தமிழ்மகன்
இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன்.
கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து பசு கன்று போடப் போவதை வேடிக்கைப் பார்த்தார்கள். தங்கையின் மாமியார், “தலைச்சன் கன்னுனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்’ என்று ஆசுவாசமாகப் புறப்பட்டு வந்தாள்.
அதற்குள் அக்கம்பக்கத்துப் பசங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். மாமியார்க்காரி முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டு பசங்களை விரட்டினாள். பசங்கள் சற்று தூரம் ஓடிப்போய் நின்று கொண்டு மறுபடியும் பார்த்தார்கள்.
“ஆம்பளைங்க கூடத்தான் ஏன் இங்க நிக்கிறீங்க? வீட்டுக்குள்ள போங்க” என்றாள்.
“சரி, சுந்தரம் நீங்க வீட்டுக்குள்ள போங்க. நானும் சேரóமனும் இன்னைக்கு வேலூர் வரைக்கும் போறோம். நம்ம ஊருக்கு பஸ் வர்றதுக்காக ஏற்பாடு பண்றதுக்குத்தான்… நா வர்றவரைக்கும் இரு. போயிடாதே” என்றார்.
சுந்தரத்தோட தங்கை கல்யாணியைத்தான் முருகேசன் ஆறு மாதத்துக்கு முன்பு கல்யாணம் பண்ணினார். ஊர் பிரசிடண்ட் எலக்ஷனில் சுடச்சுட ஜெயித்திருக்கிறார். முருகேசன் கும்பிடுகிற மாதிரி படங்கள் இன்னும் சுவர்களில் வெளுத்துப் போய் இருக்கின்றன.
“ஊருக்கு பஸ் வருமா? எப்போ?” இவ்வளவு மகிழச்சியாகச் சுந்தரம் கேட்டதற்குக் காரணம், இப்போது கூட பத்து கிலோ மீட்டர் நடந்தேதான் வந்திருந்தார்.
“எல்லாம் உங்க தங்கிச்சி வந்த ராசிதான்.” முருகேசன் புன்சிரித்தார்.
“நீங்க பிரசிடென்டா ஆனதாலே இதெல்லாம் நடக்குது” என்றார் சுந்தரம். தம்மை இன்னும் கொஞ்சம் புகழ்வார் என்று முருகேசன் எதிர்பார்த்தார்.
சுந்தரம் அதற்குமேல் பாராட்டுவதாக இல்லை.
“சரி. எனக்கு டயம் ஆவுது. நா போயிட்டு வந்துட்றேன்” என்று முருகேசன் கிளம்பினார்.
கல்யாணி வந்து, “வாண்ணா சாப்பிடு” என்று அழைத்தாள்.
சுந்தரம் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால், பசுவைப் பார்த்தார். உட்கார்ந்து கொண்டிருந்த பசு எழுந்து நின்றது.
“அகைன்ஸ்ட்டா நின்னது யாரு?” இட்லி சாப்பிட்டுக்கொண்டே கேட்டார் சுந்தரம்.
“நம்ம முருகேஷுதான் ஜெயிச்சிது” என்றாள் ஆதிலக்ஷ்மி.
சுந்தரத்துக்குச் சங்கடமாகப் போய்விட்டது.
“அப்படியா…? ஆமா, எதிர்த்து நின்னது யாரு?” என்றார்.
அவ்வளவுதான். எப்படித்தான் அந்த அம்மாளின் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு விகாரம் ஏற்பட்டதோ தெரியவில்லை.
“அவன்தான்… சிங்காரம்” என்றாள்.
“நம்ம சிங்காரமா?”
“நம்ம சிங்காரம்… கழுதை ஜாதி புத்திய காமிச்சிடுச்சி பாத்தியா?” என்றாள்.
சிங்காரம் சேரியைச் சேர்óந்தவன். ஒன்றாவது முதல் பி.யு.சி வரை முருகேசனும், சிங்காரமும் ஒன்றாகவே படித்தார்கள். முருகேசனுடய படிப்பு சம்பந்தமான அத்தனை சந்தேகங்களையும் சிங்காரத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிராய்ச்சித்தமாக அவ்வப்போது பீஸ்கட்டும் போதெல்லாம் சிங்காரத்துக்குக் கடனுதவி செய்ய வேண்டியிருந்தது.
படிப்பு முடிந்ததும் நட்பெல்லாம் முருகேசனுக்கு அவ்வளவாக அவசியம் இல்லாமல் போனது. அப்படியே பழக வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்க் கட்டுமானங்களை மீற வேண்டியிருந்தது.
ஊரைப் பகைத்துக் கொண்டு சிங்காரத்திடம் பேசி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் முருகேசன் நினைத்தான். இவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு.
“என்னடா வேலை உனக்கு, அவன்கிட்ட?” என்று ஊர்ப் பெரியவர்கள் யாராவது கேட்டால், சிங்காரம் என்னோட ஃப்ரண்ட் என்று சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. “சும்மாதான்… படிச்சிக்குனு இருந்தோம்’ என்று எதையாவது சொல்லிச் சமாளித்து வந்தான்.
இந்த மாதிரி சமயத்தில்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வந்தது.
பத்து மணிக்கு ஒருமுறை பசுவைப் போய்ப் பார்த்தார். இன்னமும் அப்படியேதான் இருந்தது. வெளியே தெரிந்த முன்னங்கால் குளம்புகள் லேசாக ஆடின.
செய்திகல் முந்தித் தருகிற ஒரே நாளிதழான அதுஇந்த ஊருக்குப் பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தது. சுந்தரம் செய்திகளைப் புரட்டினார். தமிழ்ச்சினிமா மாதிரி நான்கு கொலை, இரண்டு கற்பழிப்பு , ஒரு எம்.எல்.ஏ. ஊழல்…. அதற்குள் மதியச் சாப்பாடு, சாப்பிட்டுவிட்டு தனõயாக மாடியில் போய்ப் படுத்தபோது, கல்யாணி ஒரு தம்ளர் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மிகவும் ரகசியமாக அவளுடைய நாத்தனார் எப்படிக் கொடுமைப்படுத்துகிறாள் என்று விளக்கினாள்.
கொஞ்ச நாளானால் சரியாகிவிடுவாள். நாமொன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே உறங்கிப் போனார்.
நான்கு மணிக்கு எழுப்பி காபி கொடுத்தார்கள். (மண்ணெண்ணெய் வாசனை) முருகேசன் வரவில்லை என்று தெரிந்தது. இனி பொறுப்பதிóல்லை என்று ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்தார்.
கல்யாணி தனியாக வந்து அம்மாவை ஒருமுறை வரச் சொன்னாள். நாத்தனார் கொடுமைகளை அம்மாவிடம் சொன்னால் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று நம்பினாள்.
“முருகேசன் வர்ற வரைக்கும் இரேம்பா” என்றாள் ஆதிலக்ஷ்மி.
“அவசரமா வேலை… இன்னொருமுறை வந்து…” என்று சொல்லிக்கொண்டே வந்துபோது… அந்தப் பசு.
காலையில் பார்த்த அதே மாதிரியை அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது.
“இன்னுமா போடலை?”
பசங்கள் யாரும் காணவில்லை. வெறுப்படைந்து போய்விட்டிருக்கிறார்கள்.
“இது கிடேரி பசு… அதான் கஷ்டபடுது” என்றாள் ஆதிலக்ஷ்மி.
“கிடேரின்னா?”
“அப்படின்னா இதான் பர்ஸ்ட்டு கன்னு போடுதுன்னு அர்த்தம்.”
தூண் மறைவிலிருந்து கல்யாணியின் நாத்தி சொன்னாள். அவளுக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் செய்துவிட வேண்டும் என்றும் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
“இப்ப என்னா பணóறது?” என்றார் சுந்தரம்.
“டேன்ஜர்}தான்” என்றாள் மறுபடியும் அவள். எது எடுத்தாலும் ஒரு ரூபா” மாதிரி கட்டையான குரல். எதற்காகவோ அவளுக்கு மணிமொழி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பக்கத்தில் எங்காவது வெர்ட்டினரி ஹாஸ்பிடல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
“கன்னு உள்ளயே செத்துடுச்சி போல இருக்குது” என்றாள் ஆதி.
யோசிக்க யோசிக்கப் பசுவுக்குக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தார் சுந்தரம்.
“மாட்டாஸ்பித்திரி பக்கத்தில் எங்கயாவது இருக்குமா?”
மறுபடியும் மணிமொழிதான் “ம்” என்றாள்.
“எங்கே?” என்ற சுந்தரம் பதட்டத்துடன் கேட்கவும், அவள் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ள ஓடினாள். அவள் அம்மா உள்ளே போய் விசாரித்துக் கொண்டு வந்து,
“சோழவரத்தில் இருக்குதாம்பா… இப்ப டயமாயிடுச்சே, போறதுக்குள்ள மூடிடுவான்” என்றாள்.
“பின்னே எப்படி?”}இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் முண்டங்களே? என்று கேட்பதற்குப் பதில் இப்படிக் கேட்டார்.
“….மாட்டு வைத்தியமெல்லாம் அவன்தான் செய்வான்” என்று மெதுவாக முனகினாள்.
“யாரு?”
“யாரு…. அந்த நாகன்தான்”
“எங்க இருக்கு அவர் வீடு”
“அட வேணாம்ப்பா அவன் வரமாட்டான்.”
“பரவால்ல சொல்லுங்க.”
“இனிமே என் வீட்டுப் பக்கமே வராதடான்னு நாக்க பிடுங்கிக்கினு சாகற மாதிரி கேட்டுட்டேன். அவன் வர மாட்டான்.”
“எதுக்கும் நா கூப்பிட்டுப் பாக்கறேன்.”
“நம்ம சிங்காரத்தோட அப்பன்தான்.”என்றாள்.
சிங்காரத்தின் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். சேரியில் நுழைந்ததும் ஐந்தாவது வீடோ? ஆறோ?
ஆறுதான். நல்லவேளை நாகன் வீட்டில் இருந்தார்.
“வாப்பா, வாப்பா” எனóறு திண்ணையைத் துடைத்து உட்கார வைத்தார்.
“நாங்க இன்னாப்பா பாவம் பண்ணோம்? எங்களை இந்தப் பேச்சு பேசிபுட்டாங்களே” என்றார்.
“சிங்காரம் இóல்லையா?”
“இப்போ அம்பத்தூர்ல வேலை செய்றான்” என்றார் மெதுவாக.
“óமாடு ஒண்ணு கன்னு போட முடியாம அவஸ்தை படுது… நீங்க கொஞ்சம் வந்து பாருங்க” என்றார் சுந்தரம்.
“பாத்தாப் போச்சு… நம்மகிட்ட இன்னா இருக்குது? நம்ம முருகேஸý எல்கஷ்ன்ல நிக்குதுனு தெரிஞ்சிருந்தா நாங்க ஏம்பா நிக்கப் போறோம்? பர்ஸ்ட்டு சாமிப்பிள்ளைதான் நிக்கறதா சொன்னாங்க. உனக்குத் தெரியாதா அவரப்பத்தி? ஆளு பணம்னா கொலைகூடப் பண்ணுவாரு”
“முருகேஸýம் நா நிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சி. சரிதான்னு சேரில இருக்கவங்கெல்லாம் ஒண்ணா சேந்து சிங்காரத்தை நிக்கச் சொன்னாங்க… அப்புறம் பாத்தா முருகேஸý எதிர்த்து நிக்குது… இன்னா… பண்றது? போஸ்டர்லாம் அடிச்சாச்சி. போனா போது… வாபஸ் பண்ணிலாம்னு பாத்தா சேரி ஆளுங்கவுடலை…. ஊரை விட்ட சேரிலதான் ஜனம் தாஸ்தி அந்தத் தைரியம்….”
“அந்தக் கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க காலைல இருந்து…”
“சரி சரி” என்று எழுந்து வெளியே வந்தார்.
“நாங்க உங்க உப்பத் தின்னு வளர்ந்தவங்க… உங்களுக்குக் கேடு நினைப்பமா? யாரோ முருகேûஸக் கெடுத்துட்டாங்கப்பா. அதுவே வூட்டுக்கு வந்து ஜாதி, கீதில்லாம் பாக்காம மோர் இருந்தா எடுத்தான்னு கேட்குமே…” என்று நொந்து கொண்டே நடந்தார்.
