அம்மனை தரிசிக்க சென்றார். அப்போழுது அங்கே உள்ள எண்ணற்ற தீபங்களை பார்க்கையில் மன்னரின் மகளுக்கு பார்வை திரும்பியது, மன்னரின் படம் இன்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ளது.

இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே II (இரண்டு):

****

1787-1793 முதல் முறையாக அரியணை ஏறினார் இவரது பதவியை அந்நாளைய சென்னை கவர்னர் தகுதியற்றது (Invalid) என்று கூறிவிட மன்னர் சரபோஜி அரியணை இறங்கினார்.

அமீர்சிங் ராவ் போன்ஸ்லே :(1793 முதல் 1798 வரை)

********

இவரின் ஆட்சிக்காலம் 1793 முதல் 1798 வரை. மன்னர் சரபோஜி அரியணை இறங்கியதைத் தொடர்ந்து மன்னர் துளஜாஜியின் தம்பியும் மன்னர் பிரதாப் சிங்கின் மகனுமான அமீர்சிங் அரியணை ஏறினாலும் மன்னர் சரபோஜியின் சார்பாகவே அவர் அரசாண்டார். பின்னர் 1798 ஆம் ஆண்டு மன்னர் சரபோஜியிடம் அரியணையை திரும்ப அளித்தார்.

இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே : இரண்டாம் முறை :(1798 முதல் 1833 வரை)

******

துளஜாஜியின் தத்துப்பிள்ளையான இவரின் ஆட்சிக்காலம் 1787-1793 மற்றும் 1798 முதல் 1833 வரை. இவர் தேவேந்திர குறவஞ்சி எழுதியவர். தஞ்சை சரஸ்வதி மஹால் இவர் காலத்தில் மிகவும் செழிப்படைந்தது இவர் உலகில் உள்ள அரிய இலக்கியங்கள் மற்றும் சிறந்த நூல்களை வாங்கி அதை தம் நூலகத்தில் வைத்தார் .

சரஸ்வதி மஹாலில் உள்ள அரிய நூல்கள்

மானுசிகிர்ப்ட் :

மொழி : சமஸ்கிருதம்

ஆலிலை : 19497

தாள் : 18002

மொத்தம் : 37499

மொழி : தமிழ்

ஆலிலை : 3341

தாள் :

மொத்தம் : 3341

மொழி : தெலுகு

ஆலிலை : 742

தாள் : 41

மொத்தம் : 783

மொழி : மராத்தி

ஆலிலை :

தாள் : 3052

மொத்தம் : 3052

மொழி : ஹிந்தி

ஆலிலை :

தாள் : 22

மொத்தம் : 22

நூலகத்தில் உள்ள நூல்கள் எண்ணிக்கை :

தமிழ் : 11818

ஆங்கிலம் : 11403

சம்ஸ்கிருதம் : 12816

தெலுகு : 1684

மராத்தி : 2458

ஹிந்தி : 2974

மற்றவை : 9075

மொத்தம் : 52228

சரஸ்வதி மஹாலில் இன்னும் அனைத்துவிதமான நூல்களும் இருக்கின்றன.

இவரது காலத்தில் அபிராமி பட்டர் எழுதிய புகழ் பெற்ற அபிராமி அந்தாதி எழுதப்பெற்றது.

அபிராமி பட்டர் திருகடவூரில் வாழ்ந்து வந்தார் (அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம் உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்பொழுது சரபோஜி மன்னர் அன்னை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர் மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன நாள்(திதி) என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பெளர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.

சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். இந்த தவறை அன்னை அபிராமியான உன்னை நினைத்தே நான் யோக நிலையில் மூழ்கி இருந்தமையால் செய்ய நேரிட்டது. அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.

அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல் முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும் கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதை பாராட்டியே ஆகவேண்டும். அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்….. ‘ என்று தொடங்க 100வது பாடல் ‘ உதிக்கின்றனவே ‘ என்று முடிகிறது.

அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் ‘விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன….. ‘ அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை (தடங்கா அல்லது குண்டலம்) ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.

இவரது மகன் பெயர் சிவாஜி ராவ் போன்ஸ்லே ஆகும்.

சிவாஜி ராவ் போன்ஸ்லே : (1833முதல் 1855வரை)

******

இவரது ஆட்சிக்காலம் 1833முதல் 1855 வரையிலானது.

******

தஞ்சையை எப்படி ஒரு சிப்பாயைக்கூட இழக்காமல் மராட்டியமன்னர்கள் கைப்பற்றினார்களோ அதைப்போலவே இவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் (Dotorine of Lapse மூலம்) கைப்பற்றினார்கள்.

மராட்டிய மன்னர்கள் என்றாலே சத்ரபதி சிவாஜிதான் நம் நினைவுக்கு வருவார். அதேபோலவே தஞ்சையை ஆண்டகடைசி மன்னரின் பெயரும் சிவாஜிதான்.

மன்னர்கள் காலத்தில் ராஜாங்கத்தின் கஜானா சாவி காடே என்ற பிரிவினிரரின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. இவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், இவர்கள் கில்லேதார் மான்கோஜி ராவ் காடே (சாவி வைத்திருப்பவர்கள்) என்றே வழங்கப்பட்டனர்.

சகோதரர்களின் ஒற்றுமைக்கு இந்த மன்னர்கள் உதாரணமாக திகழ்ந்தார்கள். தஞ்சையின் முதல் மன்னர் வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயின் இறப்பிற்கு பிறகு இவர்கள் ஒற்றுமையாக அரசாண்டார்கள்.

***

Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி