கவியோகி வேதம்
பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை
..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா!
..பள்ளியாசான் பலகையிலே ‘நரி ‘வரைந்தே இதுநரிதான்
….பார்-என்றால் அதுநரியா கும்மா ?
பார்ப்பதுவும் ஒருதோற்றம்! கதைகளில்பொய் பரிமாற்றம்!
….பகுத்தறிவும் ஏமாற்றும் அம்மா!
..பலர்முன்னே சிலர்குணத்தை அப்படியே சொல்லிநின்றால்,
….பலமான விரோதி-நான் அம்மா!
சேர்த்துவெண்ணெய் உருண்டைக்குள் மருந்துவைத்து வெண்ணையென்று
..சேய்க்குத்தாய் பொய்சொல்வாள் அம்மா!
..செகம்முழுதும் காமம்வைத்து சென்மத்தை நிலைநிறுத்த
…..தேவிநீயும் ‘மாயை ‘செய்தாய் அம்மா!
வேர்த்திருக்கும் மேனியுடன் உழைப்பவர்க்கு வறுமையையும்,
..வேதனையும் ஏன்தந்தாய் அம்மா!
… வெய்யிலிலே வேகாதோர் பணம்சேர்ப்பார்; இதுசொன்னால்,
..விரோதம்தான் வந்திடுமே அம்மா!–(1)-
சொல்மாறிப் பேசிவிட்டார் ‘மெய் ‘காக்கும் ராமனுமே;
..சொன்னாலே விரோதமாம் அம்மா!
…சுக்கிரீவன் வாலியுடன் சண்டையிட்ட முதல்போரில்
..சொன்னசொல்லைக் காத்தாரோ அம்மா ?
சொல்வெடிக்கும் இலக்குவன்கண் மாலைபெற்ற பின்னர்தான்
..சுக்ரீவனைக் ‘கண்டு ‘கொண்டார் அம்மா!
…சொல்கவிதைத் திறனாலே ‘பலர் ‘கதையைக் கிளறிநின்றால்,
..சூடாகும் கவிஅரங்கம் அம்மா!
நல்லூராம் நாங்கூரில் பிறந்ததிரு ‘மங்கையாழ்வார் ‘
..நன்றாகக் கொள்ளைசெய்தார் அம்மா!
..நல்லசெயல் ‘திருட்டு ‘என்(று)அப் பணத்தைவைத்தே கைங்கர்யம்,
.. நாயகனும் ஏற்றது-ஏன் அம்மா ?
வல்லவர்கள் வாதத்தைச் செகப்புரட்டாய்ப் புரட்டிநின்று
..வக்கணையாய்ப் பேசுகின்றார் சும்மா!
… வயதாக,வயதாகச்,சொற்களிலே ‘உன்ேfாதி ‘
… ‘மண் ‘அளவும் தெரியலையே அம்மா!
***
- தெரு
- நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
- நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3
- எனக்குப் பிடித்த கதைகள் – 6 – ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘ – ஞானம் என்னும் ஒளித்திரி
- ஒரு பேராசானின் மறைவு
- இட்லி ஆராய்ச்சி
- பட்டாணி பாத்
- பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு
- அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- மீண்டும் உயிர்தல்
- தூங்கும் மழைத்துளி
- கிருஷ்ணன் வைத்த வீடு
- சொன்னால் விரோதம் ?
- சொன்னால் விரோதம் அம்மே!
- தொடரும் பிரிவுகள்
- லாடம் அடித்த கனவுகள்
- பூஜ்யமாய் ஒரு கனவு.
- என் பிரச்சனை.
- கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்
- இந்தியாவின் இறந்த காலமே ஆயுதம் ஆகிறது
- கலாச்சாரம் பற்றி கடைசியாக….
- இரு பேரப்பிள்ளைகள்