“யாரும் கெடுக்கலை முருகேசன் சரியாயிடுவான்” என்றார் சுந்தரம்.
“எலக்ஷன் நெருங்க, நெருங்க சேரி ஆளுங்களுக்கெல்லாம் சாராயம் வாங்கியாந்து ஊத்திக்கினு பொம்பளைங்களுக்கு ஜாக்கெட் துண்டு வாங்கியாந்து குடுத்து…ம்…வாபஸ் பண்றதுக்கும் முடியாம போச்சி. நேரா முருகேஸýகிட்ட போய், நாங்களும் உனக்கே பிரச்சாரம் பண்றோம். ஏன் “டேய்… தோத்தறப் போறோம்னு பயந்துட்டியா?’னு கேட்குதுப்பா” கண்களைத் துடைத்துக் கொண்டார்.
வீடு நெருங்கியதும்.
“ஒரு நாலணாவுக்கு விளக்கெண்ணெய் வாங்கியாறச் சொல்லு. ஒரு தாம்புக்கயிறு இருந்தா எடுத்துக்குனு வா…” துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு துரிதகதியில் இயங்கினார்.
பசுவின் பின்கால், முன் கால் இரண்டையும் கயிற்றில் இறுக்கிக் கட்டி மெதுவாகப் பசுவைக் கீழே தள்ளினார். விளக்கெணóணெய்யை எடுத்து கன்று சுலபமாக வெளியே வருவதற்காகக் துவாரத்தில் நன்றாகப் பூசினார்.
“பொன்னியம்மா நல்லபடியா ஆயிட்டா கற்பூரம் கொளுத்தரண்டி” என்று வேண்டிக்கொண்டார். கையை உள்ளே நுழைத்து… ப்பா… சுந்தரத்துக்கு உடம்பெல்லாம் தகித்து வியர்வை கொட்டியது. பசுவின் கழுத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டிருப்பது சுந்தரத்தின் வேலை.
கன்றின் தலையை வெளியே இழுத்தாகிவிட்டது. கன்று சப்புக்கொட்டியது.
“கன்னுக்கு உயிரு இருக்குதுப்பா. நல்லபடியா முடிஞ்சுது…” வெளியே இழுத்து அதன் நாக்கை நீரால் நனைத்தார். ஆண் மகவு.
பசுவை அவிழ்த்து விட்டதும் துள்ளியெழுந்து கன்றை நக்க ஆரம்பித்தது. நாகனிடம் யாரும் பேசவில்லை.
“”ஏம்மா, மூத்திரப்பை விழுந்ததும் பின்னால கொஞ்சம் சுடு தண்ணி ஊத்துங்கோ” என்றார்.
பதóது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் சுந்தரம்.
“என்னங்கோ இது…ச்சும்” என்று மறுத்தார். “ஊருக்கு வரும்போது வந்து பாருப்பா” என்றார்.
போய்விட்டார்.
சுந்தரத்துக்கும் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாகக் கிளம்பி தெருப்பக்கம் வந்து வேகமாக நடந்தபோது சண்முக நாடார் கடையில்,
“நாலணாவுக்குக் கற்பூரம் குடு நாட்டாரே” எனறு நாகன் சந்தோஷமாகக் கேட்டது சுந்தரத்தின காதில் விழுந்தது.
அமரர் கல்கி நினைவுப் போட்டி 1985
tamilmagan2000@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? (கட்டுரை: 31) பாகம் -1
- சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்
- தாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் ?
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1
- சொல் எரித்த சொல்
- நெய்தல் இலக்கிய அமைப்பின் சு ரா விருது பரிந்துரைக்காக
- காலடியில் ஒரு நாள் ..
- கடிதம்
- மணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2
- ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்
- ஆலமரமும் வெங்காயத்தாமரையும்
- சு. சுபமுகி கவிதைகள்
- கவிதைகள்
- தாவரங்களின் தலைவன்
- ஊசி
- ஆபரணம்
- பளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…
- ” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..
- நினைவுகளின் தடத்தில் – 13
- மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)
- “ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”
- சேவை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)